ஓணம் பண்டிகையில் குழந்தையின் பெயரை அறிவித்த சன் டிவி சீரியல் ஜோடி! ரசிகர்களிடம் வைத்த வேண்டுகோள்
சென்னை: தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஸ்ரீதிகா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில், குடும்பத்தின் பொறுப்புகளைத் தன்னுடைய தோளில் சுமந்து, அனைவரிடமும் பாசத்துடன் நடந்து கொள்ளும் ஒரு குடும்பப் பெண்ணாக நடித்து, ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தார். நடிப்பு மட்டுமல்லாமல், சின்னத்திரை தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இவர் சீரியல் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

நாதஸ்வரம் தொடருக்குப் பிறகு, குலதெய்வம் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்தாலும், ரசிகர்களின் மனதில் அவர் ஒரு பொறுப்பான குடும்பப் பெண்ணாகவே நிலைத்துவிட்டார். சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடித்த வேங்கை திரைப்படத்தில் கூட தனுஷின் தங்கை கேரக்டரில் நடித்திருப்பார். அதுபோல வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல நடிகைகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு குடும்ப நண்பர் ஒருவரோடு திருமணம் நடைபெற்றது.
ஆனால் திருமணம் நடைபெற்ற ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட இருவரும் மனப்பூர்வமாக பேசி பிரிந்திருக்கின்றனர். அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து கல்யாணப்பரிசு சீரியலில் ஜோடியாக நடித்த நடிகர் ஆரியனை காதலித்து இரண்டாவதாக திருமணமும் செய்து இருக்கிறார். அதுபோல ஆரியனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான்.
சன் டிவியின் நாயகன் ஆரியன்
நடிகை ஸ்ரீதிகாவின் கணவர் ஆரியன், தமிழ் சின்னத்திரை உலகில் பிரபலமான ஒரு நடிகர். சன் டிவியில் பல சீரியல்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர். குறிப்பாக, அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடைய தனித்துவமான நடிப்பு மற்றும் கம்பீரமான தோற்றம் அவருக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத்தந்துள்ளது.
சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தாலும், சின்னத்திரையில்தான் ஸ்ரீதிகாவுக்கும், ஆரியனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் ஒரே துறையில் இருப்பதால், ஒருவருக்கொருவர் நன்றாகப் புரிந்துகொண்டனர். ஸ்ரீதிகா தன்னுடைய வாழ்க்கையில் சில கடினமான காலகட்டங்களைச் சந்தித்தபோது, அவருக்கு ஒரு பெரிய ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருந்தது ஆரியன்தான். அவருடைய அன்பு, பொறுமை, மற்றும் புரிதல் ஆகியவை ஸ்ரீதிகாவின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தன. இருவரும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பிறகு, தங்கள் காதலைத் திருமணம் மூலம் உறுதிசெய்துகொண்டனர்.
முதன்முறையாக குழந்தை முகம்
திருமணத்திற்குப் பிறகு, இந்த நட்சத்திரத் தம்பதியினருக்குச் சில மாதங்களுக்கு முன்பு, அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும், தங்கள் குழந்தையின் புகைப்படத்தை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிராமல் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று முதன்முறையாகத் தன்னுடைய குழந்தையின் முகத்தை இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் வெளியிட்டு, அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர். அந்த வீடியோவில், ஸ்ரீதிகா, ஆரியன் மற்றும் அவர்களின் அழகான குழந்தை என மூவரும் சேர்ந்து இருக்கும் படம் உள்ளது. குழந்தையும் மிகவும் க்யூட்டாக, பெற்றோரைப் போலவே அழகாக இருக்கிறது.
இந்த ரீல் வீடியோவுடன், தங்கள் செல்ல மகளுக்கு "லக்க்ஷிகா ஆரியன்" என்று பெயர் வைத்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் எனப் பலரும் கொண்டாடி வருகின்றனர். ஸ்ரீதிகாவின் இந்த மகிழ்ச்சியான தருணத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஒரு குடும்பத்தின் அன்பையும், பொறுமையையும் திரையில் காட்டி வந்த ஸ்ரீதிகா, இப்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு அம்மாவாகியிருப்பது, அவருடைய ரசிகர்களுக்கு ஒரு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதோடு ஸ்ரீதிகா வெளியிட்ட பதிவில் "இந்த சிறப்பு நாளில் எங்கள் குட்டி இளவரசி லக்ஷிகா ஸ்ரீயை சமூக ஊடக உலகிற்கு அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவளை ஆசீர்வதிக்கட்டும் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள். வெற்றி மற்றும் சேமிப்பு நிறைந்த மற்றொரு ஆரோக்கியமான வருடம் நம் அனைவருக்கும் அமையட்டும். நீங்கள் எங்களுக்கு அளித்து வரும் மகத்தான ஆதரவுக்காக உங்கள் அனைவரையும் மனதார நேசிக்கிறோம். எங்களுக்கு கொடுத்த ஆதரவை போல எங்களுடைய மகளுக்கும் உங்களுடைய ஆசிர்வாதம் தேவை" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications