சிவகார்த்திகேயனை தூக்கி சாப்பிட்ட தனுஷ்? நாலாபக்கமும் குடையுதே? நடிகைகள் விவாகரத்து என்றாலே: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான்.. அவர் டிவி பிரபலமாக இருந்தவர்.. இப்போது உச்சியில் இருக்க, தனுஷூம் ஒரு காரணம்.. நாம் வளர்த்துவிட்டவர், நமக்காக படங்களை அடுத்தடுத்து செய்து தருவார் என்று தனுஷ் எதிர்பார்த்தார்.. ஆனால் சிவகார்த்திகேயனோ, தான் பெரிய ஆளாகிவிட்டோம், இனிமேல் தனுஷின் ஆதரவு தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். இதுதான் இவர்களுக்குள் கசப்புக்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார் பத்திரிகையாளர் பிஸ்மி.

குபேரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், 'நீங்கள் 4 வதந்திகளை பரப்பி என்னை காலி செய்துவிடலாம் என்று நினைத்தால் உங்களால் ஒரு செங்கல்லைக்கூட அசைக்க முடியாது. என்னுடைய ரசிகர்கள் என் வழித்துணைகள். அவர்களது கையும், ஆண்டவனின் கையும் இருக்கும்வரை நான் முன்னேறி போய்க்கொண்டே இருப்பேன் என்று பேசியிருந்தார்.

Television Sivakarthikeyan Dhanush

முதல்முறையாக தனுஷ் இப்படி ஆவேசமாக பேசியிருந்தது பலரது கவனத்தை பெற்றிருந்தது.. மேலும் சிலரோ, எப்போது பார்த்தாலும் ரஜினி போலவே பாடி லாங்குவேஜை காப்பி அடித்து பேசுகிறாரே? இதே வேலையா போச்சே? என்று சலித்தபடி, இணையத்தில் டிரோல் செய்து கிண்டலடிப்பார்கள்.

நான்கு முனை தாக்குதல்

இந்நிலையில் Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, தனுஷ் பேசியிருப்பதை வைத்து பார்த்தால், சமூக ஊடகங்களில் தனுஷூக்கு எதிரான மிகப்பெரிய நெகட்டிவ்விட்டி நடந்து கொண்டிருக்கிறது.. தனுஷை பல்வேறு விஷயங்களுடன் தொடர்புபடுத்தி, அவர்மீது தொடர்ந்து அவதூறு தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தொடர்ந்து தனுஷ் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.. சிம்பு ரசிகர்கள் மறுபுறம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்குள் என்ன மாதிரியான நட்பு உள்ளது? என்பதெல்லாம் தெரியாமல் இந்த தாக்குதல் நடந்து வருகிறது. இன்னொரு புறம் நயன்தாரா தரப்பில் தாக்குதல் நடக்கிறது. நயன்தாரா ஓபனாகவே தாக்குதல் நடத்தினார்.

சிவகார்த்திகேயன்

சினிமாவில் இம்மாதிரியான வன்மத்தாக்குதல் நடப்பது இயல்புதான்.. ஆனால், தனுஷ் ஏன் ரியாக்ட் செய்ய வேண்டும்? இதற்கு காரணம், அனைத்து வன்மத்தாக்குதல்களும் முழுக்க முழுக்க தனுஷை கேரக்டரை காலி செய்யக்கூடியதாகவே இருக்கிறது.. தமிழ்நாட்டிலேயே தனுஷ்தான் நம்பர் 1 காமுகன் என்பதுபோல சித்தரிப்பு தொடர்ந்து நடக்கிறது.

ஜெயம்ரவி-ஆர்த்தி உட்பட எந்த திரையுலகில் எந்த டைவர்ஸ் என்றாலும் தனுஷ்தான் காரணம் என்று முன்னிறுத்துகிறார்கள்.. இதெல்லாம பொறுதத்து கொள்ள முடியாமல்தான் பொங்கிவிட்டார் தனுஷ்.. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லியே, உண்மை போல பதிவு செய்ய முயற்சி நடக்கிறது. அதனால்தான் எதிர்வினையாற்ற வேண்டிய நிலைமை வந்தது.

கசப்பு வளர்ந்தது

சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான்.. அவர் டிவி பிரபலமாக இருந்தவர்.. இப்போது உச்சியில் இருக்க, தனுஷூம் ஒரு காரணம்.. நாம் வளர்த்துவிட்டவர், நமக்காக படங்களை அடுத்தடுத்து செய்து தருவார் என்று தனுஷ் எதிர்பார்த்தார்.. ஆனால் சிவகார்த்திகேயனோ, தான் பெரிய ஆளாகிவிட்டோம், இனிமேல் தனுஷின் ஆதரவு தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். இதுதான் இவர்களுக்குள் கசப்புக்கு காரணம்.

இதையும் தாண்டி வசனங்களில், தனுஷை மறைமுகமாக தாக்கி பேசினார்.. இதற்கு பிறகு தனுஷூக்கு பிடிக்காத நபர்கள் எல்லாம் ஒரே அணியில் சேர்ந்தார்கள்.. கீர்த்தி சுரேஷ், அனிருத், விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் என்று கோஷ்டி சேர்ந்தார்கள்.. இதையும் தாண்டி, நுங்கம்பாக்கத்தில் தனுஷ் ஆபீஸ் எதிரேயே, தனக்கு ஒரு ஆபீஸை திறந்தார் சிவகார்த்திகேயன்.

அனிருத் எதிரி அணி

இப்படி சிவகார்த்திகேயன் தனுஷூக்கு எதிரியாகிவிட்டதால், விக்னேஷ்சிவனும் எதிரியாகிவிட்டார். அந்தவகையில் அனிருத்தும் எதிரியாகிவிட்டார்.. தனுஷுக்கு யார் யாரெல்லாம் பிடிக்காதோ, அவர்களுடன் நெருக்கமாகிவிட்டார்.. இப்படி 4 தரப்பிலிருந்தும் தனுஷூக்கு தாக்குதல் நடக்கிறது..

இதில் யார் மீது தவறு என்று யாராலுமே சொல்ல முடியாது.. சிவகார்த்திகேயன் இடத்திலிருந்து பார்க்கும்போது அவர் சொல்லும் காரணம் சரியானதாக இருக்கலாம், அனிருத் பேசுவது சரியாக இருக்கலாம், தனுஷ் பக்கம் நின்று பார்த்தால், அவர் சொல்வதும் சரியாக இருக்கலாம்.

ரஜினியை போலவே தனுஷ் காப்பியடிப்பதாக விமர்சனம் வருகிறது.. ரஜினி போல தனுஷூக்கும் சின்ன சின்ன கண்கள் இருப்பது காரணமாக இருக்கலாம், ரஜினியுடனேயே வீட்டில் அருகிலிருந்து அவரை பார்த்தது போன்றவையெல்லாம் தனுஷூக்கு ஈர்த்திருக்கலாம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+