Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Arasan: "இந்த கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை!" அரசன் ப்ரோமோவில் தனுஷ் பற்றி சிம்பு , வெறித்தனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு நடிப்பில், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இணையும் படம் தான் 'அரசன்'. இந்த மாபெரும் கூட்டணிக்குப் பக்கபலமாக, முதல்முறையாகச் சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படம், எதிர்பார்ப்புகளைத் தாண்டி இப்போதே திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!

Simbu STR Vetrimaaran Anirudh Ravichander

பிறந்தநாள் பரிசு: அரசன் ப்ரோமோ வெளியீடு

இன்று (அக்டோபர் 17) இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்குப் பிறந்தநாள் பரிசாக 'அரசன்' படத்தின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கம்போல சமூக வலைதளங்களில் வெளியிடாமல், மிகவும் வித்தியாசமான முறையில் திரையரங்குகளிலும் இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் சிம்புவின் தோற்றங்கள் ரசிகர்களைப் பிரமிக்க வைத்த நிலையில், இந்தப் ப்ரோமோ சிம்புவின் வெறித்தனமான நடிப்பை உறுதி செய்துள்ளது.

வடசென்னையிலிருந்து ஒரு சொல்லப்படாத கதை

ப்ரோமோவில் வரும் காட்சிகள், இந்த படம் வடசென்னையைப் போன்றதொரு சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன.

பதட்டமான சிம்பு: ஒரு காட்சியில், சிம்பு கையில் அரிவாளுடன் ரத்தக் கறையுடன் நிற்கிறார். "ஒரு ஈ, காக்கா கூட வரக்கூடாது, அப்புறம் நான் மனுசனாவே இருக்கமாட்டேன்" என்று அவர் ஆவேசமாகக் கத்தும் காட்சி, படத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. மற்றொரு காட்சியில், தனக்கு எதிராகக் கிட்டத்தட்ட 10 பேர் சாட்சி சொன்ன நிலையில், சிம்பு கோர்ட் படியேறி ஓடி வருகிறார். வழக்கு விசாரணைக்கு வரும்போது, கூண்டில் ஏறி நின்று பேசும் சிம்புவின் டயலாக் தான் ஹைலைட்!

"இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்துவிட்டு வருகிறேன். எனக்கு எதிரான சாட்சி சொன்னவர்கள் பொய் சொல்கிறார்கள். அக்யூஸ்டைப் பிடிக்க முடியலன்னு என்னைக் கொண்டு ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டார்கள். நான் நிரபராதி அம்மா!" என்று சிம்பு உணர்ச்சிகரமாகப் பேசும் காட்சி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்த டயலாக்கைத் தொடர்ந்து "வடசென்னை உலகத்திலிருந்து ஒரு சொல்லப்படாத கதை" என்று டைட்டில் போடப்படுவது, வெற்றிமாறனின் பாணியில் இந்தப் படம் மீண்டும் ஒரு யதார்த்தமான ஆனால் மாஸான படைப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

நெல்சன் உடனான கலகலப்பான காட்சி

'அரசன்' படத்திற்கு அனிருத் இசையில் ஒரு தீம் மியூசிக்கும் வெளியாகி இருக்கிறது. அத்துடன் மற்றொரு ப்ரோமோவும் வெளியானது. அதில் சிம்பு மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இடையேயான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நெல்சன், "யார்கிட்ட வந்து என்ன மாட்டி விட்டுருக்க" என்று டயலாக் பேசும் காட்சி, படத்தின் சில கலகலப்பான பகுதிகளுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

மிஷ்கின் புகழாரம்

இந்த ப்ரோமோ வெளியீடு குறித்துப் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, "படம் முன்னோட்டம் முந்துகிறது. வருங்காலம் வரவேற்கப் போகிறது. இந்தப் படம் சிறப்பான படமாக அமையும்" என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இந்தப் ப்ரோமோ குறித்துப் பேசுகையில், சிம்புவை உச்சத்துக்கு உயர்த்திப் பாராட்டியுள்ளார்:"வெற்றிமாறன் எப்போதுமே வித்தியாசமான முறையில் படம் எடுக்கக் கூடியவர். அவரது ஃபிலிம்மேக்கிங் புதிதாக இருக்கும். சிம்பு மற்றும் வெற்றி காம்போ சிறப்பாக இருக்கும். கதையும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் படம் இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக சிம்பு வருவார் என்பதற்குச் சான்று!" என்று மிஷ்கின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தன் கடின உழைப்பாலும், அசத்தலான நடிப்புத் திறமையாலும் சிம்பு திரையுலகில் மீண்டும் தனது ஆளுமையைக் காட்டத் தயாராகிவிட்டார் என்பதைக் 'அரசன்' ப்ரோமோ நிரூபித்துள்ளது! வெற்றிமாறன் - சிம்பு - அனிருத் கூட்டணி, இந்தியத் திரையுலகில் புதிய மைல்கல்லைப் பதிக்கக் காத்திருக்கிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+