நடிகர் அர்னவ் மீது மதமாற்ற புகார் கொடுத்த நடிகை திவ்யா ஸ்ரீதர்.. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சிக்கல்
சென்னை: நடிகை திவ்யா ஸ்ரீதரை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தி ஏமாற்றியதாக சீரியல் நடிகர் அர்னவ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்பது குறித்து விசாரிக்க காவல் நிலைய ஆய்வாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் மகராசி சீரியலில் நடித்திருந்தார். அதிலிருந்து விலகி தற்போது சன் டிவியில் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார். இவரும் சீரியல் நடிகரான அர்னவ்வும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து லிவ் இன் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அர்னவ் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திவ்யா முஸ்லீமாக மாறினால்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என அர்னவ் கூற, திவ்யாவும் முஸ்லீம் மதத்திற்கு மாறினார்.

முஸ்லீம் முறைபடி
இதையடுத்து இருவருக்கும் முஸ்லீம் முறைப்படியும் இந்து முறைப்படியும் திருமணம் நடந்து முடிந்தது. திவ்யா 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பு புகாரை கூறினார். அதில் செல்லம்மா சீரியல் நடிகரும் தனது கணவருமான அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துகிறார்.

வயிற்றில் எட்டி உதைத்த அர்னவ்
தனது வயிற்றில் எட்டி உதைத்ததால் எனது கரு கலையும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். என்னை உதைத்துவிட்டு என் கையை போட்டு மிதித்தபோது வலி தாளாமல் நான் மயங்கிவிட்டேன், பின்னர் மயக்கம் தெளிந்து எனக்கு பிளீடிங் ஆனவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றேன். அங்குதான் கருப்பையில் அடிப்பட்டிருப்பதால் கருவுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

முஸ்லீம்
மேலும் முஸ்லீமான அர்னவ் தன்னை இந்து மதத்திலிருந்து அவருடைய மதத்திற்கு மாறினால்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என கட்டாயப்படுத்தி என்னை மதம் மாற்றிவிட்டு தற்போது கர்ப்பிணியாக இருக்கும் போது என்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு நடிகையுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

ஷூட்டிங்
இதை நானே ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்துவிட்டு இருவருக்கும் அறிவுரை வழங்கினேன். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை என்றார். இந்த நிலையில் அர்னவ் மீது மனைவியை துன்புறுத்தியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புகாரில் தன்னை மதம் மாற்றம் செய்து ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.

எஃப்ஐஆரில் மதமாற்றப்பிரிவு இல்லாதது ஏன்
ஆனால் அதுகுறித்து முதல் தகவல் அறிக்கையில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சேர்க்காமல் தவிர்த்துவிட்டார் என்றும் கர்ப்பிணியான தன்னை எட்டி உதைத்து காயப்படுத்திய அர்னவ்வை கைது செய்யாமல் போலீஸார் மெத்தனமாக இருப்பதாக தமிழக மகளிர் ஆணையத்தில் திவ்யா புகார் அளித்திருந்தார்.

சம்மன் அனுப்பிய மகளிர் ஆணையம்
மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்தும் அர்னவ் தனது வீடியோக்களை பொது வெளியில் வெளியிட்டு அவதூறு பரப்புவது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். முதல் தகவல் அறிக்கையில் எஸ்ஆர்எம்சி காவல் ஆய்வாளர் மதமாற்ற புகார் குறித்து எந்த தகவலையும் சட்டப்பிரிவையும் வழக்கில் சேர்க்காதது ஏன் என்று காவல் உதவி ஆணையரை தொடர்பு கொண்டு மகளிர் ஆணைய தலைவி குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று மகளிர் ஆணையத்தில் ஆஜராகி காவல் ஆய்வாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications