பிரியங்காவின் அராஜகங்கள்..தொடரும் சேட்டைகள்...முகம் சுளிக்கும் ரசிகர்கள்
சென்னை: ஜாலியாக இருக்கிறேன் என்று விளிம்பு நிலையில் இருக்கும் போட்டியாளர்களிடம் பிரியங்கா செய்யும் செயல்கள் ரசிகர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது.
பெண்களைப் பார்த்து யார் பேசினாலும் அது பெரிய பஞ்சாயத்தில் முடியும் வார்த்தைகளை கூட இவர் சகஜமாக பேசுவதை பார்த்து இவருக்கு நெகட்டிவ் கமெண்ட் குவிந்து வருகிறது.
விளையாட்டாக இவர் செய்யும் செயல்கள் சில நேரங்களில் பலருடைய முகச்சுளிப்புக்கு ஆளாகி விடுகிறது.

ரசிகர்களின் நம்பிக்கை குறைந்து விடக்கூடாது
தான் செய்யும் ஒவ்வொரு செயல்களும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. இவர்கள் மீது தனி அபிப்பிரயம் வைத்திருந்த ரசிகர்கள் திடீரென்று அவர்கள் ரசிகர்களின் நம்பிக்கையை தகர்த்தெறியும் போது அதை பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த மாதிரி தான் தற்போது பிரியங்காவின் நிலையும் இருந்து வருகிறது. இவருக்கு இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது.

தொடரும் குற்றசாட்டுகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான நாளிலிருந்து இவர் தன்னுடைய கலகலப்பான ஜாலியான கேரக்டரால் அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு அதிகரிக்கத் தொடங்கி விட்டனர். இந்த நிகழ்ச்சி இவரால் களை கட்ட போகிறது என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது நடப்பது எல்லாம் பார்க்கும் போது அப்படி எல்லாம் நடக்குமென்று தோன்றவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். முன்பு இருந்தது தான் நடிப்பா அல்லது இப்போது செய்து கொண்டிருப்பது நடிப்பா என்று பலர் குழம்பி வருகின்றனர். தான் மட்டும் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் என்று இவர் மீது குற்றச்சாட்டுகள் வருகிறது.

எரிச்சலடைய வைக்கும் வார்த்தைகள்
தனக்கு ஜால்ரா போடும் போட்டியாளர்களை மட்டும் விட்டு விட்டு, தனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் அனைவரையும் அவரை வெறுக்க வைத்து விடவேண்டும் என்கிற பாணியில் இவர் நடந்து கொண்டிருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர். இவர் அக்ஷராவை அவர் கதை சொன்ன நேரத்தில் இருந்தே பிடிக்கவில்லை என ஒவ்வொரு இடத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் வைத்திருந்த காயினை அவரிடமிருந்து பெற்று விட வேண்டும் என்பதற்காக பிரியங்கா பேசிய வார்த்தை ரசிகர்களை எரிச்சலடைய வைத்திருந்தது. 'ஒரு பொம்பள காலையிலிருந்து காயினை ஒளித்து வைத்துவிட்டு இருக்கா அவகிட்ட இருந்து எப்படியும் வாங்கணும்' என்று இவர் பேசியது தான் பலருடைய எரிச்சலுக்கு காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குவியும் கண்டனங்கள்
நேற்றைய எபிசோட்டில் இவர் சேட்டைகளில் உச்சபட்சமாக செய்த செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வருண் அவருடைய இடத்தில் இவரை விட வேண்டும் என்றால் நாய் போல நடந்துகொள் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, இவர் நிஜ நாயைப் போலவே மாறிவிட்டார் என பலர் கூறி வருகின்றனர். நாயைப் போல நடந்ததைப் பார்த்து அபிஷேக் இந்த நாய் நல்ல புசுபுசுன்னு இருக்கு என்று நக்கல் வேற அடித்திருக்கிறார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல், நாய் கம்பத்தில் காலைத் தூக்குவது போல இவர் செய்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. பலபேர் பார்க்கும் இடத்தில் இப்படி எல்லாம் காமெடி என்கிற பெயரில் பண்ணலாமா என இவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications