அச்சச்சோ... பாரதியையும் கண்ணம்மாவையும் சவுந்தர்யாம்மா பார்த்துட்டாங்களே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் , நிறம் பற்றிய விழிப்புணர்வு, குழந்தை இன்மை பற்றிய விழிப்புணர்வை தருவதா இருக்கு.

பாரதி ஒரு டாக்டர்...தனக்கு குழந்தை பிறக்காது.. ஆனா தாம்பத்ய வாழ்க்கைக்கு குறை இல்லைன்னு அவனுக்கு தெரிஞ்சுருது.

soundarya sees barathi and kannamma jointly

இந்த உண்மையை கண்ணம்மாவின் அப்பாகிட்ட சொல்லி, கண்ணம்மாவை எனக்கு கல்யானம் கட்டி வைப்பீங்களான்னு கேட்கறான். கண்ணம்மாவின் அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்.

ஆனா, பாரதியின் அம்மா சவுந்தர்யாவுக்கு கண்ணாம்மாவை கண்டாலே பிடிக்காது. இன்னொன்னு கறுப்புன்னாலும் அவங்களுக்கு ஆகாது. அழகா இருந்தா மட்டும்தான் சவுந்தர்யா அம்மாவுக்கு பிடிக்கும்.

soundarya sees barathi and kannamma jointly

அதனால சவுந்தர்யாம்மா மிஸ் சென்னை அஞ்சலியை அகிலனுக்கு பேசி முடிக்கறாங்க. அஞ்சலி கண்ணம்மாவின் தங்கச்சி. அஞ்சலிக்கு அகிலனுடன் நிச்சயதார்த்தம் ஆகியும், பாரதி மேல ஆசைப்பட்டுக்கிட்டு இருக்கா.

soundarya sees barathi and kannamma jointly

கண்ணாம்மாவை பாரதி கோயிலில் சந்திக்கபோக, அங்கே மாயாண்டியை அனுப்பி வைக்கறாங்க அஞ்சலியின் பாட்டி. மாயாண்டிக்கும், பாரதிக்கும் சண்டை நடக்க, கத்தியை எடுத்து குத்த வர்றான் மாயாண்டி.

soundarya sees barathi and kannamma jointly

ஓடிப்போய் தடுக்கப்போன கண்ணம்மாவின் கையில் கத்தி குத்திருது. தன்னோட ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போயி கட்டு போட்டுவிட்ட பாரதி, முதன் முதலா கழுத்துல போட வேண்டிய மூணு முடிச்சியை கையில போட்டு இருக்கேன்னு விளையாட்டா சொல்றான்.

எதுக்கு குறுக்க ஒடி வர.. இப்போ பாரு கையில அடி பட்டுருச்சுன்னு சொல்றான். உங்களுக்கும்தான் நெத்தியில அடி பட்டு இருக்கு.. உங்களுக்கு வலிக்குதான்னு கேட்குறா.

soundarya sees barathi and kannamma jointly

ம்ஹூம்..இது காதல்..எனக்கு வலிச்சா என் உடம்பு தாங்கிரும் உன் உடம்பு தாங்குமா.. தாங்காது கண்ணம்மா கண்ணம்மான்னு குணா டயலாக் பேசறான்.

இப்படி பேசிகிட்டு இருக்கும் போதுதான் சவுந்தர்யா அம்மா வந்துடறாங்க.பாரதியை திட்டி, அவ கையை விடுடான்னு சொல்றாங்க. கண்ணம்மாவை வெளியில போடின்னு கத்தறாங்க. அவளும் வெளியில போறா...

பார்க்கலாம்...நிறத்தையும், குழந்தை பிறக்காத தன்மையையும் வச்சு கதையை எப்படி கொண்டு போறாங்கன்னு...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+