அண்ணனோட என்கேஜ்மென்ட்டில் சிவாங்கி செய்த செயல்...அசந்து போன ரசிகர்கள்
சென்னை: சுட்டிப் பெண்ணாக சிவாங்கி தன்னுடைய அண்ணன் எங்கேஜ்மென்ட்டில் என்ஜாய் பண்ணியுள்ளார்.
சிவாங்கியின் க்யூட்டான வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் சிவாங்கி மட்டும் இப்படி இருக்கிறாரே என்று பலர் உச்சி கொட்டி வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி களில் பலருக்கும் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களை மொத்தமாக தன் பக்கம் திருப்பிய சிவாங்கி தற்போது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகள் கூட அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த மாதிரி தான் தற்போது சிவாங்கி தன்னுடைய அண்ணன் எங்கேஜ்மென்ட்டில் செய்த செயலை மீண்டும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சிறப்பு விருந்தினராக கலக்கல்
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையில் பிஸியாக இருக்கும் ஷிவாங்கி அடிக்கடி கடை திறப்பு விழாக்கள், முதல் பல காலேஜ் பங்க்ஷன் வரைக்கும் செலிபிரிட்டி ஆகவும் ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். என்ன தான் பிசியாக இருந்தாலும் நான் சமூக வலைத் தளத்தையும் விட்டு வைப்பதில்லை என்று கிடைக்கும் நேரங்களில் ஒரு சில போட்டோக்களை எடுத்து பல நேரங்களில் சமூக வலைத்தளத்தை தீ பிடிக்க வைத்து விட்டுவிடுகிறார்.

வளர்ந்த குழந்தை
ஒரு பாடகராக வேண்டும் என்று விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்து தன்னுடைய காமெடி திறமையை வெளிக் காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்த சிவாங்கியை ரசிகர்கள் பலரும் தங்களுடைய வீட்டின் செல்லக் குழந்தையாக தான் பார்த்து வருகின்றனர். இவரை ஒரு வளர்ந்த குழந்தையாக பார்த்து வரும் ரசிகர்கள் இன்னும் பல நேரங்களில் இவர் செய்யும் சேட்டைகளை ரசிக்க தவறுவதில்லை. கல்லூரி படிப்பை முடித்து தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகிகளுக்கு இணையாக காலடி எடுத்து வைத்திருக்கும் சிவாங்கி இன்னும் ஒரு குழந்தையாக ரசிகர்களுக்கு தெரிந்து கொண்டிருப்பது சிறப்பு தான்.

ட்ரெண்டிங்கில் க்யூட் வீடியோ
தற்போதைய சூழலில் ஒரு நடிகைக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்களோ அவர்கள் தான் டாப்பில் இருப்பதாக கருதப் படுகிறார்கள். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை இணைய தளத்தில் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சிவாங்கி வெள்ளித்திரை கதாநாயகிகளுககு இணையாக கலக்கி வருகிறார். அது மட்டுமல்லாமல் தற்போது ட்ரெண்டிங்கில் சிவாங்கியின் வீடியோஸ் முதலிடத்தில் வந்துகொண்டிருக்கிறது. தன்னுடைய அண்ணன் நந்தா மற்றும் சித்ரா எங்கேஜ்மென்ட்டில் கலந்துகொண்டு தனக்கே உரிய குழந்தை தனத்தோடு செல்பி வீடியோஸ் எடுத்து உள்ளார். அந்த வீடியோக்களை சிவாங்கியின் ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள். இதனைப் பார்த்து பலர் சிவங்கியின் அண்ணனுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications