ஈசிஆரில் காரில் அசிங்கமாக சிக்கிய நடிகை.. ஸ்ரீகாந்த் அனுப்பிய ரூ.4.75.. யாரந்த சூப்பர் ஹீரோ: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா என்றாலே எல்லாருமே பணக்காரர்கள் கிடையாது.. இதே சினிமாவில் பலபேர் தங்களது பிள்ளைகள் கல்லூரியில் படிக்க வைக்க முடியாமல் உள்ளனர், ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாமல் உள்ளனர்.. நாலே முக்கால் லட்சத்துக்கு போதைக்கு ஸ்ரீகாந்த் பணம் தந்திருக்கிறார் என்றால், இந்த பணத்தை எத்தனையோ ஏழை பிள்ளைகளுக்கு தந்து உதவியிருக்கலாம்? என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "சினிமாவில் மட்டுமே போதைப்பொருள் நடமாட்டம் கிடையாது.. சினிமாவையும் தாண்டி, உழைப்பை குறைவாக கொட்டி, நிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய கூட்டத்தில், இதுபோன்று போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள்.

Television actor Srikanth ecr actress

மதுபானம், கஞ்சா

மதுபானம், பெண்கள், கஞ்சா என போதைகள் உண்டு.. இதில் மனைவியை தவிர்த்து மற்ற பெண்களை நா சென்றால், அதுவும் போதைப்பழக்கத்தில்தான் சேரும். சினிமாவில் ஹீரோக்கள் என்றாலே, அவர்களுக்கு தரக்கூடிய ஊதியம் என்பது, மிதமிஞ்சிய ஊதியமாக உள்ளது..

1 படம் ஹிட்டாகிவிட்டாலே அவரை பெரிய புரொடியுசர் கூட்டம் சுற்றிக் கொள்கிறது. ஆனால், போண்டா மணி போன்ற சின்ன சின்ன நடிகர்களுக்கு சம்பளம் மிக மிக குறைவாகும்.. புரொடியூசர்களிடம் மொத்த பணத்தையும் வாங்கி கொண்டு, சிலர் போதையில் விழுந்து கிடப்பார்கள்..

அதிலும், பெரிய நடிகர்கள், இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? ஷூட்டிங்கும் சரியாக வருவதே கிடையாது.. இவர்களை நம்பிய பல தயாரிப்பார்கள் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு சென்றுவிடுகிறார்கள்.. சில தயாரிப்பாளர்கள் இறந்தேவிட்டனர்.. அந்த அளவுக்கு சில நடிகர்களை போதை திணறடிக்கிறது. போதை எந்த வடிவத்தில் இருந்தாலும், அது தவறுதான்.

கொகைன் போதைப்பொருள்

பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் இப்படி போதையில் விழுந்துவிடுகிறார்கள்.. அதிலும் தற்போது கொகைன் என்ற போதைப்பொருள் பெரிதாக பேசப்படுகிறது.

தற்போது ஸ்ரீகாந்த் விவகாரத்தை பொறுத்தவரை, சினிமா பாப்புலாரிட்டி வந்தபிறகு பெரிய குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.. அவருக்கு கல்லூரிகள் சொந்தமாக உள்ளதாகவும் கேள்விப்பட்டேன். ஸ்ரீகாந்த் கைதாகி உள்ளார்.. இந்த போதை விற்பனையில், மிகப்பெரிய அரசியல்

செல்வாக்குள்ள பிரதீப் என்பவர் இருந்துள்ளார்.. கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் இதனை சப்ளை செய்துள்ளார்.. ஜிபே மூலம் ரூ.4.72 லட்சம் கொடுத்து போதைப்பொருளை ஸ்ரீகாந்த் வாங்கியிருக்கிறார், அதை முழுவதையும் ஸ்ரீகாந்தே பயன்படுத்தியிருப்பார் என்று சொல்ல முடியாது. ஒருவேளை ஸ்ரீகாந்த் ஏஜெண்ட் போல செயல்பட்டிருப்பாரா? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும்.

ஏஜெண்ட் போலவா?

போதைக்கு அடிமையான குடிகாரர்களை, மனைவிமார்கள் விரட்டியடிக்க வேண்டும்.. குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை அனுமதிக்கவே கூடாது. பாட்டில் சரக்குக்கே இப்படியான நடவடிக்கை தேவை என்றால் கொகைன் போன்ற போதைக்கு உள்ளாகுபவர்களை கடுமையாக எச்சரிக்க வேண்டும். கொகைன் போன்ற போதையை பயன்படுத்துபவர்கள், தங்களையே மறக்கிறார்கள்.. இவர்கள் எந்த குற்றத்தையும் செய்வார்கள்..

அதிமுக ஆட்சி காலத்தில் பிரபலமான நடிகை ஒருவர், கொரோனா காலகட்டத்தில்
பாண்டிச்சேரியிலிருந்து சரக்கு கொண்டு வந்தார். உடனே வழியிலேயே
அந்த சரக்கு பொருட்களை போலீசார் பிடித்துவிட்டார்கள்..

டிரைவர் மீது வழக்கு

ஆனால், நடிகை மீது எந்த வழக்கும் பதியப்படாமல், காரை ஓட்டிவந்த அந்த டிரைவர் மீது வழக்கு பதியப்பட்டது.. அந்த நடிகைக்கு அரசியல் பின்புலம் இருந்ததால், எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் விட்டுவிட்டார்கள்.. இத்தனைக்கும் அந்த நடிகை, அதிமுகவை சேர்ந்தவர் கிடையாது. அதைவிட கொடுமை என்னவென்றால், அதிமுக ஆட்சியின்போது பிடிப்பட்ட அந்த நடிகை, அதிமுக சேலையை கட்டி, வெப்சீரிஸ் ஒன்றில் நடித்தவர் ஆவார்..

இப்போது ஸ்ரீகாந்த் கைதாகி இருப்பதே மிகப்பெரிய விஷயம்.. இந்த விஷயத்தில் திமுக, அதிமுக என்ற அரசியல் பேதம் கிடையாது.. ஒருவர் மீதான குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.. ஏழை பாளைகள் மீது பாயும் சட்டம், குற்றம் செய்த அனைவர் மீதும் பாய வேண்டும்.

கொடூர போதைகள்

சாதாரண குடிகாரனின் குடும்பமே நாசமாகும்போது, கொகைன் என்ற கொடூர போதையை பயன்படுத்தும் நபர்களையும், அதை சப்ளை செய்தவர்கள், விலைக்கு வாங்கியவர்கள், உபயோகிப்பவர்கள் என அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சினிமா என்றாலே எல்லாருமே பணக்காரர்கள் கிடையாது.. இதே சினிமாவில் பலபேர் தங்களது பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்க முடியாமல் உள்ளனர், ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாமல் உள்ளனர்.. நாலே முக்கால் லட்சத்துக்கு போதைக்கு ஸ்ரீகாந்த் பணம் தந்திருக்கிறார் என்றால், இந்த பணத்தை எத்தனையோ ஏழை பிள்ளைகளுக்கு தந்து உதவியிருக்கலாம்? ஸ்ரீகாந்த் போல பல காந்த்கள் உண்டு.. அனைவருமே கண்டிப்பாக சிக்குவார்கள்.. பல ஸ்டார் நடிகர்களும் சிக்குவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+