அழுகாச்சி சீரியல்களுக்கு மத்தியில் சாதி ஆணவ கொலை பேசும் சிவகாமி
அழுகாச்சி சீரியல்கள், பேய்கள், பாம்புகளுக்கு மத்தியில் இப்போது கலர்ஸ் டிவி சீரியல்கள் மக்களின் கவனத்தை கவர ஆரம்பித்து விட்டன.
Recommended Video

சென்னை: சாதி ஆணவக்கொலை பற்றி பேசும் சிவகாமி சீரியலும், கறுப்பாக பிறந்த பெண் குழந்தைகளின் மனதிற்கு ஆறுதல் தரும் பேரழகி சீரியலும் இப்போது மக்களின் மனம் கவர்ந்த சீரியலாகி விட்டது.
மாமியார் மருமகள் சண்டை, நாத்தானார் குடும்பத்தை கெடுக்கும் அண்ணி என பல டிவி சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
தமிழில் பல சேனல்கள் பல உள்ள நிலையில் கலர்ஸ்டிவி தமிழில் புத்தம் புதிய சீரியல்கள் பல்வேறு கதைக்களங்களுடன் களமிறங்கியுள்ளது. அதில் இரண்டு சீரியல்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ளது.

சாதி மாறிய காதல்
கிராமத்து கதைக்களத்துடன் கூடிய சிவகாமி சீரியல், சாதி மாறிய காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சீரியல். புதுமுகங்கள் அதிகம் உள்ள இந்த சீரியலில் கிராமிய மணம் வீசுகிறது. ஜாதி பிரச்சினையை பேசுகிறது இந்த சீரியல்.

ஆணவ கொலை
தமிழகத்தில் ஆணவக்கொலைகள் நடைபெறும் இந்த கால கட்டத்தில் சாதிய மாறிய காதலையும், ஆணவக்கொலைகளையும் சித்தரிக்கிறது இந்த காதல். நெடுந்தொடர்கள் என்றாலே ஒரு வாரத்திற்கு ஒரு எபிசோடு கதையை இழுப்பார்கள். அதுபோல இல்லாமல் ஒவ்வொரு காட்சியையும் கவிதையாக கூறியுள்ளனர்.

கிராமத்து அம்மன் சிவகாமி
நடிகை நீனு கார்த்திகா நாயகியாக நடித்துள்ள இந்த சீரியல், கிராமத்தினர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் காதலர்களைப் பற்றி பேசுகிறது. பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காதலர்களை ஆணவக்கொலை செய்யத் துடிக்கும் அண்ணன்கள், அப்பாக்களின் வசனங்கள் சமீபத்தில் தமிழத்தில் ஆணவக்கொலைகளை கண்முன் கொண்டு வருகிறது.

சிறுமி போதும்பொண்ணு
பேரழகி சீரியலும் சிறுவர்களை அதிகம் கவர்ந்துள்ளது இதற்குக் காரணம் அந்த சிறுமி போதும் பொண்ணு நடிப்புதான். பாட்டியின் குத்தம் பேச்சுக்கு மனம் சுருங்குவதாகட்டும், அம்மா, அப்பாவின் அன்பில் உருகுவதாகட்டும் அருமையாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்புக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.

நடிப்பில் அசத்தல்
கறுப்பாகவும், உயரம் குறைவாகவும் இருப்பதால் தனது பாட்டியே தன்னை திட்டுகிறாரே என்று ஆதங்கப்படும் சிறுமி, தன்னுடன் படிப்பவர்கள் கேலி செய்தாலும் அவர்களுக்கு நல்லதே செய்து நட்பை சம்பாதிக்கிறார் பிபி என்ற போதும் பொண்ணு. சிறுமிக்கு ஒரே ஆறுதல் அம்மாவும், அப்பாவுத்தான்.

நிறம் அவசியமல்ல
கறுப்பாக இருப்பதற்காக கண்ணீர் வடிப்பதும், உயரமாக வேண்டி தொங்குவதும் இன்றைக்கு பல சிறுமிகள் செய்வதை கண் முன்னே கொண்டு வருகிறது. சாதிக்க உயரமோ, நிறமோ தேவையில்லை என்பதை ஒவ்வொரு எபிசோடிலும் புரிய வைக்கிறார் இயக்குநர். தன்னை சுற்றி நடக்கும் கேலியும் கிண்டல் பேச்சையும் தகர்த்து அம்மா அப்பா உதவியோடு எப்படி பேரழகி ஆகிறாள் என்று கூறுகிறது இந்த சீரியல் கலர்ஸ் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications