நடிகையை "தொட்டதால்" நடிகருக்கு தோஷம்.. நக்மா தராத புகாரா? சிஐடி சகுந்தலா தந்த கூட்டணி மாற்றம்? நிஜமா
சென்னை: கேரளாவில் ஹேமா கமிட்டி நியமித்ததுபோலவே, தமிழகத்திலும் ஒரு கமிட்டியை நியமிக்க வேண்டும், அப்படி நியமிக்கப்பட்டு, அவர்களிடம் அதிகாரமும் தந்தால், இனி வரக்கூடிய திரைப்பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்..
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், அவர் சொல்லும்போது, "ஓய்வு பெற்ற பெண் நீதிபதி தலைமையில், கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த நீதிபதி, தன்னுடைய அறிக்கையை உடனே தாக்கல் செய்யவில்லை.

ஹேமா கமிட்டி விசாரணை
நிறைய பெண்களின் வீட்டிற்கு சென்றார்.. தேடிதேடி சென்று பாலியல் விவகாரங்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். அதன்பிறகே அவ்வளவு பெரிய அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
அதேசமயம், அந்த அறிக்கையை யாருக்கும் தெரியாமல் கடைசிவரை ரகசியம் காத்தார்.. ஒருவேளை கசிந்துவிட்டால், அதன்மூலம் ஏதாவது ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டுவிடுமே என்று பயந்தார்.
அந்தவகையில், சமூகத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும் ஹேமா கமிட்டிக்கு இருந்தது. கேரளா ஏன் நாணயமான அரசு என்றால், 7 பேர் கொண்ட தனிப்படை அது.. இவர்கள் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.. நியாயம், நீதியின் பக்கம் நின்று விசாரித்தார்கள்..
நடிகரின் தோஷம் நீங்கவிடும்
எனக்கு தெரிந்து தமிழ் நடிகர் & இயக்குனர் ஒருவர் இருக்கிறார்.. அவர் தன்னிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பயன்படுத்தி கொள்வார்.. பிறகு அந்த பெண் கிளம்பி செல்லும்போது, ஒரு புடவையை தந்து அனுப்புவார். காரணம், அப்போதுதான், தோஷம் எதுவும் தன்னிடம் அண்டாது எனபது அவரது நம்பிக்கையாகும்.. இதுக்காகவே தன் உதவி இயக்குனர் வீட்டில் நூற்றுக்கணக்கில் புடவையை வாங்கி வைத்திருக்கிறார்..
சின்னத்திரை, பெரியதிரை எதுவானாலும், விருப்பப்பட்டு உறவு வைத்தால், புகார்கள் எழ வாய்ப்பில்லை.. ஆனால், விருப்பப்படாத பெண்களை இப்படி பயன்படுத்திக் கொள்வது மோசமானது. 30, 40 வருடங்களுக்கு முன்பு, இதுபோன்ற புகார்களை காவல்துறைக்கே செல்லாமல், நடிகர் சங்கமே தலையிட்டு பஞ்சாயத்து பேசி முடித்து வைத்துவிடும்..
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
அந்த காலத்தில், இதை பற்றியெல்லாம் என்னுடைய நண்பர் ஜெயமணி என்ற பத்திரிகையாளர் பக்கம் பக்கமாக எழுதுவார். மூக்குத்தி பத்திரிகை அப்போது லட்சக்கணக்கில் விற்று தீர்ந்தது.. சினிமாக்காரர்கள் ஜெயமணியை பார்த்தாலே பயப்படுவாங்க.. அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கும், இந்த பாலியல் புகார் தொடர்புடையதுதான்.. ஆனால், அப்படி எழுதியதற்காகவே அவர் கொல்லப்பட்டார்..
ஒரு உச்சபச்ச நடிகர், அந்த படம்முடியும்வரை, நட்சத்திர ஓட்டலில்தான் நடிகையும் தங்கணும் என்பார்.. இன்னொரு நடிகர் 5 வருடத்துக்கு, நடிகையை ஒப்பந்தம் போடடுக் கொள்வார். அந்த நடிகை வேறு யாருடனும் நடிக்க கூடாது என்று லீசுக்கு அந்த நடிகையை எடுத்து கொள்வார் .
இவர்கள் எல்லாம் போகப் பொருளா? உணர்ச்சி உள்ள மனிதர்கள்தானே இந்த பெண்களும்? இதையெல்லாம் யார் தட்டி கேட்டது? எந்த ஹேமா கமிட்டி தமிழ்நாட்டுக்கு வந்தது?
டாப் நடிகர்கள் மீது புகார்
இங்கே இப்போது வந்து புகார் சொல்பவர்கள், அந்தந்த காலகட்டத்திலேயே புகாரை சொல்ல மாட்டார்கள்.. காரணம், இவர்கள் புகார் சொல்வது எல்லாமே டாப் நடிகர்களை பற்றிதான். புகார் தருவதில் அந்த காலம், இந்த காலம் என்றில்லை.. சிவக்குமார் மேல் இன்னைக்கு வரைக்கும் புகார் எதுவுமே வந்ததில்லையே ஏன்? இங்கு ஒழுக்கமானவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அன்று சிஐடி சகுந்தலா என்ற நடிகையால் பெரிய அரசியல் மாற்றமே நடந்ததாம்.. கூட்டணியே மாறியதாம்.. இந்த நேரத்தில் சில்க் ஸ்மிதா பற்றி சொல்லியாக வேண்டும்.. சில்க் மிகப்பெரிய மனிதாபிமானி.. ஆந்திராவிலிருந்து வரக்கூடிய கம்யூனிஸ்ட் இளைஞர்களுக்கு பணம் தந்து அனுப்புவார்.. "சினிமா துறையில், பெண்களுக்கு மேக்கப் போடுவதற்கு பெண்களே இல்லையே ஏன்? வெறும் ஆண்களே இருக்கிறார்கள்.. இந்த துறை ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? என்று சில்க் கேட்டிருந்தார்.
நடிகை நக்மா தந்த புகார்கள்
அந்தவகையில், சினிமா துறையில் மிகப்பெரிய வன்மம் தலைவிரித்தாடுகிறது.. நடிகர் சங்கத்திலும் ஆண்கள்தான் இருக்கிறார்கள். அன்று நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் மீதே, நடிகை நக்மா அத்தனை புகார்களையும் சொன்னார். இந்த புகார்களை எங்கே போய் விசாரிக்கிறது? ஆணையம் அல்லது அதிகார மையம் இருந்தால்தான் இதுபோன்ற புகார்களை விசாரிக்க முடியும்.
எனவே, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் ஒரு புலனாய்வு குழு அமைக்கணும்.. பணியில் இருக்கக்கூடிய 5 பெண் அதிகாரிகளை அவருக்கு கீழே நியமிக்கணும். விசாரணைக்கான முழு அதிகாரத்தையும் அவர்களிடம் தந்து, நடவடிக்கையும் உறுதி செய்யப்பட்டால், கைது நடவடிக்கைகள் ஆரம்பமாகும. ஆனால், இதில், அரசு மட்டும் தலையிடாமல் இருக்கணும். அப்படியிருந்தால், இனி வரக்கூடிய பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்" என தெரிவித்திருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications