பிக் பாஸில் என்ட்ரியான சிவாஜியின் பேரன்.. முதல் நாளே மனைவி சுஜா வருணி போட்ட நெகிழ்ச்சி பதிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று வைல்டு கார்டு என்ட்ரியாக சிவாஜியின் பேரன் சிவகுமார் கலந்து கொண்டார். அவருடைய மனைவியான நடிகை சுஜா வருணி தன்னுடைய கணவர் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதில் முதலாவதாக ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.

இரண்டாவதாக அர்னவ் வெளியேற்றப்பட்டார். மூன்றாவது தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் அன்ஷிதா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்று பிக் பாஸ் அறிவித்துவிட்டார்.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல்தான். அதே நேரத்தில் இந்த சீசனில் ஆறு போட்டியாளர்கள் நேற்று வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அதில் நடிகர் சிவாஜி கணேசனின் பேரனான சிவக்குமாரும் ஒருவர். சிவகுமார் சுஜா வருணியை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
சுஜா வருணி ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான். இந்த சீசனில் ஏற்கனவே முந்தைய போட்டியாளரான ரம்யாவின் கணவரான சத்யாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவரைத் தொடர்ந்து சிவக்குமார் முந்தைய போட்டியாளரின் கணவராக கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சிவக்குமார் குறித்து அவருடைய மனைவி சுஜா வருணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் அன்புள்ள அத்தான், நல்ல காலம் இறுதியாக உதயமாகிறது. இது உங்கள் தருணம், உங்கள் மேடை மற்றும் உங்கள் கூட்டம். நீங்கள் ராக் ஸ்டாரை போல எப்படி மகிழ்விப்பது மற்றும் உற்சாகப்படுத்துவது என்பது உங்களுக்கு எப்போதும் தெரியும்.
எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் ஏற்கனவே ஒரு ஹீரோவாகி விட்டீர்கள். இப்போது மற்ற அனைவரும் அதைப் பார்க்க வேண்டிய நேரம். இது இந்த பயணத்தை தழுவி உங்களின் அனைத்து திறமைகளையும் வெளி கொண்டு வந்து ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கவும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை உலகுக்கு காட்ட இதோ all the best சிவகுமார்.
நீங்கள் எப்போதும் அவரது திறமையை பல்வேறு டிஜிட்டல் பார்த்திருப்பீர்கள். நீங்கள் எப்போதும் அவருக்கு அன்பை பொழிந்து அவருடைய திறமையை ஊக்குவிக்கிறீர்கள். இப்போது இந்த ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் அவருக்கு அனுப்பவும். மேலும் அவருக்கு வாக்களிக்க மறக்காதீர்கள்.
இந்த புதிய பயணத்தை மேற்கொள்ளும் போது அன்பின் ஒவ்வொரு துளியும் கணக்கிடப்படுகிறது என்று அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார். தன்னுடைய கணவருக்கு வாழ்த்துக்களையும், ரசிகர்களிடம் தன்னுடைய கணவருக்கு ஆதரவு கொடுக்கும்படியும் வேண்டுகோள் சுஜா வருணி வைத்திருக்கிறார்.
சிவக்குமார் பெரிய குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர் சாதாரணமானவராகத்தான் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் மக்களை கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications