ஸ்ரீரெட்டி புகாரால் லாரன்ஸ் அரசியல் வருகைக்கு சிக்கலா? ராகவா லாரன்ஸின் உண்மை முகம் என்ன?
சென்னை: திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் தீவிர அரசியலுக்கு வரவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அவர் மீதான விளம்பர விமர்சனங்களும், நடிகை ஸ்ரீரெட்டியின் பழைய பாலியல் புகார்களும் இணையத்தில் மீண்டும் கிளறப்பட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
MEDIA CIRCLE என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "MEDIA CIRCLE என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொன்னதாவது:

ராகவா லாரன்ஸ் ஏழைகளுக்கு உதவி
"ராகவா லாரன்ஸ் ஏழைகளுக்குச் செய்யக்கூடிய நற்காரியங்களையோ அல்லது அவர் அரசியலுக்கு வருவதையோ நாம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அதற்காக அவர் தற்பொழுது கையாண்டு வரும் விளம்பர உத்திகள், அதாவது இந்த Cheap Publicities தேவையற்றவை என்ற விமர்சனம்தான் எழுந்துள்ளது.
மக்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டுப் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு லாரன்ஸ் ஏற்கனவே பொதுவெளியில் மறுப்பு தெரிவித்து, "நான் மக்களை அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, பொதுமக்களையும் ரசிகர்களையும் என் தாய்க்குச் சமமாக மதிப்பவன்" என்று மன்னிப்பும் கேட்டுவிட்டார்.
அரசியல் கட்சிக்கு வருகை
இருந்தாலும் அவர் தீவிர அரசியலில் தடம் பதிப்பதால் இனிவரும் காலங்களில் தனது சொல்லாடல்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நேர்மையான முறையில் அரசியல் செய்யட்டும். நல்ல மனிதர், அரசியலுக்கு வந்தால், நல்லது நடக்கும்.. அது லாரன்ஸ் மூலம் நடக்கட்டும். அதை வரவேற்போம். அதேசமயம் விமர்சனம் இருந்தால் அதை விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.
லாரன்ஸ் தனது அரசியல் முடிவை அறிவித்துள்ள இந்தச் சமயத்தில், கடந்த காலங்களில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அவர் மீது வைத்த பாலியல் ரீதியான 'காஸ்டிங் கவுச்' (Casting Couch) குற்றச்சாட்டுகளும் வீடியோக்களும் மீண்டும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
ஸ்ரீரெட்டி வீடியோ பேட்டி
ஸ்ரீரெட்டி தனது பழைய வீடியோ ஒன்றில் லாரன்ஸ் குறித்துப் பின்வருமாறு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். அவர், "நான் ஒருமுறை பட வாய்ப்புக்காக லாரன்ஸை சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் இருந்த அறை முழுவதும் ராகவேந்திரர் புகைப்படங்களும், மாலைகளும் நிறைந்திருந்தன. அதைப் பார்த்து அவர் ஏதோ பெரிய தியாகி, ஞானி என்று நினைத்தேன். ஆனால் அவரோ, படம் வாய்ப்பு வேண்டும் என்றால் என் கூட வந்து அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று நேரடியாகக் கேட்டார். நானும் வேறு வழியின்றி சம்மதித்தேன்" என்றெல்லாம் பேசியிருந்தார்.
ஸ்ரீரெட்டியின் இந்த வீடியோ, லாரன்ஸ் வெளியில் காட்டும் ஆன்மீக வேஷத்திற்கும் அவரது நிஜக் கேரக்டருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
ஆனால், நடிகை ஸ்ரீரெட்டி என்பவர் லாரன்ஸ் மட்டுமன்றி, சினிமா துறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட முன்னணி பிரபலங்கள் மீது இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். அவர் சுமத்திய இந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ராகவா லாரன்ஸ் இதுவரை எந்தவொரு மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை.
சினிமா பிரபலங்கள் - உண்மை என்ன
சில நேரங்களில் சினிமா பிரபலங்கள் இதுபோன்ற அவதூறுகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று கடந்து போவதுண்டு என்றும், அதேபோல்தான் லாரன்ஸும் இதைக் கடந்து போயிருக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீரெட்டி சொன்னது உண்மையா என்றே தெரியவில்லை.
ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் அதற்குள் நாம் விவாதத்திற்குச் செல்லத் தேவையில்லை. லாரன்ஸ் ஒரு நல்ல மனிதராக அரசியலுக்கு வரும்போது மலர்தூவி வாழ்த்தி வரவேற்போம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் அதே நேரத்தில், அரசியலுக்கு வரும்போது மக்களைத் தரம் தாழ்த்தி எடைபோடுவதோ அல்லது அவர்களைக் குறைவாக மதிப்பிட்டுப் பேசுவதோ அரசியல் வாழ்க்கையை ஆபத்தில் கொண்டு போய் முடித்துவிடும். எந்தவொரு சூழ்நிலையிலும் மக்களைத் தவறாகவும் தரம் தாழ்ந்தும் நினைக்கக் கூடாது என்பதை லாரன்ஸ் இந்த தெருநாய் ஒப்பீட்டு சம்பவத்தின் மூலமாக நிச்சயம் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். நிச்சயம் உணர்ந்திருப்பார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications