எலான் மஸ்க் என் X கணக்கை பிளாக் செய்தால் கொண்டாடுவேன்.. 2 வருஷம் ஆகிடுச்சு! சிவகார்த்திகேயன் கிண்டல்
சென்னை: கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தை குறைவாக பயன்படுத்துமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதோடு எலான் மஸ்க் தன்னுடைய X தளத்தை பிளாக் செய்தால் நான் கொண்டாடுவேன் என்றும் கூறியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் இந்தய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த விழாவில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ சிவகார்த்திகேயனிடம் பேட்டி எடுத்திருந்தார். அப்போது சிவகார்த்திகேயன் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

அதில், "அதிக நேரம் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக எக்ஸ் தளத்தை முடிந்த வரைக்கும் தவிர்த்து விடுங்கள். இது என் அன்பான ஆலோசனை. இதனால் எலான் மாஸ்க் என் கணக்கை முடக்கலாம். அப்படி நடந்தால் அதுவே என்னுடைய முதல் வெற்றியாக இருக்கும். X தளத்தை விட்டு வெளியே வந்தால் எந்த பாரமும் இல்லாத சுதந்திரமான மனநிலையை உணர்வீர்கள். கடந்த இரண்டு வருடங்களாக இணையத்திற்கு தான் குறைவான நேரத்தை தான் செலவிடுகிறேன். அது உண்மையில் எனக்கு உதவியாக இருந்துள்ளது" என்று கூறி இருக்கிறார்.
அதோடு எந்த ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தாலும் அதற்காக நான் 100% என் உழைப்பை கொடுக்கிறேன். எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை வைத்து மக்களை மகிழ்விக்க தொடங்கினேன். ஆரம்பத்தில் மக்கள் என்னை தொலைக்காட்சியில் பொழுதுபோக்காளராக பார்த்தார்கள். அதையே திரையுலகில் செய்ய தொடங்கினேன்.
தொலைக்காட்சியோ, சினிமாவோ நகைச்சுவையை தான் எனது கவசமாக பயன்படுத்தினேன். அது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்பதை உணர்ந்தேன். ஆரம்பத்திலிருந்து சினிமாதான் என்னுடைய ஆசையாக இருந்தது. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தேன் அதுதான் என்னை திரையுலகில் நுழைவதற்கு வாய்ப்பு கொடுத்தது.
அதுபோல நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகர். பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் பார்த்து விடுவேன். 2006ம் ஆண்டு முதல் எந்த ஒரு படத்தையும் திருட்டு பதிப்பில் நான் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு சினிமாவை நேசிக்கிறேன் என்று பல விஷயங்களை அப்போது கூறி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 23வது படத்தில் நடித்து வருகிறார். நடிகை ருக்மணி வசந்த் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்திற்காக பெயர் இன்னும் வைக்கவில்லை. ஆனால் அதற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications