ப்பா.. இவ்வளவு அழகா இருக்காங்களே சுருதி.. வச்ச கண் வாங்காமல் ரசிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை சுருதி ராஜுக்கு வயதே ஆகாதா என்று ரசிகர்கள் பலரும் அங்கலாய்க்கின்றனர். அவ்வளவு அழகாக இருக்கிறாரம்.
வயது எத்தனை ஆனால் என்ன என்னுடைய புன்னகையும், அழகும்தான் எனது சொத்து என்று சொல்லாமல் சொல்கிறார் சுருதி.
நீண்ட காலத்திற்கு முன்பு விஜய்யுடன் நடித்தவர் சுருதி. இப்போது டிவி சீரியல்களில் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்.

பேருக்கு தகுந்த மென்மை
மயில் போல அழகு ன்னு சொல்லுவாங்க. ஆனா அந்த மயில் கூட இவரைப் பார்த்தால் பொறாமைப்படும் போல என்று கூறுகிறார்கள் ரசிகர்கள். சுருதி ராஜ் போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள்தான் ரசிகர்களை ஈர்த்து வசீகரித்துள்ளது. ரசிகர்கள் உருகுவதைப் பார்த்தால் இன்ஸ்டாகிராமே வெட்கப்படும் என்று தெரிகிறது. அந்த அளவுக்கு கமெண்ட்டுகளில் அவரை வர்ணித்துத் தள்ளுகின்றனர் ரசிகர்கள்.

ஜொலிக்கும் புன்னகை
சீரியலில் காலடி எடுத்து வைத்து எத்தனை வருடம் ஆனாலும் இப்பவும் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருப்பவர் சுருதி. இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் தொடங்கி இப்போ சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் வரைக்கும் தன்னுடைய இயல்பு மாறாமல் அதே நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் சீரியல் பார்ப்பது நடிகைகள் போட்டு வரும் ஆடைகளையும் அவர்களுடைய ஸ்டைலையும் பார்ப்பதற்காக தான்.

பக்கத்து வீட்டு பெண் போல
ஆனால் சுருதி எல்லா சீரியலுக்கும் ஒரே ஹேர்ஸ்டைலோடு வந்தாலும் உடையில் மட்டும் நேர்த்தியை தவறாமல் கடை பிடித்து விடுகிறார். இவருடைய பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அமைப்பை பார்த்து தான் இவருக்கு தமிழ், தெலுங்கு ,கன்னடம் மலையாளம் போன்ற எல்லா மொழிகளிலும் இருந்து நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவரும் தன்னுடைய திறமைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் நன்றாகத்தான் பயன்படுத்தி வருகிறார்.

அழகில் அழகு ராணி
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் மாண்புமிகு மாணவன் படத்தில் விஜயின் தங்கச்சியாக நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு இவருக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது எல்லாமே சீரியல்தான். தென்றல், திருமதி செல்வம், அலுவலகம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், தாலாட்டு, அழகு என பல சீரியல்களில் கதாநாயகியாக கலக்கியிருக்கிறார்.

செம போட்டோஷூட்
இவருக்காக கதை எழுதப்படுகிறதா இல்லை அந்தக்கதை இவருக்கு செட்டாகி விடுகிறதா என புலம்பும் வகையில் இவர் நடிக்கும் கேரக்டர் எல்லாமே வேற லெவலில் ரசிகர்களிடம் ரீச் ஆகிவிடுகிறது.
என்னதான் இவர் சீரியலில் பிசியாக இருந்தாலும் ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதிலும் போட்டோ ஷூட் எடுப்பதிலும் அதீத பிரியத்துடன் தான் இருந்து வருகிறார். அதனால்தான் தான் எடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார் .

வண்ண மயிலாக சேலையில்
இவருடைய போஸ்ட் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கமெண்டுகளில் அன்பை பொழிந்து லைக் பட்டனை தேய வைத்து வருகின்றனர். பலர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டிருக்கும் போது இவர் மட்டும் சிம்பிளாக புடவை கட்டி இப்படியும் ரசிகர்களை கவர முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் புடவை போட்டோ ஷூட்டில் மயில் வண்ண கலரில் சேலையில் அப்படியே பார்த்தவர்கள் விழி அசைக்க மறந்து போய் பார்த்த வண்ணமே இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications