மஞ்ச தாலியை கழட்டாமல் மறைத்த நடிகை.. பாடகியுடன் சிவாஜி கணேசனுக்கு வந்த காதல்.. தெய்வீக நட்பு பத்மினி
சென்னை: யார் வாழ்க்கையையும் சிவாஜி கணேசன் கெடுத்தார், அழித்துவிட்டார் என்று எங்கேயுமே வரலாறு கிடையாது.. குடும்பத்தை விட்டு பிரிந்து கிடந்ததாக பல நடிகர்களை சொல்ல முடியும், ஆனால், சிவாஜியை அப்படி சொல்லவே முடியாது" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார். அத்துடன் பாடகி ரத்தினமாலாவுடன் சிவாஜிக்கிருந்த காதல் பற்றியும் கூறியிருக்கிறார்.
"சிவாஜி ஒரு சாதி வெறியர் கிடையாது.. ஆனால், குடும்ப பழக்கவழக்கம், குடும்ப கலாச்சாரம் சார்ந்த ஒன்றை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.. அதனால்தான், அவர் சார்ந்த சமூகத்திலேயே பெண் எடுத்து திருமணம் செய்தார்.. குடும்ப பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால்தான், மகன்களுக்கும் அவ்வாறே திருமணம் செய்தார்.
குடும்ப கலாச்சாரம், சமூக கட்டமைப்பு

குடும்ப கலாச்சாரத்துக்கு ஒவ்வாத விஷயம் வரும்போதுதான், மகன்களின் திருமண விஷயத்தில் கண்டிப்பு காட்டினார்.. மற்றபடி சிவாஜி, காதலுக்கு எதிரானவர் கிடையாது. சிவாஜிக்கும் காதல் இருந்திருக்கிறது. ரத்தினமாலா என்ற நாடக நடிகையுடன் காதல் இருந்தது என்று வரலாறு உள்ளது.. ரத்தினமாலா ஒரு சிறந்த பாடகியும்கூட..
அந்த காதல் திருமணம் வரையும் சென்றதாகவும் பேச்சு உண்டு.. ஆனால், சமூக வரம்பு, குடும்ப கலாச்சாரம் என்றெல்லாம் வந்ததால்தான, கமலா அம்மாளை திருமணம் செய்தார். நாடகங்களில் நடிக்கிற காலகட்டத்தில்தான் ரத்தினமாலாவுடன் சிவாஜிக்கு காதல் மலர்ந்துள்ளது. அந்த காதலை சிவாஜி எங்கேயுமே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், எம்ஜிஆர் அதைப்பற்றி ஒருமுறை கமெண்ட் அடித்ததாக இணையத்தில் படித்திருக்கிறேன்.
கிண்டலடித்த எம்ஜிஆர்
எம்ஜிஆருடன் தங்கையாக ஒரு நாடகத்தில் நடிக்கும்போது, "ரத்தினமாலா வந்தாச்சு, இன்னும் சிவாஜி வரலையா?" என்று விளையாட்டாக கேட்டாராம். அந்த அளவுக்கு கிசுகிசுக்கப்பட்டாலும், காதல் இருந்தது உண்மைதான்.
ஒருகட்டத்தில் ரத்தினமாலாவை 2வது திருமணம் செய்து கொள்ளலாம் என்று சிவாஜி முடிவெடுத்தார்.. ஆனால், ரத்தினமாலா அதை தவிர்த்துவிட்டாராம். 2வது திருமணத்தினால் சிவாஜியின் இமேஜ் பாதிக்கப்படும் என்று நினைத்தாராம்.
பத்மினியுடன் கிசுகிசு - தெய்வீக நட்பு
அதேபோல, பத்மினியுடன் சிவாஜிக்கு கிசுகிசு வந்தது.. "உங்களை பத்மினியுடன் இணைத்து கிசுகிசுக்கிறார்களே" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "எனக்கும் பப்பிம்மாவுக்கும் உள்ள உறவு, தெய்வீக நட்பு" என்று பளிச்சென பதில் தந்தார்.. அந்தவகையில், கஷ்டநஷ்டங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய நல்ல தோழியாக பத்மினி இருந்திருக்கிறார்.
ஆனால் ஒரு படத்தில், பத்மினிக்கு சிவாஜி தாலி கட்டுவதுபோல ஒரு காட்சி படமாக்கப்பட்டது.. மறுநாள் நிஜமாகவே கமலா அம்மாளுடன் சிவாஜிக்கு திருமணம் நடந்தது. ஆனால், ஷூட்டிங்கில் சிவாஜி கட்டின தாலியை பத்மினி கழட்டவில்லையாம். யாருக்கும் தெரியாமல் தன் கழுத்திலேயே கட்டி இருந்தாராம். ஒருகட்டத்தில் இது பத்மினியின் சகோதரிக்கு தெரியவர அவர் அம்மாவிடம் சொல்லி, அம்மா அட்வைஸ் செய்தபிறகுதான் தாலியை கழட்டினாராம்.
யார் வாழ்க்கையையும் கெடுக்காதவர் சிவாஜி
ரத்தினமாலா, பத்மினி இருவரிடமும் காதல் , நட்பு அல்லது அதையும் தாண்டி எதுவேண்டுமானாலும் சிவாஜிக்கு இருந்திருக்கலாம்.. பல நடிகைகளுக்கு சிவாஜி மீது காதல் வந்திருக்கலாம்.. ஆனால், குடும்ப உறவு என்று வரும்போது, தன்னுடைய மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உண்மையான நேசத்துடன் வாழ்ந்தார்.. அதற்காகவே உழைத்தார்..
யார் வாழ்க்கையையும் சிவாஜி கெடுத்தார், அழித்துவிட்டார் என்று எங்கேயுமே வரலாறு கிடையாது.. குடும்பத்தை விட்டு பிரிந்து கிடந்ததாக பல நடிகர்களை சொல்ல முடியும், ஆனால், சிவாஜியை அப்படி சொல்லவே முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications