STR: கோடு போட்ட சட்டை, லுங்கியோடு நள்ளிரவில் சிம்பு செய்த செயல்! சுற்றி வளைத்த மக்கள்! மனுஷன் செம கூல்!
சென்னை: நடிகர் சிம்பு அரசன் பட சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் நிலையில் கோவில்பட்டியில் இருந்து அவருடைய வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவருடைய கெட்டப்பை பார்த்ததும் ரசிகர்கள் இந்த படம் கண்டிப்பாக வெற்றி தான் என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஒரு சில நடிகர்களும், நடிகைகளும் பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் சிம்பு மட்டும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து இப்போ கதாநாயகனாக நடித்துக் கொண்டே இருக்கிறார். கை விரல்களிலே வித்தை பேசிய சிம்பு பஞ்ச் டயலாக்கிலும் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் எப்போதும் பேசப்படும் நபராகவும் மாறிக் கொண்டிருக்கிறார்.

சிம்புவையும் சர்ச்சையையும் பிரித்து பார்க்க முடியாது. அவர் என்ன செய்தாலும் அது ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவருடைய ரசிகர்களுக்கு அவர்களுக்கு அட்வைஸ் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் சிம்புவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் எப்போது திருமணம் என்று கேட்கப்பட்டபோது "எது எப்போது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடக்கும்" என்று சொல்லி இருந்தார்.
பிறகு அவர் வந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் கீழே விழுந்து விட அதை பார்த்து பதறிப்போன சிம்பு அவரிடம் நேரில் சென்று தோலில் தட்டிக் கொடுத்து அவரோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டிருந்தார். அதுபோல சிம்பு நடித்த தக் லைஃப் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் அடுத்து அவர் என்ன படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அரசன் பட அப்டேட் கிடைத்தது.
ஆனால் அரசன் படத்தின் ஷூட்டிங் எப்போதுதான் தொடங்கும் என்று சில எதிர்பார்ப்போடு சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது கோவில்பட்டியில் இந்த படத்தில் ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது. சூட்டிங்காக சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டிக்கு வந்துவிட்டார். அங்கு சூட்டிங் நடக்கும் இடத்தில் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. அவர் எங்கே எல்லாம் போகிறாரோ அங்கே எல்லாம் பொதுமக்கள் பலரும் சுற்றி வளைத்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சிலர் வெளிஊர்களில் இருந்தும் கூட சிம்புவை பார்ப்பதற்காக அங்கு வந்து தங்கி கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ஷூட்டிங் போது சிம்பு நள்ளிரவில் கெத்தாக நடந்து வருகிறார். அப்போது இரண்டு பக்கமும் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, அவர்களுக்கு கைகாட்டிய படியே சிம்பு வருகிறார். அதிலும் கோடு போட்ட சட்டை, லுங்கி யோடு அவர் நடந்து வரும் ஸ்டைலை பார்த்து இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று ரசிகர்கள் கமெண்டை கொட்டுகிறார்கள்.
இன்னும் சிலர் இவரால் மட்டும் எப்படித்தான் இப்படி உடம்பை ஏற்றி இறக்க முடிகிறதோ தெரியவில்லை, ஒரு முறை பார்த்தால் உடலை ஏற்றி அங்கிள் போல இருக்கிறார். இன்னொரு முறை பார்த்தால் காலேஜ் பையன் மாதிரி மாறிவிடுகிறாரே என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். இவரைப் பார்க்க கூடும் கூட்டத்தை பார்த்து படக்குழுவினர்கள் தான் கொஞ்சம் அச்சப்படுகிறார்கள். ஆனால் சிம்பு கூலாகவே அங்கிருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் கை கொடுத்து கொண்டும், டாட்டா காட்டிவிட்டும் ஜாலியாக சென்று கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications