திருச்சியில் “சிறகடிக்க ஆசை” பிரபலங்கள்.. இருக்கிற கலவரத்தில் மனோஜ் செல்வத்தோடு செய்ததை பாருங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நடிகர்கள் மற்றும் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகர் விபீஷ் எல்லோரும் திருச்சியில் ஒரு பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக ஒரு சீரியல் பிரபலம் அடைந்து விட்டால் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது. ஆனால் அந்த சீரியல் முடிவடைந்ததால் இது யார் என்றே தெரியாமல் சிலர் காணாமல் போய்விடுகிறார்கள். ஒரு சிலர் ட்ரெண்டிங்கில் இருக்கும் சீரியலில் நடித்து வருவதால் போகும் இடம் எல்லாம் அவர்களுக்கு மரியாதை கிடைத்து வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக இருக்கிறது. இதில் நடிக்கும் நடிகர்களும் அந்த கேரக்டர் வாயிலாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அதில் முத்துவின் நண்பரான செல்வத்திற்கும் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
செல்வம் கேரக்டரில் நடிகர் பழனியப்பன் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத புகழும் பெயரும் சிறகடிக்க ஆசை சீரியலின் மூலம் கிடைத்திருக்கிறது. அதுபோல லொள்ளு சபா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பழனியப்பன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இப்போது தான் திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜ் மற்றும் முத்துவின் மாப்பிள்ளை சத்யா போன்றோர் இருக்கின்றனர். இவர்களுடைய கூட்டணியில் ஆகா கல்யாணம் சீரியல் நடிகரும் இருக்கிறார்.
இவர்கள் எல்லோரும் அந்த ஃபங்ஷனில் ஆட்டம் போட்டு அலப்பறை செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது மனோஜ் மீனாவின் நகைகளை விற்றுவிட்டு கவரிங் நகைகளை வாங்கி வைத்தது முத்துவிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என கொஞ்சம் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
முத்து, மனோஜ் தான் தப்பை செய்தது என்று குடும்பத்திடம் சொல்லப் போகிறாரா? அல்லது மனோஜும் விஜயாவும் முத்து மற்றும் மீனா மீது பழியை தூக்கி போட போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இவர்கள் கூலாக ஆட்டம் போட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களில் புலம்பி வருகிறார்கள்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications