அன்னை இல்லத்தில் சர்ப்ரைஸ்.. பைக் சாவியுடன் நின்ற சிவாஜி கணேசன்.. நடிகர் திலகம் கருமி? யாரது சொல்றது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பொறுத்தவரை, பத்திரிகையாளர்களிடம் அன்பு செலுத்தக்கூடியவர்.. அனைத்து பத்திரிகையாளர்களிடமும் நெருங்கி பழகக்கூடியவர்கள்.. அதேபோல, பத்திரிகையாளர்களும் நடிகர் திலகத்திடம் உரிமை எடுத்து பேசுவார்கள்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறுபாலு பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார். சில உதாரணங்களையும் அந்த பேட்டியில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த செய்யாறு பாலு, "அந்த காலத்தில் சண்முகம் என்ற பத்திரிகையாளர், மதி ஒளி என்ற பத்திரிகையை நடத்திவந்தார்.. முழுக்க முழுக்க சிவாஜி கணேசனுக்காக நடத்தப்பட்ட பத்திரிகை அதுவாகும்..

Television Sivaji Ganesan Annai Illam

தனிப்பட்ட நடிகருக்காக அதுவரை எந்த பத்திரிகையும் தமிழகத்தில் நடத்தப்பட்டதில்லை.. ஆனால், தன்னுடைய சொந்த செலவில் பிரிண்டிங் மிஷின் வாங்கி, அச்சுகோர்த்து, அவரே அந்த புத்தகத்தை பிரிண்ட் செய்வார். அதன் முதல் காப்பியை நடிகர் திலகத்திடம் கொண்டுபோய் தந்துவிட்டு, அதற்கு பிறகுதான், மற்ற புத்தகங்களை கடைகளுக்கு விற்பனை அனுப்புவார்.. அந்தவகையில், பத்திரிகையாளர்களுக்கும் சிவாஜி கணேசனுக்கும் இருந்த நட்பு அபரிமிதமானது.

டைமிங் பங்சுவாலிட்டி

அதேபோல அன்றைய காலத்தில் ஒரு மூத்த பத்திரிகையாளர், சிவாஜி கணேசனை பேட்டி எடுக்க நேரம் கேட்டிருந்தாராம். நடிகர் திலகத்தை பொறுத்தவரை காலையில் 7 மணி ஷூட்டிங் என்றால், 6.30 மணிக்கே ஸ்பாட்டில் இருப்பார். அந்த அளவுக்கு நேரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் தருபவர்..

திடீரென பேட்டிக்காக அந்த மூத்த பத்திரிகையாளர் நேரம் கேட்கவும், மறுநாள் 7.20 மணிக்கு அன்னை இல்லம் வீட்டுக்கு வரச் சொல்லி உள்ளார்.. 7.30மணிக்கு வீட்டிலிருந்து வெளியே கிளம்பவிருந்ததால், 7.20-க்கு 10 நிமிடம் ஒதுக்கி தந்தார் சிவாஜி.

அன்னை இல்லம் வீடு

ஆனால் மறுநாள், பலத்த மழை பெய்துள்ளது.. எனினும் சிவாஜி கணேசனை பேட்டி எடுக்க வேண்டும் என்பதால், அந்த மூத்த பத்திரிகையாளர் சேற்றில் சிக்கி, தட்டுத்தடுமாறி நடந்து வந்து கொண்டிருந்தார்.. சொன்ன நேரத்தில் பத்திரிகையாளர் வராததால், சிவாஜி உடனே காரில் கிளம்பிவிட்டார்.. அப்போதுதான் எதிரே சேற்றில் நடந்து வந்து கொண்டிருந்த பத்திரிகையாளரின் பெயரை சொல்லி அழைத்து, இந்நேரத்துக்கு வந்தால் எப்படி என்று கேட்டுள்ளார்.

உடனே அந்த மூத்த பத்திரிகையாளர், "இங்கே பாருங்க, எவ்வளவு சேறு, சகதி? கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்.. மழை மட்டும் இல்லேன்னா நான் 7.20 மணிக்கே உங்களை சந்தித்திருப்பேன் என்றாராம். இதைக்கேட்டு சிரித்து சிவாஜி, பேட்டி எடுக்க நேரத்துக்கு வர முடியாத உன்னால், மற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மட்டும் எப்படி நேரத்துக்கு கலந்து கொள்கிறாய்? என்று கேட்டாராம்..

தகப்பனாக தருகிறேன்

"இப்படித்தான் சிரமப்பட்டு சென்று வந்துகொண்டிருக்கிறேன்" என்று அந்த பத்திரிகையாளர் சொல்லவும், சரி, நாளைக்கு என்னை வந்து வீட்டில் பார் என்று சொல்லிவிட்டு சிவாஜி கிளம்பிவிட்டாராம்... மறுநாள் காலையில், வீட்டுக்கு சென்றால், ஒரு புல்லட் வண்டியின் சாவியை எடுத்து பத்திரிகையாளரிடம் தந்தாராம் சிவாஜி.. "ஒரு தகப்பனாக இதை தருகிறேன், வைத்து கொள்" என்றாராம்.

இதைக் கேட்டு பத்திரிகையாளர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய்விட்டாராம்.. இந்த நிகழ்வு சினிமா, பத்திரிகை துறைகளில் அன்று மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது. இதுபோல உரிமை எடுத்து சிவாஜி கணேசனிடம் அன்று பத்திரிகையாளர்கள் நெருங்கி பழகியிருக்கிறார்கள்.. அதேபோல கருமி என்றெல்லாம் சிவாஜியை பலரும் சொல்வார்கள்.. ஆனால் எத்தனையோ பேருக்கு மறைமுகமாக உதவியிருக்கிறார் நடிகர் திலகம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+