சிவகார்த்திகேயன் இசை பாரம்பரியத்தின் வாரிசு? நாதஸ்வர ஜாம்பவான் 'திருவீழிமிழலை சகோதரர்கள்' வம்சாவளி SK!
சென்னை: தமிழ் திரையுலகில் நகைச்சுவையுடன் கலந்த உணர்ச்சி படங்களால் ரசிகர்களைக் கவர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன், இன்று ஒரு திறமையான நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பெருமைக்குரிய இசை மரபின் வாரிசாகவும் திகழ்கிறார் என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த குடும்ப பின்னணி, அவரது பன்முகத் திறமைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நாதஸ்வர கலையின் தெய்வீக வாரிசு
நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்ப வம்சாவளியை அறிந்தால், ரசிகர்கள் மேலும் பெருமிதம் கொள்வார்கள். இசை உலகில் தங்கள் தெய்வீகமான நாதஸ்வரக் கலைத் திறமையால் அசைக்க முடியாத இடத்தை பெற்றிருந்த திருவீழிமிழலை சகோதரர்கள் - எஸ். சுப்பிரமணிய பிள்ளை (மூத்தவர்) மற்றும் எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை - இவர்களின் வம்சாவளியில் இருந்தே நடிகர் சிவகார்த்திகேயன் வந்துள்ளார் இன்று கூறப்படுகிறது.
கலையின் பங்களிப்பு
1900 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் நாதஸ்வர கலையை வளர்த்ததில் திருவீழிமிழலை சகோதரர்கள் அளித்தப் பங்களிப்பு மறக்க முடியாதது. நாதஸ்வரம் என்பது தமிழர் பண்பாட்டின் ஆன்மாவாக கருதப்படும் இசைக்கருவி. அதைத் தெய்வீகக் கலை அளவுக்கு உயர்த்தியவர்கள் இவர்களே என்று சொல்லலாம்.
இப்படிப்பட்ட தெய்வீகமான இசை கலை மரபிலிருந்து வந்தவர் தான் இன்று தமிழ் திரையுலகின் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராகத் திகழும் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனின் சினிமா பயோகிராஃபி
சிவகார்த்திகேயன் தனது திரைப் பயணத்தை விஜய் டிவியில் ஒரு மிமிக்ரி கலைஞராகவும், நகைச்சுவை நடிகராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் தொடங்கினார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது சுறுசுறுப்பும், இயல்பான நகைச்சுவை உணர்வும் விரைவிலேயே பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுக் கொடுத்தது.
சினிமா பிரவேசம்
2012-ல் 'மெரினா' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே', 'ரஜினி முருகன்', 'வேலைக்காரன்', 'டாக்டர்' மற்றும் 'டான்' போன்றப் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். நடிப்பைத் தாண்டி, சிவகார்த்திகேயன் ஒரு பாடலாசிரியராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும்த் தன்னை நிரூபித்துள்ளார். அவரது தயாரிப்பில் வெளியானப் படங்கள் தரமானதாகவும், புதி கலைஞர்களை அறிமுகப்படுத்துவதாகவும் அமைந்தது.

மனிதாபிமானம் மிக்க சிவகார்த்திகேயன்
சினிமாவில் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிவகார்த்திகேயன் மனிதாபிமானத்துடன்ச் செயல்பட்டு வருகிறார். அவர் திரைக்கு வந்ததிலிருந்தே, பல ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விச் செலவுகளை ஏற்று உதவி வருவதாகக் கூறப்படுகிறது. அவரது ரசிகர் மன்றங்களும் இரத்த தானம் போன்ற பலச் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கொரோனாப் பேரிடர் காலத்தில், தனதுப் பங்கிற்குப் பல லட்ச ரூபாயை நிவாரண நிதியாக அளித்து, பாதிக்கப்பட்டக் கலைஞர்கள் மற்றும் மக்களுக்கு உதவியவர் சிவகார்த்திகேயன். இசையின் ஆழமான பாரம்பரியத்தில் இருந்து வந்த சிவகார்த்திகேயன், தனதுத் தனிப்பட்டத் திறமையால் மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து, சமூகத்திலும் ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications