சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென மாற்றப்பட்ட கதை! காரணம் அந்த நடிகை தானா? ரசிகர்கள் எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. ஆனால் சமீபத்தில் இந்த சீரியலில் கதை அதிரடியாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. அதை இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் கவனித்திருப்பார்கள் அது பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.
அதாவது இந்த சீரியலில் கதாநாயகன் முத்து மற்றும் மீனா இடையே இப்போது சிறு விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரை பற்றி தான் கதையில் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கும் ஆனால் இப்போது மீனாவிற்கு இந்த சீரியலில் காட்சிகள் குறைய தொடங்கி இருக்கிறது.

அதாவது சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய அம்மாவிடமிருந்து பணத்தை திருடிட்டு போனது சத்யா தான் என்ற உண்மை முத்துவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் கார் செட்டுக்கு வந்த சத்தியா சிட்டியோடு சேர்ந்து கொண்டு ரவுடிசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த முத்து தன்னுடைய நண்பனுக்காக சிட்டியை அடித்துக் கொண்டிருக்கும் போது அதற்கு சிட்டி தன்னுடைய நண்பன் சத்யாவுக்காக தன்னுடைய மாமா முத்துவை அடிக்க துணிந்து இருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே சத்யா மீது கொலைவெறியில் இருக்கும் முத்து சத்யாவின் திருடிய கையை முறித்து விட்டார். ஆனால் சத்தியா விஜயாவின் பணத்தை திருடினான் என்பதை முத்து, மீனா வீட்டில் சொல்லலாம் என்று போயிருந்த நிலையில் அங்கு மீனாவின் அம்மா சத்யா மீது வைத்திருக்கும் பாசம் மற்றும் நம்பிக்கையை பார்த்து உண்மையை சொல்லாமல் வந்திருக்கிறார்.

அதுபோல மீனாவிடவும் இந்த உண்மையை சொல்லாமல் இருக்கிறார். ஆனால் மொத்த குடும்பமும் முத்து சத்யாவை அடித்தது தப்பு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் நேற்று அதிகமாக மீனா காட்சியில் இடம் பிடிக்கவில்லை. அதுபோல இன்றைய எபிசோடில் கூட ஒரு சில எபிசோடு காட்சிகளில் மட்டும்தான் மீனா இடம் பிடித்திருக்கிறார்.
ஆனால் கதை இப்போது சம்பந்தமே இல்லாமல் ஸ்ருதி மற்றும் ரவி காதல் ட்ராக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதோடு ரவியை இந்த குடும்பத்தை விட்டு பிரிப்பதற்காக ஸ்ருதியின் அப்பா மற்றும் அம்மா முயற்சி செய்கிறார்கள். இதனால் கதை இனி வேறு பக்கமாக திரும்ப இருக்கிறது.
இதற்கு காரணம் இந்த சீரியலில் மீனாவாக நடித்துக் கொண்டிருக்கும் கோமதி பிரியா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் சிறகடிக்க ஆசை சீரியலில் டப்பிங்கில் நடித்துக் கொண்டிருப்பதால் தமிழில் அவரால் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனாலோ என்னவோ கதை வேறு பக்கமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே முத்துவை எதற்காக விஜயா மற்றும் அண்ணாமலை பாட்டி வீட்டில் சிறுவயதில் கொண்டு விட்டார்கள் என்ற உண்மை இன்னும் வெளிவராமல் இருக்கிறது. ஆனால் இப்போது அது பற்றிய ரகசியம் உடைப்படாமல் கதை வேறு விதமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கோமதி பிரியாவிற்கு சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பதற்கு சரியாக நேரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று உறுதியாக தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த சீரியலில் மனோஜ் அவருடைய பார்க் நண்பரிடம் கடன் வாங்கிய விஷயம் இன்னும் குடும்பத்திற்கு தெரியாமல் இருக்கிறது. அதுபோல ரோகினி மறைத்து கொண்டு இருக்கும் விஷயங்களும் குடும்பத்திற்கு இன்னும் தெரியவில்லை. இப்படியான நிலையில் புதியதாக ஒரு பிரச்சனையை தொடங்கி இருக்கிறார்கள். இது எப்படி போகப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications