Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகாசியில் மாரிமுத்து படித்த கல்லூரியில் நெகிழ்ச்சி.. டவுசரில் முதல் நாள் காலேஜ்.. நண்பர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட இயக்குனரும், நடிகருமாக இருந்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

அவர் மரணம் அடைந்து சில தினங்கள் ஆனாலும் அவர் பற்றிய நினைவுகளை ரசிகர்கள் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர். அதோடு அவருக்கு பிரபலமானவர்களும் நெருக்கமான நண்பர்களும் மாரிமுத்து பற்றி பல தகவல்களை கூறி வருகின்றனர்.

Sivakasi College Heartwhelming Tribute to Actor and Director Marimuthu

அதே நேரத்தில் மாரிமுத்து சிவகாசியில் படித்த கல்லூரியில் அவருக்காக அஞ்சலி செலுத்தப்பட்டு இருக்கிறது. அப்போது மாரிமுத்து பற்றி தெரியாத ரகசியங்களை அவருடைய நண்பர் அப்போது பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி பிறகு இயக்குனராகவும் உருமாறி சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்தார். ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் பெயரும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல்தான். இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து பலருடைய பாராட்டுகளை பெற்று வந்தார். அவரே எதிர்பார்க்காத அளவிற்கு புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

Sivakasi College Heartwhelming Tribute to Actor and Director Marimuthu

மாரிமுத்து கடவுளே இல்லை என்று சொல்லி முற்போக்கு வாதியாக தான் தன்னை காட்டிக்கொண்டு இருந்தார்.. அதுபோல இறப்பு என்பது பொதுவானது அது எல்லோருக்கும் வரும் போது நாம் போய்விட வேண்டியதுதான். இருக்கிற வரைக்கும் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் நம்முடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்க வேண்டும் என்று அடிக்கடி ஒவ்வொரு பேட்டிகளிலும் சொல்லிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய ரசிகர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பிறந்த நடிகர் மாரிமுத்து சிவகாசியில் உள்ள அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் தான் தன்னுடைய பட்டப்படிப்பை படித்து முடித்து இருக்கிறார். அது பற்றி அவர் பல பேட்டிகளில் பேசியும் இருந்தார். இந்த நிலையில் அந்த கல்லூரியில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மாரிமுத்துவோடு படித்த நண்பர்களோடு சேர்ந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

Sivakasi College Heartwhelming Tribute to Actor and Director Marimuthu

அப்போது மாரிமுத்துவோடு படித்த நண்பர் ரோஸ் மதன் குமார் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். 1984 முதல் 1987 வரைக்கும் மாரிமுத்து இந்த கல்லூரியில் தான் படித்தார். மாரிமுத்து ரொம்ப பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர். சொன்னா நம்ப மாட்டீங்க, ஃபர்ஸ்ட் இயர் வரைக்கும் அவர் ஷார்ட்ஸ் அதாவது டவுசர் போட்டுட்டு தான் கல்லூரிக்கு வருவார்.

இங்கு வந்த பிறகுதான் இங்கு இருக்கும் மாணவர்களை பார்த்த பிறகு தன்னுடைய அப்பாவை கூட்டிட்டு போய் பிறகு பேண்டெல்லாம் வாங்கி போட்டுட்டு வந்தார். ஆனால் படிப்பில் கெட்டிக்காரர். முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டில் மாரிமுத்து படிப்பில் முதல் மாணவனாக இருந்தார். அவருடைய கையெழுத்து ரொம்ப அருமையா இருக்கும். அவருடைய கையெழுத்து அச்சு பதித்த மாதிரி இருக்கும்.

Sivakasi College Heartwhelming Tribute to Actor and Director Marimuthu

அவருடைய கையெழுத்தை நாங்கள் கல்லூரியில் டிஸ்ப்ளேயில் வைத்திருக்கிறோம். அவருடைய கையெழுத்து பற்றி மாரிமுத்துவின் இறப்பில் கூட வைரமுத்துவின் மகன் மதன் கார்த்திக் சில தகவல்களை சொன்னார். அதில் பத்து வயதாக இருக்கும்போது என்னுடைய தந்தையிடம் மாரிமுத்து வேலைக்கு சேர்த்தார். என்னுடைய வாழ்க்கையில் இவருடையது போன்ற கையெழுத்தை நான் பார்த்ததே இல்லை என்று சொல்லியிருந்தார் என்று அந்த நண்பர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+