என் மானத்தை வாங்கிடாதேனு கெஞ்சினேன்! சிவகுமார் சொன்ன வார்த்தை.. தலையில் அடித்து கொண்ட சூர்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கங்குவா படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவக்குமார் தன்னுடைய மகன் சூர்யாவை பற்றி பல விஷயங்களை பேசியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியான சூர்யா தலையில் கைவைத்து அடித்துக் கொள்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் படு பயங்கரமாக நடந்து வரும் நிலையில் இதற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பட குழுவினர்கள் மட்டுமல்லாமல் சூர்யாவின் அப்பா சிவகுமார் மற்றும் தம்பி கார்த்தி உட்பட அவருடைய குடும்பத்தை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

television sivakumar surya

சில மாதங்களுக்கு முன்பு கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட சூர்யா சிவகுமார் உட்பட அவருடைய குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதுபோல தற்போது மகன் சூர்யாவிற்காக கலந்து கொண்ட சிவகுமார் மேடையில் தன்னுடைய மகன் கல்லூரி பருவத்தில் செய்த சேட்டைகள் குறித்து பேசி இருக்கிறார்.

அதாவது சூர்யாவிற்கு லயோலா கல்லூரியில் பிகாம் படிக்க விரும்பி விண்ணப்பிக்க சென்றபோது ஆரம்பத்தில் சீட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு நான் சென்று பிரின்ஸ்பலை பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்டேன். அதற்கு அவர் இதுபோலத்தான் சிவாஜி கணேசன் பையன் பி காம் முடிக்காமலே பாதியிலேயே போயிட்டாரு.

இன்னும் இரண்டு பிரபலங்களின் மகன்களும் அதுபோல நடிப்பை பாதியிலே விட்டுவிட்டு சென்று விட்டார்கள். உங்க பையனும் அதுபோல செய்வான் என்று சொல்லிவிட்டார். நான் அதற்கு இல்ல சார் என்னுடைய பையன் நிச்சயம் பிகாம் முடிப்பான்னு சொல்லி சீட்டு வாங்கினேன்.

ஆனால் கடைசி வருஷத்துல நான்கு அரியர் வைத்திருந்தான். டே ராஜா மானத்தை வாங்கிடாதே என்று செஞ்சிட்டேன். எப்படியும் கஷ்டப்பட்டு படித்து பிகாம் டிகிரி வாங்கிட்டான் என்று சிவக்குமார் சொல்லிக் கொண்டிருக்க அதை சற்று எதிர்பார்க்காத சூர்யா ஐயோ மானத்தை வாங்குகிறார் என்று தலையில் கை வைத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+