Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெரு நாய் கடித்து 10 பேர் சாகணும்! அப்பவே சொன்ன நடிகர்! இப்போ அப்படியே நடக்குதே! புலம்பும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெரு நாய்கள் குறித்து இன்று நாடு முழுவதும் நடக்கும் பெரும் விவாதம், பல தசாப்தங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பேசப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 'நையாண்டி மன்னன்' சோ ராமசாமி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில், எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1987-ல் வெளியான 'மனிதன்' திரைப்படத்தின் ஒரு காட்சி, இன்றைய சமூகச் சூழலுக்கு அப்படியே பொருந்துவதாக இருக்கிறது.

cho Ramaswamy Rajinikanth Neeya Naana

சமீபகாலமாகவே தெரு நாய்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தாக்கி அவர்களை கடித்துக் குதறி விடுகிறது. இதனால் பலரும் பதறி போய் இருக்கின்றனர். குழந்தைகளை வெளியே நிம்மதியாக விளையாடுவதற்கு கூட விடுவதற்கு பயப்பட வேண்டிய சூழ்நிலைகள் தான் இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளையும் நாய்கள் துரத்தி கடித்து வைக்கிறது. அதுபோல நாய் கடியால் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். இந்த செய்தி அனைவரையும் பதற வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடந்தது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பே சோ பேசிய வீடியோவை இப்போது இணையத்தில் பலரும் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.

சோவின் பஞ்ச்

'மனிதன்' திரைப்படத்தில் ஒரு காட்சியில், சோ ராமசாமி, வினு சக்ரவர்த்தியிடம் செய்தித்தாள் வாசிப்பார். "பைத்தியம் பிடித்த நாய் கடித்து 10 பேர் சாவு" என்று சோ படிக்க, "ஏய்யா இப்படி எல்லாம் நடக்குது?" என்று வினு சக்ரவர்த்தி கேட்பார். அதற்கு சோ, "ஜனத்தொகை அதிகரித்துக் கொண்டே போகுதே. அதைக் குறைக்கத் தான் இப்படி எல்லாம் சேவை பண்றாங்க. இப்பலாம் தெருவுல நூத்துக்கணக்கா நாய்கள் திரிகிறதே. அதை யாருமே பிடிக்கிறது இல்லையே ஏன் தெரியுமா? நாய் கடிச்சு ஒரு 10 பேர் சாவட்டுமே என்கிற நல்லெண்ணம் தான்" என்று நகைச்சுவையாக ஆனால் ஆழமான கருத்தைப் பதிவு செய்வார்.

இந்தக் காட்சி, இன்றைய 'நீயா நானா' நிகழ்ச்சியின் தெரு நாய்கள் குறித்த விவாதத்துடன் ஒப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும், "சோ ஒரு தீர்க்கதரிசி. அன்றே இந்தச் சமூகப் பிரச்சினை குறித்துப் பேசியுள்ளார்" என்று அவரைப் பாராட்டி வருகின்றனர்.

சினிமாவில் எதிரொலித்த தெரு நாய்கள் சர்ச்சை

'மனிதன்' திரைப்படம் மட்டுமல்ல, பல திரைப்படங்களில் தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இயக்குநர் சந்தான பாரதியின் இயக்கத்தில் வெளியான 'மகாநதி' திரைப்படத்தில், ஒரு பாடல் காட்சியில் இடம்பெற்ற 'பைத்தியம் பிடித்த நாய்' கடித்து, சரண்யா பொன்வண்ணன் இறந்துபோவதாகக் காட்டப்படும் காட்சி, அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது, நாய்க்கடியின் தீவிரத்தை மக்கள் உணரும் வகையில் இருந்தது.

இன்றைய நிலையில், தெரு நாய்களுக்கு ஆதரவு கொடுக்கும் சில பிரபலங்கள், தங்கள் வளர்ப்பு நாய்களுடன் எடுக்கும் புகைப்படங்களைப் பார்த்து, "நாய்களைப் பாதுகாக்கச் சொல்கிறீர்கள், ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை ஏன் உணர்வதில்லை?" என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக, 'நீயா நானா' நிகழ்ச்சியில் நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நடிகை அம்மு மற்றும் படவா கோபி போன்றோர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

cho Ramaswamy Rajinikanth Neeya Naana

அம்மு, "8 மணிநேரம் ஷூட் செய்து, வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே எடிட் செய்துள்ளார்கள்" என்று குற்றம் சாட்டினார். இது, நிகழ்ச்சியில் நடந்தது என்ன, எடிட்டிங்கில் என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டன என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அம்முவின் இந்த விளக்கமும், பாடகி சுசித்ரா, யூடியூபர் பனிமலர் பன்னீர்செல்வம் போன்றோரின் கடுமையான விமர்சனங்களும், இந்த விவாதத்திற்கு மேலும் தீயை மூட்டியுள்ளன.

மொத்தத்தில், தெரு நாய்கள் ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. அதற்கான சரியான தீர்வை எட்டாமல், அதுகுறித்து நடக்கும் விவாதங்கள், ஒரு காலத்தில் நகைச்சுவையாகப் பார்க்கப்பட்ட சோவின் வசனங்களை இன்று நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட வைக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+