எதிர்நீச்சல் "ஞானம்” வீட்டில் விசேஷம்..12 வருடம் கழித்து பிறந்த குழந்தை.. வாழ்த்த குவிந்த நடிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கேரக்டரில் நடிகர் கமலேஷ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு 12 வருடம் கழித்து பிறந்த பெண் குழந்தைக்கு இன்று பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.

இந்த விழாவிற்கு எதிர்நீச்சல் சீரியல் அணியினர் மட்டுமல்லாமல் இதுவரைக்கும் கமலேஷோடு நடித்த பல நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தையை ஆசீர்வாதம் செய்து இருக்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான கமலேஷ் தற்போது ஞானம் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலின் மூலமாக அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான்.

பல வருடங்களாக இவர் சின்னத்திரை வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போதும் பிரபலங்களோடும் தன்னுடைய குடும்பத்தோடும் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
கமலேஷ் ஜி தமிழ் டிவி சேனலில் சூப்பர் சிங்கர் செலிப்ரிட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அப்போது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து 2007 செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் கமலேஷ் தமிழ், தெலுங்கு, கன்னடா சீரியல்களில் நடித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே கிளாசிக்கல் இசையை கற்று இருக்கிறார். ஒரு நடிகராகவும், பாடகராகவும் இருக்கும் இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கேரக்டரில் அமைதியின் சொரூபமாக அண்ணன் பேச்சை எதிர்த்து பேச துணிவு இல்லாத கேரக்டராகவும் இருந்து வருகிறார்.
ஆனால் நிஜ கேரக்டரில் இவர் அந்த மாதிரி கிடையாதாம். அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு 12 வருடங்கள் குழந்தை இல்லாமல் தான் இருந்திருக்கிறது. தங்களுக்கு இனி குழந்தை இருக்குமா? இல்லையா? என்ற ஒரு கேள்வியோடு இருந்த நிலையில் தான் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தை தான் தன்னுடைய மொத்த உலகம் என்று இவரும் அவருடைய மனைவியும் கூறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று கமலேஷ் மகளான தியாவிற்கு பிறந்தநாள் பங்க்ஷன் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதற்கு அதிகமான சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் நடிகர் ராஜ்கமல், நடிகர் போஸ் வெங்கட், மற்றும் அவரது மனைவி சோனியா மேலும் எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் அனைவருமே கலந்து கொண்டிருக்கின்றனர்.
பிறந்தநாள் விழாவில் எடுத்த புகைப்படங்களை எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் அம்மாவாக நடிக்கும் நடிகை சத்யபிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதுபோல பிறந்தநாள் பங்க்ஷனில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தியா பாப்பாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications