பப்பளக்கான்னு மாறிப் போன ஸ்ரீத்து கிருஷ்ணன்.. முன்பு அழகி.. இப்ப பேரழகி!
சென்னை: சீரியலில் நன்றாக ஜொலித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று காணாமல் போவதும் புதிதான ஒன்று அல்ல இருந்தாலும் வரும்போது மாஸ் கெட்டப்பில் வருவதுதான் சில நடிகைகளின் கெத்தாக இருக்கிறது.
அந்த மாதிரி தான் தற்போது ஆயுத எழுத்து, கல்யாணமாம் கல்யாணம் சீரியல் கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருந்த ஸ்ரீத்து கிருஷ்ணன் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மீண்டும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
அதுவும் முன்னாடி இருந்ததற்கும் அழகில் பன்மடங்கு மெருகேறி போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் .அவரது புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள்.

கேரளத்து இளம் குயில்
இவர் கேரளா எர்ணாகுளத்தில் பிறந்திருந்தாலும் தமிழில் அழகாக பேசி ரசிகர்களின் மனதை லபக்கென்று பிடித்து விட்டார் .முதல் முதலில் விஜய் டிவியில் ஏழாம் வகுப்பு c' பிரிவு சீரியலில் வெண்ணிலா கேரக்டரில் நடித்து குழந்தைகளின் மனதை கவர்ந்தவர். அதன் பிறகு ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கி இருப்பார்.

செல்வி
இதற்கு பிறகு தான் இவருக்கு சீரியல் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஜீ தமிழில் மெல்ல திறந்தது கதவு சீரியலில் செல்வி கேரக்டரில் வாழ்ந்துதான் இருந்தார். ரசிகர்கள் மனதிலும் செல்வி கேரக்டரில் அப்படியே பசைபோல ஒட்டிக் கொண்டார். இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து தான் மீண்டும் ஜீ தமிழில் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

டான்ஸ் டான்ஸ்
கில்லாடிஸ் டான்ஸ்லும் தன்னுடைய நடனத்தை நிரூபித்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அதன் பிறகு கல்யாணமாம் கல்யாணம் என்னும் சீரியலில் கமலி கேரக்டரில் விஜய் டிவியில் நன்றாகவே நடித்திருந்தார். அதற்குப் பிறகும் இவருக்கு அதே விஜய் டிவியிலிருந்து தான் ஆயுத எழுத்து என்னும் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

கலக்டராக கலக்கல்
அந்த சீரியலில் இந்திரா எனும் கேரக்டரில் கலெக்டராக நடித்திருந்தார். அதன்பிறகு அந்த சீரியலின் குழுவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சீரியலில் இருந்து இவர் பிரிந்துவிட்டார். இந்த சீரியலுக்கு பிறகு இவர் தமிழில் எந்த சீரியலிலும் நடிக்க வில்லை. புது சீரியல் வாய்ப்புகள் எதுவும் வராததால் அவரது தாய்மொழியான மலையாளத்தில் அடைக்கலம் அடைந்து கொண்டார்.

தமிழையும் எட்டிப் பார்க்கிறார்
ஆனால் தற்போது மீண்டும் தமிழில் நடிப்பதற்கு வாய்ப்புக்காக இவர் இந்தப் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவருடைய புகைப்படங்களைப் பார்த்ததும் இவருடைய ரசிகர்களும் மீண்டும் எப்போது தமிழில் என்ட்ரி என்று ஆர்வமாக கேட்டு வருகிறார்கள் .அதற்கு அவரும் சீக்கிரத்தில் அது நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

இப்போது பேரழகி
அதுவும் இப்போது இவர் முன்னாடி இருந்ததற்கும் தற்போதுக்கும் நன்றாகவே மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டார். அழகில் தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் தமிழ் சீரியல்களில் வலம் வரவேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.

நயன்தாரா போல இருக்காரே
அதுவும் தற்போது இவர் எடுத்திருக்கும் புகைப்படங்களில் நயன்தாராவிற்கு டப் கொடுக்கும் அளவில் விதவிதமாக போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார். முன்னாடி இருந்ததற்கும் இப்போது உடம்பை குறைத்து அழகை மெருகேற்றி தேவதையாக ஜொலிக்கிறார். இவருடைய ரசிகர்கள் இவரை ரசித்து ரசித்து தான் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள்.

ரொம்ப அழகா இருக்கீங்க
பலருடைய எதிர்பார்ப்பு இவர் மீண்டும் தமிழில் வரவேண்டும் என்று இருந்தாலும் அதற்கான சூழ்நிலையை அமையவில்லை காத்திருங்கள் வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அவருடைய ரசிகர்களும் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். அதுவும் தற்போது இவருடைய போட்டோவை பார்த்து பல ரசிகர்களும் இவருக்கு ஒரு வாய்ப்பை சீக்கிரமாக கொடுங்கள் என்று ரெகமெண்டேஷன் பண்ணி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications