என் படத்தை பார்த்து அப்பா சொன்ன வார்த்தை.. சித்தி “ஸ்ரீதேவி” செய்த உதவி.. இயக்குனர் ஹரி மகன் ஓப்பன்
சென்னை: இயக்குனர் "ஹரி"யின் மகன் "ஸ்ரீ ராம் ஹரி" "ஹம் (Hum)" என்ற ஷார்ட் பிலிம் எடுத்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அது அதிக அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் எப்படி இயக்குனராகவும் நடிகராகவும் மாறினேன் என்பது பற்றி ஸ்ரீராம் ஹரி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் ஸ்ரீராம் ஹரி லயோலா காலேஜில் விஸ்காம் கடைசி ஆண்டு தான் படித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும்போது இவர் சினிமாவில் எப்படி களம் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார் என்பது பற்றி அவர் பேசுகையில், சின்ன வயதிலிருந்து நான் அப்பாவோடு சூட்டிங் எல்லாம் போயிருக்கிறேன். அங்கு நடக்கும் விஷயங்களை எல்லாம் நான் பார்த்து கவனித்து இருக்கிறேன்.

அது போல் படம் பார்க்க வேண்டும் என்று வீட்டில் எப்போ சொன்னாலும் எங்க அப்பா, அம்மா வேண்டாம் என்று சொன்னதே கிடையாது. அப்பா அம்மா இரண்டு பேருமே ரொம்ப ஃப்ரெண்ட்லி டைப். சினிமாவில் எனக்கு ஆர்வம் இருந்ததால்தான் லயோலா கல்லூரியில் நான் விஸ்காம் சேர்ந்தேன். என்னுடைய விருப்பத்திற்கு எப்பவுமே அப்பாவும் அம்மாவும் தடை சொல்ல மாட்டாங்க.
உனக்கு பிடித்திருந்தால் அதை செய் என்று என்கரேஜ் தான் பண்ணுவாங்க. என் மேல அவ்ளோ நம்பிக்கை வைத்து துணை நிற்கிறாங்க. அதனாலையே நானும் என்னுடைய அப்பா அம்மாவுக்கு எப்பவுமே உண்மையாகவும், நன்றியோடு இருக்கணும் என்று நினைக்கிறேன். அது போல் நான் குறும்படம் இயக்குவது முதல் முறை கிடையாது. சின்ன வயதிலிருந்து நிறைய எடுத்து இருக்கிறேன். அதை அப்பா அம்மாவிடம் காண்பித்து இருக்கிறேன்.
அதனால் அவர்களுக்கு இந்த படம் பெரிய அளவில் சர்ப்ரைஸ் கிடையாது. ஆனால் நான் ஹம்(hum) திரைப்படத்தை எடுத்து முடித்ததும் அப்பாவிடம் காண்பித்தபோது அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதை youtube-ல் வெளியிட வேண்டாம், அதுக்கு மேல ட்ரை பண்ணு என்று சொன்னார். இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடிக்க எனக்கு ஒரு வாரம் ஆனது. அதற்குப் பிறகு அந்தப் படத்தை இரண்டு வாரத்திற்கு எடுத்து முடித்து விட்டோம்.
ஆனால் அப்பா உதவி இல்லாமல் ஓடிடியில் கொண்டு வருவதற்காக ட்ரை பண்ணுனோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் நாங்க youtube இல் வெளியிட்டோம். உண்மையிலேயே என்னுடைய படத்திற்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. வீடியோ பப்ளிஷ் ஆனதுமே ஒரு லட்சம் வியூஸ் நெருங்கி விட்டது. நிறைய பேர் எங்களை வாழ்த்தியது மட்டுமல்லாமல் நான் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி இருந்தார்கள்.

அடுத்த முறை அந்த தப்பு எல்லாம் சரி பண்ணிக்குவேன். அதுபோல இவரிடம் பணம் இருக்கு, அதனால் இந்த படத்தை ஈஸியா எடுத்து இருக்காங்க என்று சிலர் சொல்றாங்க. ஆனால் அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. என்னுடைய கிளாஸ் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து தான் அவங்க கையில் இருக்கிற காசை போட்டு தான் இந்த படத்தை எடுத்தோம். இந்த படம் உருவாவதற்கு மொத்த டீம் பிரண்ட்ஸ் மட்டும்தான். எங்களுடைய எல்லாருடைய உழைப்பு இல்லை என்றால் இந்த படம் கிடையாது.
நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவன் என்று வெளியே தெரியலாம் ஆனால் இந்த படம் உருவாகுவதற்கு என்னுடைய பிரண்ட்ஸ்களுடைய உழைப்பு தான் காரணம். அதுபோல என்னுடைய சித்தி ஸ்ரீதேவியிடம் நான் நடிக்க கேட்டதுமே அவங்க சரி என்று சம்மதிச்சுட்டாங்க. அவங்க இந்த படத்தில் நடிக்கலன்னா இவ்வளவு ரீச் ஆகி இருக்குமானு தெரியல. அதனால சித்திக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் ஸ்ரீராம் ஹரி பேசியிருக்கிறார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications