sembaruthi serial: ஆதி- பார்வதி கல்யாணம் பத்தி அகிலாகிட்டே பேச முடியலையே!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் பிறந்த நாள் அன்னிக்கு தான் பார்வதியை கல்யாணம் செய்துக்கொண்ட உண்மையை சொல்லணும்னு நினைச்சு இருந்தான் ஆதி. அகிலாண்டேஸ்வரி கேட்ட எல்லா கேள்விக்கும் என்னோட பிறந்த நாள் அன்னிக்கு பதில் சொல்றேன்மான்னும் சொல்லி இருந்தான்.
சொல்லி நாலு மாசம் ஆச்சு. இப்போதுதான் பிறந்த நாள் வந்து இருக்கு. சரி இன்னிக்காவது பார்வதியுடன் நடந்த கல்யாணத்தை பத்தி சொல்லிடுவான்னு சீரியல் ஆர்வலர்கள் ரொம்ப ரொம்ப ஆர்வமா டிவி முன் உட்கார்ந்து இருந்தார்கள்.
நடு ராத்திரி 12 மணிக்கு பெரிய கேக் ஒன்றை வெட்டி, ஆதியின் பிறந்த நாளை அகிலாண்டேஸ்வரி கொண்டாடினாங்க. அப்போது மெதுவாக அம்மா உங்ககிட்டே பேசணும்மா என்று ஆரம்பிக்கிறான். வேணாம் ஆதி.. பிறந்த நாள் கொண்டாடியாச்சு. நீ போயி தூங்கு. குட்நைட்னு சொல்லிட்டு போயிட்டாங்க.

சுவீட் எடு கொண்டாடு
ஆதி, அம்மா அன்னிக்கு நீங்க மயக்கமா இருந்தப்போ உங்ககிட்ட நான் என்ன பேசினேன்னு என் பிறந்த நாள் அன்னிக்கு சொல்றேன்னு சொல்லி இருந்தேன். இன்னிக்கு சொல்லிடறேன்மான்னு சொல்ல, வேண்டாம் ஆதி. நாளைக்கு காலையில் நீ கல்யாணத்துக்கு தயாராகு. அவ்ளோதான். என்கிட்டே நீ எதுவும் இப்போ பேச வேண்டாம் என்று சொல்லிட்டு போயிடறாங்க அகிலாண்டேஸ்வரி. வனஜாவுக்கு இது குஷியாகிவிட. ஆதிக்கு கடுப்பாகும்படி கேக்கை எடுத்துக்கொண்டு, சுவீட் எடு கொண்டாடுன்னு சொல்லிட்டு போறா.

மைண்ட் வாய்ஸ் கண்டுக்காதீங்க
இங்கே பார்வதி, என்னது இன்னும் மாமா போன் பண்ணலை. அம்மாகிட்டே நடந்த கல்யாணம் பத்தி சொல்லி இருப்பாரா மாமா. அதுக்கு அம்மா என்ன சொல்லி இருப்பாங்க.. என்கிட்ட ஏன் அதை சொல்ல மாமா இன்னும் ஏன் போன் பண்ணாம இருக்கார். மாமாதான் போன் பண்ணனுமா.. நாமே பண்ணி என்னாச்சு மாமான்னு கேட்டுடலாம். இல்லை வேண்டாம்.. சரி கேட்டுத்தான் பார்க்கலாமே இப்படி பார்வதிக்கு மைண்ட் வாய்ஸ் அடிக்கடி எபிசோடுகளில் வரும். அதை நீங்க கண்டுக்காதீங்க.

பார்வதி ஆதி
ஆதிக்கு ஒரு வழியா போன் செய்யறா பார்வதி. என்ன பார்வதி நீ இன்னும் தூங்கலியான்னு கேட்கறான் ஆதி. என்ன மாமா இப்படி கேட்கறீங்க..எனக்கு எப்படி தூக்கம் வரும். அங்கே என்ன நடந்துச்சுன்னு நீங்க போன் பண்ணி சொல்லி இருக்க வேணாமான்னு கேட்கறா. பார்வதி அம்மா என்னை பேசவே விடலைன்னு இவன் சொல்ல, என்ன மாமா சொல்றீங்க.. எனக்கு பயமா இருக்குன்னு சொல்றா பார்வதி.

பயம் எதுக்கு
எதுக்கு பயப்படறே பார்வதி. நீ இப்போ வெறும் பார்வதி இல்லை. பார்வதி ஆதி. என் பொண்டாட்டியா நீ பயப்படக் கூடாது. நாளைக்கு கல்யாண மேடையில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். எது நடந்தாலும் நமக்குத்தான் சாதகமா நடக்கும். ஒரு வேலை நாளைக்கு நான் உண்மையை சொல்லும் நிலைமையும் வரும் பார்வதி நிம்மதியா தூங்குன்னு சொல்றான் ஆதி.
எல்லா சீரியல்களிலும் கல்யாணத்தை டார்கெட்டா வச்சுத்தான் பயணிக்கறாங்க. அதைத்தான் இழு இழுன்னு இழுத்து எபிஸோட்ஸ் கடத்திகிட்டு இருக்காங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications