ஜனநாயகன் லீக் பற்றி தைரியமாக போஸ்ட் போட்ட சிவகார்த்திகேயன்.. ஓபனா சொல்லிட்டாரே!
சென்னை: நடிகர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படம் நேற்று மாலை இணையத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிலீசுக்கு முன்பே இந்த படம் சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் போஸ்ட் போட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் போஸ்ட்
ஜனநாயகன் லீக் பற்றி சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவில், "ஒரு படம் உருவாக பல 100 பேரின் உழைப்பு, ரத்தம், வியர்வை கலந்திருக்கிறது. தயவு செய்து பைரஸியை தவிர்த்து திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரிக்கவும். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் திறமையை மதிக்க வேண்டும், உழைப்பை மதிக்க வேண்டும், திரை உலகை மதிக்க வேண்டும் என்றும் அதில் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
ஜனநாயகன் சர்ச்சை
அதே நேரத்தில் ஜனநாயகன் படம் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்துடன் சேர்ந்து வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனைகள் காரணமாக அந்த சமயத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதனால் சொன்ன தேதியில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ரிலீஸ் ஆனது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத விஜயின் ரசிகர்கள் அந்த படத்திற்கு அதிகமான நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்து வந்தனர்.
சிவகார்த்திகேயன் பேச்சு
அதோடு சிவகார்த்திகேயனை பற்றியும் பராசக்தி படத்தை பற்றியும் அதிகமாக திட்டி தீர்த்து வந்தனர். அதனாலயே அந்த படம் பெரிதாக வெற்றியடையவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் அதற்கு பிறகு பல இடங்களில் சிவகார்த்திகேயன் விஜய் குறித்து பெருமையாக தான் பேசி இருந்தார். ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாமல் தள்ளிப் போவது குறித்து தனது வருத்தத்தையும், அந்த படம் எப்போது வரும் என்று எதிர்பார்ப்போடு தான் இருப்பதாகவும் பேசி இருந்தார்.
ஜனநாயகன் லீக் காட்சி
இந்த நிலையில் இப்போது ஜனநாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதற்கு குரல் கொடுத்திருக்கிறார். இதை பலர் விமர்சிக்கின்றனர். ஒரு சிலர் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற பலரும் இந்த படம் வெளியானதால் தங்களுக்கு எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும் ஜனநாயகன் காட்சிகளை யாரும் ஷேர் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். மேலும் இந்த பட தயாரிப்பு நிறுவனம், ஜனநாயகன் காட்சிகளை ஷேர் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்!












Click it and Unblock the Notifications