மொக்கைச்சாமியை ஞாபகம் இருக்கா? ‘சுப்ரமணியபுரம்’ புகழ் நடிகர் இலைக்கடை முருகன் காலமானார்!
மதுரை: குணச்சித்திர நடிகர் இலைக்கடை முருகன் இன்று காலமானார். 'சுப்ரமணியபுரம்' படத்தில் மொக்கைச்சாமி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற முருகன், இலைக்கடை நடத்தி வந்தார்.
'சுப்ரமணியபுரம்' படம், தமிழ் சினிமாவில் முக்கியமான மைல் ஸ்டோன் படமாக ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இந்தப் படம் இயக்குநராக சசிகுமாருக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தத் திரைப்படம் தான் நடிகர் ஜெய்க்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, ஸ்வாதி என்று பலர் நடித்த இந்தப் படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து இருந்தார்.

'சுப்ரமணியபுரம்' படத்தில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்திருந்தார் சசிகுமார். டும்கான், மைக் செட் சித்தன், கோவில் தர்மகர்த்தா மொக்கச்சாமி என்று பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தன.
அந்த வகையில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் மொக்கச்சாமி கதாபாத்திரத்தில் முருகன் என்பவர் நடித்திருந்தார். இவர் மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் உள்ள மார்க்கெட்டில் இலைக் கடை வைத்து நடத்தி வந்தார்.
இயக்குநர் சசிகுமார், தனது குழுவினரோடு மாட்டுத்தாவணி மார்க்கெட் பகுதியில் லொக்கேஷன் பார்க்கச் சென்றபோது, இலைக்கடை வைத்திருந்த முருகனை பார்த்து, நடிக்க வைத்துள்ளார். 'சுப்ரமணியபுரம்' படத்தைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்த முருகன் பின்னர் மீண்டும் இலைக் கடை தொழிலுக்கே முழுமையாகச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நடிகர் இலைக்கடை முருகன் மாரடைப்பால் இன்று காலமானார். 'சுப்ரமணியபுரம்' உட்பட 5க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இலைக்கடை முருகன் இன்று மாரடைப்பால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 78. அவரது மறைவு ரசிகர்கள், திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications