கால் மேல் கால் போட்டு.. கன்னத்தில் கை வைத்து.. கலக்கிய மலர்.. அப்படியே இருக்காங்க!
சென்னை: கால் மேல் கால் போட்டு கன்னத்தில் கைவைத்தபடி கலக்கலாக ஒரு போஸ் கொடுத்துள்ளார் நாதஸ்வரம் "மலர்" ஸ்ரிதிகா.
அவரது படத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போன ரசிகர்கள், அடடா இத்தனை வருஷத்துக்கு பிறகு அப்படியே திரும்பி வந்துட்டீங்களே என்று உருகி வழிகிறார்கள்.
பாவாடை தாவணியில் பல வருடங்களுக்குப் பிறகும் அதே பொலிவுடன் கெத்தாக அமர்ந்து சிரிப்பால் மயக்குகிறீங்களே என்றும் ரசிகர்கள் கேட்கிறார்கள்.

சின்னத்திரை மலர்
சின்னத்திரையில் ஒரு சீரியலை பல வருடகாலமாக ஒளிபரப்பி ரசிகர்களின் மனதில அந்த சீரியலின் பெயரைச் சொன்னதுமே நடிகைகள் நினைவிற்கு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு பல வருடங்களாக நம்முடன் ஒன்றிப் போன ஒரு சீரியல்தான் நாதஸ்வரம். இந்த சீரியலில் நடித்து மலர் கேரக்டரில் நடித்து இப்ப வரைக்கும் மலர் ஆகவே ரசிகர்களின் மனதில் சொல்லிக் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரிதிகா.

ரொம்ப நாளாச்சு
இவர் தற்போது சீரியல்களில் காணப்படவில்லை. அவரைக் காணாமல் தவித்து வந்த ரசிகர்கள் இணையதளத்தில் இவருடைய போட்டோவை பார்த்து ஸ்வீட் ஷாக் ஆகி இருக்கின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாதஸ்வரம் சீரியல் தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. 2015 வரை இந்த சீரியலில் மலர் கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் மனதில் மலர் ஆகவே வாழ்ந்து வந்த ஸ்ரிதிகா அதற்குப் பிறகு பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இதுவரை அனைவரும் மலர் என்று தான் அழைத்து வருகின்றனர்.

அறிமுக கலசம்
ஆனால் இவர் முதன்முதலில் 2008ம் ஆண்டு கலசம் சீரியல் அறிமுகமாகியிருக்கிறார் அதற்குப்பறகு கோகுலத்தில் சீதை, மாமியார் தேவை, உறவுகள், சங்கம், வைதேகி,குலதெய்வம், என் இனிய தோழியே, கல்யாணமாம் கல்யாணம், காதல் பரிசு, மகராசி என பல் பல்வேறு சீரியல்களில் நடித்து இருக்கிறார். ஆனாலும் இவருக்கு சீரியல் ரசிகர்களின் மத்தியில் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது நாதஸ்வரம் சீரியல் தான்.

டிரிம்மாகிட்டாரே
திருமணம் முடிந்த பிறகு கொஞ்ச நாட்களாக சீரியலில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து பழைய மலராக போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அதுவும் பாவாடை தாவணியை பல வருடங்களுக்குப்பிறகு அணிந்திருந்தாலும் இவருடைய வாசமும் பாசமும் மாறவில்லை என இவருடைய ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

எல்லோருக்கும் பிடிச்ச மலர்
இந்த உடையில் இவரைப் பார்த்ததும் மலரின் ஞாபகம் தான் பலருக்கும் வருகின்றதாம். திரைப்படத்தில் மலர் டீச்சர் பேமஸ் ஆனது போல நாதஸ்வரம் மூலமாக மலரும் ரொம்பவே பேமஸ் ஆகி விட்டார். சீரியலில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரை இலையும் டாப் ஹீரோயினகளுக்கு தங்கச்சி ஆகவும்
சைடு கேரக்டரில் ஒருசில சீன்களில் வந்தாலும் அதிலேயும் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார்.

வெண்ணிலா கபடி குழு
தனுஷின் தங்கச்சியாக இவர் நடித்து பல ஆண்களின் ஆண்களுக்கு இப்படி ஒரு தங்கச்சி நமக்கு கிடைக்க கூடாதா என ஏங்க வைத்து விட்டார். வெண்ணிலா கபடி குழு படத்தில் பாவாடை தாவணியில் பவ்யமாக வந்து ஹீரோக்களுக்கு விருந்து உபசரித்து, இப்படி ஒரு பெண் நமக்கு இருக்க கூடாதா என்று உருக வைத்து விட்டார். எப்போதுமே உடைக்கு மேட்சாக சிம்பிளாக ஜுவல்ஸ் அணிந்திருந்தாலும் உடைக்கு மேட்சாக அணிந்து ரசிகர்களின் மத்தியில் உடை நேர்த்தியிலும் அழகாக வருபவர் ஸ்ரிதிகா.

மேட்ச்சிங் வளையல்
தற்போது பாவாடை தாவணிக்கு மேட்சாக கையால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்து கொண்டு காலையில் குட்மார்னிங் சொல்லி ரசிகர்களுக்கு புத்துணர்வு தந்திருக்கிறார். இப்படி ஒரு அழகான குட் மார்னிங் கிடைக்கும் என்று தெரிந்தால் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடக்க ஆரம்பித்து விடுவார்கள் போல. அதனால் தான் இவரின் காலை குட் மார்னிங் சொன்ன சிறிது நேரத்திற்குள் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு குட் மார்னிங் என்றும் ஹாட்டின்களையும் அனுப்பி வருகின்றனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications