ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும் "பேபி" ஆன ஷிவாங்கி!
சென்னை : பார்பி மேக்கப்பில் பாவாடையை தூக்கி பிடித்த படி தனக்கு பொன் நகை வேண்டாம் புன்னகை போதும் என ஷிவாங்கி நிரூபித்திருக்கிறார் .
தலையில் இரண்டு பன் கொண்டை கட்டிக்கொண்டு மீண்டும் குழந்தையாக மாறி அவர் போட்டுள்ள போட்டோ வைரலாகியுள்ளது.
மீண்டும் குழந்தையானது கூட ஓகே அதுக்காக முகத்துலேயும் அதே எக்ஸ்பிரஸனையா காட்டுவீங்க என்று ரசிகர்கள்தான் நக்கலடித்து வருகின்றனர்.

குறும்புகளின் குழந்தை
விஜய் டிவியில் தன்னுடைய ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்திக்கொண்ட ஷிவாங்கியை அவருடைய பெயரைச் சொன்னதுமே டக்கென்று ஞாபகத்திற்கு வந்துவிடும். அந்த அளவுக்கு தன்னுடைய பாட்டாலும் குறும்புகளாலும் அனைவரின் மனதிலும் குழந்தை போல வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு நிகர்
இவருடைய குரலுக்கும் சைசுக்கும் சம்பந்தமே இல்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்தாலும் அதை கண்டுகொள்வதில்லை. சிரித்துக்கொண்டே தட்டிவிட்டு சென்று கொண்டிருக்கும் இவருடைய தில்லை பார்த்து பலரும் மெய்சிலிர்த்து போயிருந்தாலும் இவருக்கு நிகர் இவர்தான். சிரித்தபபடியே கலாய்த்தவர்களை வெறுப்பேற்றுவதில் வல்லவர்

சூப்பர் சிங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7வில் பாடகியாக காலடி எடுத்து வைத்த இவர் தன்னுடைய மெய்சிலிர்க்க வைக்கும் குரலால் அனைவரையும் வசீகரித்து கவலைகளை மறக்க வைத்தவர் . ஆனால் தொடர்ந்து அவரால் அந்த சீசனில் ஜொலிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை எனது திறமையை வெளிக்காட்டி விட்டதே போதும் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இவருக்கு மீண்டும் இவருடைய கேரக்டருக்கு தகுந்த வாய்ப்பு கிடைத்தது.

கோமாளி வாய்ப்பு
இவருடைய டைமிங்கில் காமெடி செய்யும் திறமையைப் பார்த்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .இவருடைய திறமையினால் தான் இவர் முதலாவது சீசனிலும் இரண்டாவது சீசனிலும் கலந்து கொண்டு இருக்கிறார் .தற்போது இந்த நிகழ்ச்சி முடிவடைந்தாலும் இவரை இவருடைய ரசிகர்கள் அதிகமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.

போஸ்ட் எல்லாமே வைரல் தான்
இவருடைய குழந்தைத்தனமாக காமெடியையும் பேச்சுக்களையும் பிடித்துப்போன ரசிகர்கள் இவருக்கு சமூக வலைத்தளத்திலும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் . இவருடைய இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர். அதனாலேயே இவர் எந்த போஸ்ட் போட்டாலும் அது வைரலாக மாறிவிடும் .

ரசிகர்களின் மனதில் குழந்தை
தற்போது லேட்டஸ்டாக மண்டை மீது வைத்த கொண்டையோடு கலக்கலாக இவருக்கே உரிய குறும்புதனத்தோடு போட்டோவை வெளியிட்டிருக்கிறார் .இதைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இவர் கல்லூரி படிக்கும் பருவப் பெண்ணாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் குழந்தையாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார் .

ரசிகர்களின் ஆதரவு
இவர் என்ன சேட்டை செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினிடமும், புகழுடனும் செய்த குறும்புகளையும் தற்போது ரொம்பவே மிஸ் பண்ணி வருகிறோம் என கூறியிருக்கின்றனர் . ரசிகர்கள் இவருக்கு கொடுத்த ஆதரவினால் தான் இவரால் முதலாவது சீசனிலும் இரண்டாவது சீசனிலும் கலந்து கொள்ள முடிந்தது

துருதுருவென குறும்புத்தனம்
ஆனால் இன்னும் எத்தனை சீசன்கள் வந்தாலும் இவர் தொடர்ந்து வர வேண்டும் என இவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் அந்த கதையை ரசித்த ரசிகர்களை விடவும் ஜெனிலியா நடித்த ஹாசினி கேரக்டரை தான் ரசிகர்கள் அதிகமாக ரசித்தார்கள் . அந்த மாதிரி தான் தற்போது பல ரசிகர்களும் இவருடைய குறும்புத்தனத்தை ரசித்து வருகின்றனர் .

செல்லப் பெயர்கள்
ஆனாலும் இவர் போட்ட போஸ்டை பார்த்து அப்படியே பொம்மை போல இருக்கிறீர்கள் என இவரை கொஞ்சி வருகின்றனர் .இவர் நான் டுகே கிட்ஸ் என சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவரையும் சிலர் ரசிகர்கள் சூப்பரா இருக்கீங்க அக்கா என வெறுப்பேற்றியும் வந்திருக்கின்றனர் .அதுமட்டுமல்லாமல் நடமாடும் மின்னலே செல்லம்மா, பியூட்டி, அழகி, மிக்கி மவுஸ் செல்லம்மா என பல செல்லப் பெயர்களால் கொஞ்சி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications