நானா படேகரின் குடும்பத்தில் இத்தனை சோகமா? மனைவி யார் தெரியுமா? மகனையும் இழந்த துயரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் காலா படத்தில் வில்லனாக வந்து மிரட்டிய நானா படேகர், நேற்று (அக்டோபர் 8) மாரடைப்பால் உயிரிழந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவர் திடீரென மறைந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பலரும் தங்களுக்குப் பிடித்த காட்சிகளையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, அவர் டீ குடித்தபடி சிரிக்கும் புகைப்படங்கள், படங்களில் அவர் பேசிய வசனங்கள் எனப் பலவும் மீண்டும் வைரலாகி வருகின்றன.

திரையில் பார்த்தால் கோபமான முகம், கண்களாலேயே மிரட்டும் நடிப்பு, அழுத்தமான வசனங்கள் என்று தனக்கென ஒரு பாணியை வைத்திருந்தவர் நானா படேகர். ஆனால், திரைக்கு வெளியே அவருடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பலருக்கும் அதிகம் தெரியாது. அவருடைய மனைவி நீலகாந்தி படேகர் ஒரு நடிகை என்பதும், இருவரும் பல ஆண்டுகளாகத் தனித்தனியாக வாழ்ந்தாலும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்பதும் இப்போது மீண்டும் பேசப்படுகிறது. அதைவிட, இந்தத் தம்பதியினர் தங்களுடைய முதல் மகனைச் சிறு வயதிலேயே இழந்த துயரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

மனைவியும் நடிகை தான்

நானா படேகரின் மனைவி நீலகாந்தி படேகர் மராத்தி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்தவர். நானா படேகரைப் போலவே அவருக்கும் நடிப்பில் ஆர்வம் இருந்தது. ஆனால், அவர் ஆரம்பத்தில் வங்கி அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். வேலைக்குச் சென்று கொண்டே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். நீலகாந்தியும் நானா படேகரும் மராத்தி நாடக மேடையின் மூலமாகத்தான் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். அப்போது நானா படேகர் சினிமாவில் இன்றைக்கு இருப்பது போன்ற பெரிய நடிகராக வளர்ந்திருக்கவில்லை.

Nana Patekar Rajinikanth Tamil cinema

காதல் திருமணம்

நாடகங்களில் நடித்து வந்த காலத்தில்தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் 1978ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நீலகாந்தி படேகரைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் இருக்கிறது. அவர் இயற்பியல் படித்தவராம். ஐஐடி நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருந்தாரா. பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும், நடிப்பின் மீதான ஆர்வத்தால் நாடகத் துறையைத் தேர்ந்தெடுத்தாராம். மராத்தி நாடகங்களில் நடித்ததுடன், திரைப்படங்களிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தாராம். 1973ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில நாடகப் போட்டியில் சிறந்த நடிகைக்கான தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.

மகன் இழப்பு

திருமணத்துக்குப் பிறகு நானா படேகர், நீலகாந்தி தம்பதியினருக்கு 2 மகன்கள் பிறந்தனர். ஆனால், அவர்களுடைய முதல் மகன் துர்வாசா இரண்டரை வயதிலேயே உயிரிழந்தார். ஒரு பெற்றோருக்கு இதைவிடப் பெரிய வலி என்ன இருக்க முடியும்? குழந்தையை இழந்த அந்த அனுபவம் நானா படேகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய துயரமாக மாறியது. தனது முதல் மகன் பிறந்தபோது அவனுக்கு சில உடல்நல குறைபாடுகள் இருந்தததாக நானா படேகர் முன்பு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

பொம்மலாட்டம் முதல் காலா வரை.. மறக்க முடியாத நடிப்பு! நடிகர் நானா படேகர் யார் தெரியுமா?
அந்தக் குழந்தையை இழந்த பிறகு தான் ரொம்பவே கஷ்டப் பட்டதாகவும், அப்போது அளவுக்கு அதிகமாகப் புகைபிடித்ததாகவும் அவர் கூறியிருந்தார். முதல் மகனை இழந்த துயரத்துக்கு பிறகு, தம்பதியினரின் வாழ்க்கை எப்படி மாறியது என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் இருக்கலாம். ஆனால், அவர்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட எல்லா மாற்றங்களுக்கும் அந்தத் துயரம்தான் காரணம் என்று சொல்ல முடியாது. நானா படேகர் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உருவானதாகவே கூறியிருக்கிறார்.

Nana Patekar Rajinikanth Tamil cinema

கணவன் மனைவி பிரிவு

நானா படேகர், நீலகாந்தி இருவரும் பல ஆண்டுகளாகத் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய திருமண உறவு தொடர்ந்தாலும், தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இது குறித்து நானா படேகர் முன்பு அளித்த பேட்டியில், தானும் நீலகாந்தியும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்ததாகவும், வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். காலப்போக்கில் சரிசெய்ய முடியாத சில கருத்து வேறுபாடுகள் உருவானதால் இருவரும் விலகி சென்றதாகவும், திருமண பந்தத்தில் இருந்தபோதிலும் தனித்தனியாக வாழ்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

நானா படேகரின் மகன் மல்ஹர் படேகர் பற்றியும் இப்போது பலர் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். தந்தையின் மறைவுச் செய்தியை அவர்தான் உறுதிப்படுத்தியதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், நானா படேகர் குடும்பத்தினர் பொதுவெளியில் அதிகம் பேசாதவர்கள் என்பதால், குடும்பத்தைப் பற்றிய தகவல்கள் பலருக்கும் புதிதாக இருக்கின்றன. தமிழ் ரசிகர்களுக்கு நானா படேகர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் அவர் நடித்த ஹரிதாதா கதாபாத்திரமாக இருக்கலாம். அதற்கு முன்பே 'பொம்மலாட்டம்' படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்தி, மராத்தி படங்களில் வில்லனாக மட்டுமல்லாமல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+