விநாயகர் சதுர்த்திக்கு ஜீ தமிழில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள்.. காலை முதல் மாலை வரை என்ன பார்க்கலாம்?
சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாட ரசிகர்களுக்காக Zee தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பாகும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு விருந்தை வழங்குகிறது.
அடிக்கிற வெயிலுக்கு வெளியே எங்க போக? பண்டிகை நாளிலும் வீட்டிலேயே இருக்கலாம் என்று யோசித்தால் செப்டம்பர் 14 ஆம் தேதி திங்கள்கிழமை, காலை முதல் இரவு வரை விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.

காலை பட்டிமன்றம்
காலை 9.30 மணிக்கு பிரபல பேச்சாளரும் எழுத்தாளருமான கலைமாமணி சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. "இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் பிரச்சனைகள் பெருகப் பெரிதும் காரணம் பிள்ளைகளா? பெற்றோர்களா?" என்ற சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெறும் இந்த பட்டிமன்றம், நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த கருத்துப் பரிமாற்றங்களால் அனைவரையும் கவரவுள்ளது.
ஸ்பெஷல் திரைப்படம்
அதனைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு, சந்தோஷ் ஸ்ரீராம், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் மற்றும் விடிவி கணேஷ் நடித்துள்ள Double Occupancy திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக வருகிறது. காதல், நகைச்சுவை, மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கற்பனை கலந்த இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கவுள்ளது.

பரிமளா & கோ படம் ஒளிபரப்பு
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணிக்கு, ஜெயராம், ஊர்வசி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள 'பரிமளா & கோ' திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது. கலகலப்பான நகைச்சுவை, குடும்ப பாசம் மற்றும் மனதை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கவுள்ளது.
மேலும் நாள்தோறும் ஒளிபரப்பாகும் சீரியல்களும் வழக்கம் போல ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம், முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரண்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் ரசிகர்கள் விரும்பும் சீரியல்கள் என, முழு நாளும் குடும்பத்துடன் மகிழ்ந்து ரசிக்க ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications
