சிறகடிக்க ஆசை “முத்து” திருமண கொண்டாட்டம் தொடங்கியது.. மணப்பெண் “பொன்னி”யின் க்யூட் டான்ஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்த்க்கும் விஜய் டிவியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவிக்கும் சங்கீத் பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
யாருக்கு எப்போது வாழ்க்கை மாறும் என்று தெரியாது. தன்னுடைய உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் முன்னேற்றம் கிடைக்கும் என்பதற்கு சான்றாகத்தான் தற்போது சின்னத்திரை ரசிகர்களின் மனதை வெற்றி வசந்த் பிடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் பல வேலைகளை செய்து இருக்கிறார். வாட்ச்மேனாக மட்டுமல்லாமல் திரைப்படங்கள் எடுபிடி வேலை வரை எல்லா வேலைகளையும் செய்து தான் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அதிலும் முதல் சீரியலிலே இவருக்கு தமிழ் ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுப்பார்கள் என்று அவரே நினைத்திருக்க மாட்டார்.
நடுத்தர மக்களின் கேரக்டரை அப்படியே பிரதிபலிக்கும் கேரக்டராக வெற்றி வசந்த் 'முத்து' கேரக்டரில் நடித்து வருகிறார். இதனாலேயே இவருக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதேபோலத்தான் அவருடைய வருங்கால மனைவி வைஷ்ணவியும் இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் துணை கேரக்டரில் தான் நடித்து வந்தார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இனி நடக்கப்போவது இதுதானா? லீக்கான போட்டோஸ்.. மீண்டும் முதலில் இருந்தா?
அதிலும் ராஜா ராணி சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்து வந்த இவருக்கு பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் இந்த சீரியலில் நடிக்கிறார் என்றதும் அதிகமான விமர்சனங்கள் வந்தது. அதையெல்லாம் தாண்டி தான் இப்ப வரைக்கும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல ஷார்ட் பிலிம்களிலும், விளம்பரங்களிலும் வைஷ்ணவி நடித்துக் கொண்டிருக்கிறார். வைஷ்ணவி மற்றும் வெற்றி வசந்த் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தங்களுடைய காதலை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தனர். அதிலும் உடனே எங்களுக்கு திருமணம் நடக்க போகிறது என்றும் கூறியிருந்தனர். அது போலவே காதலை அறிவித்த ஒரு வாரத்திற்குள் இவர்களுக்குள் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்தது.

திருமணம் செய்திகள் மட்டும் அப்டேட் கொடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான சங்கீத் பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அப்போது மணப்பெண் வைஷ்ணவி மற்றும் மாப்பிள்ளை வெற்றி வசந்த் இருவரும் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பங்க்ஷனில் பொன்னி சீரியல் பிரபலங்கள் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications