கணவனை நினைத்து...அந்த மாதிரியே ஆகிவிட்டேன்...உருக்கமாக பதிவிட்ட கன்னிகா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கன்னிகாவின் கணவரான சினேகன் கலந்து கொண்டதால் அவரை நினைத்து பீல் பண்ணி கன்னிகா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.
Recommended Video
தன்னுடைய மலரும் நினைவுகளை மீண்டும் பதிவிட்டு கன்னிகா வெளியிட்ட ஃபீலிங் கேப்ஷனுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

முதல் சீசனில் அறிமுகம்
தற்போது வெற்றிகரமாக துவங்கியிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாடலாசிரியர் சினேகன் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஏற்கனவே பிக்பாஸ் முதல் சீசனிலும் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார். அவர்தான் அந்த சீசனில் ரன்னர் ஆக வெற்றி பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு இருக்கும் போது தான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். தற்போது அவருடைய காதல் திருமணம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

காதல் மனைவி கன்னிகா
சினேகனின் காதல் மனைவி கன்னிகாவும் திரைத்துறையை சார்ந்தவர் தான். இவர் சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவில் வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் கல்யாண வீடு சீரியல் மூலமாக சூர்யா கேரக்டரில் தன்னுடைய நடிப்பை அழகாக வெளிக்காட்டியிருந்தார். இவருடைய குடும்பபாங்கான முகத்தை ரசிகர்கள் பலர் ரசித்து வருகின்றனர். கன்னிகாவுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். கன்னிகா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
தன்னுடைய கணவரான சினேகன் எழுதிய பல பாடல்கள் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருந்து வந்ததால், சினேகன் எழுதிய பாடல்களை மீண்டும் சமூக வலைத்தளத்தில் இது சினேகன் பாடிய பாடல்கள் என்று பதிவிட்டு கொண்டிருக்கிறார். காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது இதுவரை வழியனுப்பி வைத்த கன்னிகா நிகழ்ச்சி தொடக்க நாளில் கலந்து கொண்டிருந்தார்.

அப்படியே மாறி விட்டாராம்
சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொண்டிருந்தாலும் இந்த முறை நன்றாகவே முதிர்ச்சியோடு நடந்துகொள்கிறார் என்று ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இதை நினைத்துப் பார்க்கும் போது தனக்கு சந்தோஷமாகவும் இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவர் அருகில் இல்லாததை நினைத்து வருத்தத்தோடு இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் பதிவு பட்டுள்ளார். அதில் நான் இப்போது படையப்பா நீலாம்பரி ஆக மாறி விட்டேன். 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் பீல் பண்ணாதிங்க விரைவில் வெற்றி பெற்று சினேகன் வீடு திரும்புவார் என்று கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications