சிவாஜி கணேசன் காலில் விழுந்து கெஞ்சிய பிரபலம்.. நடிகர் திலகம் சத்தமில்லாமல் செய்த காரியம்.. சூப்பர்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து 'சிவாஜி கணேசன்' என்ற நூலாக சில வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் முனைவர் கா.வெ.சே மருது மோகன் எழுதியிருந்தார். இப்போது பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருதுமோகன், சிவாஜி கணேசன் பிறருக்கு செய்த உதவிகள் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.. இது நடிகர் திலகம் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.
Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருது மோகன், "தானமும் தர்மமும் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டுமே தவிர, விளம்பரப்படுத்துவதில் தனக்கு விருப்பமில்லை என்பார் சிவாஜி கணேசன்..

நேருவிடம் நிதியுதவி
60களில் மகாராஷ்டிராவில் கொய்னா அணை இடிந்துவிட்டபோது, முதலமைச்சராக இருந்த ஒய்.பி.சவானுக்கு 11 லட்சம் ரூபாயை உடனே இங்கிருந்து அனுப்பிவைத்தார் சிவாஜி கணேசன். எஸ்டி சுந்தரம் என்ற கவிஞரின் வீடு ஏலத்துக்கு வந்தபோது, ரூ.3000 வீட்டை மீட்டு தந்தார் சிவாஜி.
புயல் வந்தபோது, 1 லட்சம் உணவுப்பொட்டலங்களை காமராஜரிடம் தந்துள்ளார் சிவாஜி.. 800 மூட்டை அரிசி தந்துள்ளார்.. கிலோ கணக்கில் பால் பவுடர் வாங்கி தந்துள்ளார்..
நேருவிடம் ஏகப்பட்ட நிதிகளை தந்துள்ளார்.. சத்துணவு திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் தந்த முதல் நபர் சிவாஜிதான்.. பாகிஸ்தான் போர் சமயத்தில் நிதி திரட்டுவதற்காக தமிழகம் வந்த லால் பகதூர் சாஸ்திரியிடம், 100 பவுன் தங்க பேனாவை தந்தார் சிவாஜி.. கமலா அம்மாள், 450 சவரன் நகைகளையும் கழட்டி, லால் பகதூர் சாஸ்திரியிடம் தந்தார்.
கலைநிகழ்ச்சி நடத்தி உதவி
பராசக்தி படம் இலங்கையில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது.. அப்போதிருந்து இலங்கை மக்களுக்கு சிவாஜி உதவ தொடங்கினார்.. அங்குள்ள பிரபல மூளாய் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய சிவாஜியிடம் உதவி கேட்டுள்ளனர்.. அதற்கு சிவாஜி கணேசன், சினிமா கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சி 1954ம் ஆண்டு நடத்தி, 25 ஆயிரம் ரூபாயை மருத்துவமனைக்கு தந்தார் சிவாஜி.
அந்த மருத்துவமனைக்கு 2 வருடங்களுக்கு நானும் ராம்குமாரும் சென்றோம்.. அப்போதுதான் தெரிந்தது, மூளாய் மருத்துவமனைக்கு சிவாஜி நிதி தர வந்தபோது, ஒரு மாமரக்கன்றை நட்டுவைத்து விட்டு சென்றுள்ளார்.. அந்த கன்று இன்று ஆலமரம் போல விருட்சமாய் நிற்பதை கண்டு வியந்துபோனோம்.
சம்பளம் ரூ.32 லட்சம்
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை அரங்கேற்றம் செய்தார்.. 112 முறை நாடகத்தில் நடித்தற்கான சம்பளம் ரூ.32 லட்சம் பணத்தை, 60களில் முதலமைச்சர் காமராஜரிடம் தந்துவிட்டார்.. தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் கழிவறைகள், நாற்காலிகள், மேஜைகளை வாங்கி தருமாறு சொல்லி உள்ளார்.. அதிலும் அரசுக்கு கணக்கு காட்டப்பட்ட பணத்தையே தான, தர்மமாக தந்தார். 60களில் ரூ.32 லட்சம் என்றால்?
அன்றைய காலத்தில், சிவாஜி கணேசனின் தம்பி படித்த, திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை தந்தார்.. அதேபோல ராம்குமார் படித்த விவேகானந்தர் கல்லூரியை விரிவுபடுத்த 45 ஆயிரம் தந்தார்..
காலில் விழுந்து கெஞ்சிய பாலாஜி
நடிகர் பாலாஜி, அண்ணாவின் ஆசை என்று ஒரு படம் எடுத்தார்.. இதனால் பாலாஜியின் வீடு, நிலம் எல்லாமே ஏலத்துக்கு வந்துவிட்டது.. இதனால் சிவாஜியின் காலில் விழுந்து, தன்னை காப்பாற்றும்படி கெஞ்சிய பாலாஜி, உடனே தன்னுடைய படத்துக்கு கால்ஷீட் தருமாறு பாலாஜி கேட்கவும், அதன்படியே சிவாஜி கால்ஷீட் தந்தார்..
அதுதான் தங்கை என்ற பெயரில் படமாக தயாரானது..சிவாஜி இப்படி பாலாஜிக்கு கால்ஷீட் தந்ததுமே, விநியோகஸ்தர்கள் பலரும் பணத்தை கட்டினார்கள்.. உடனே பாலாஜியின் கடனும் தீர்ந்தது..
அந்தவகையில், 1953 முதல் 1993 வரை சிவாஜி கணேசன் செய்த தான தர்மங்கள், ரூ..310 கோடியாகும்.. 1993-லேயே ரூ.310 கோடிக்கு அவரது தானங்கள் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications