சுப்ரமணியபுரம் படத்தில் கண்கள் இரண்டால் பாடலில் இதை நோட் செய்தீர்களா? என்னா விறுவிறுப்பு
சென்னை: சுப்ரமணியபுரம் படத்தில் கண்கள் இரண்டால் பாடலில் இந்த சீனை கவனித்தீர்களா? இந்த பட அனுபவம் புதிதாக இருந்தது. படத்தில் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக இருக்கும். இந்த திரைப்படம் மறக்கவே முடியாது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுப்ரமண்யபுரம்.... இந்தப் படம் பார்த்தபோது அது தந்த அனுபவம் தான் தமிழ் சினிமாவுக்கு அப்போ புத்தம் புதிதாக இருந்தது.
படத்தில் ஒரு காட்சி நம் தலையை தட்டி அதிர்ச்சியில் இருப்போம். அதிலிருந்து மீண்டு வரும் போது அடுத்த அதிர்ச்சி தந்து நம் தலையை தட்டி அமர வைக்கும்.

இந்த லேயர் பை லேயர் அதிர்ச்சி அடுக்குகள் தான் படத்தை பார்க்கும் போது நமக்கு புது அனுபவங்களை கொடுத்தது. 'கண்கள் இரண்டால்' பாட்டில் கூட நீங்கள் ஒரு காட்சி பார்த்திருக்கலாம். சமுத்திரக்கனி சாமி கும்பிட்டு விட்டு திரும்பிப் பார்க்கும் போது ஸ்வாதி ஜெய்யிடம் பேசிக் கொண்டிருப்பார்.
சமுத்திரக்கனி வேகமாக சந்தேகத்தோடு வரும் போது 'மாட்டிக்கொள்வார்களோ' என்று நமக்கு ஒரு பதைபதைப்பு உண்டாக்கும் காட்சியை வைத்திருப்பார் இயக்குனர். காதல் காட்சியில் கூட இப்படி காட்சியை வைத்த சசிக்குமார் படம் முழுக்க இந்த பதைபதைப்பை விதைத்துக் கொண்டே வருவார் திரைக்கதையிலும், காட்சிகளிலும்.
டீக்குடிக்கக்கூட வழியில்லாத இரண்டு நாயகர்கள், பெரிய வீட்டுப்பெண்ணை காதலிப்பதுமாக காட்சிகள் வரும் போதே இது நல்ல காதல் படம் போல என நினைத்து நிமிர்ந்து உட்காருவோம். காட்சிகளும் ஜெய்-ஸ்வாதி காதல் காட்சிகளில் அழகாக நகரும்.
இப்படி நகரும் போதே திடீரென அவர்கள் சமுத்திரக்கனியின் பேச்சைக் கேட்டு கொலையை செய்யும் போது நாம் பதைத்து உட்கார்ந்திருப்போம்.
சரி... சிறையிலிருந்து வந்து நல்ல படி அவளோடு வாழ ஏதாவது செய்வார்கள் என நினைக்கும் போதே அடுத்த காட்சியாக அவர்கள் கூலிப்படை போல் கொலை நிகழ்த்துவது மேலும் அதிர்ச்சி. நாம் தளர்ந்து உட்காரும் காட்சி. இந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீளும் போது 'மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா' என்கிற காட்சியின் அழுத்தம். கடைசியாக ஸ்வாதியே ஜெய்யை கொல்ல காரணமாக இருப்பது ரசிகனின் உச்சபட்ச அதிர்ச்சிக் காட்சி.
தமிழ் சினிமாவில் காதலில் நாயகியைத்தான் ஏமாற்றுவதாக கண்டிருந்த ரசிகனுக்கு ஸ்வாதி கை காட்டி ஜெய்யை கொல்லும் காட்சியின் அழுத்தம் காது மடல்களில் தீ எரியும் காட்சி. இதற்குப்பிறகான சசிகுமார்-சமுத்திரக்கனி கொலை தரும் அழுத்தத்தை விட அதை படமாக்கிய விதம் தான் தமிழ் ரசிகனின் மென் மனதை தூக்கிப்போட்டு வெறி கொள்ள வைத்த காட்சி.
சமுத்திரக்கனியை கீழே போட்டு கழுத்தை அறுப்பதை அப்போது தான் முதன் முதலில் தமிழ் திரையுலகம் காண்கிறது. அதுவும் அந்தத் தலையை தூக்கிப்போடும் காட்சியில் சசிகுமாரின் ஆசுவாசம், கோபம், விரக்தி எல்லாவற்றையுமே சசிகுமார் மிகச் சிறப்பாக தமிழ் ரசிகனிடம் கடத்தி விட்டிருந்தார்.
இந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாக கஞ்சா கருப்பு சசிகுமாரை காட்டிக் கொடுத்து விட்டு விறு விறுவென்று நடந்து வரும் போது படம் பார்க்கும் ரசிகனுக்கு ஏற்படும் ஏமாற்றம் இருக்கிறதே அது தான் சசியின் திரைக்கதை வெற்றி. அந்த அதிர்ச்சிக்குப் பிறகு டும்கா கஞ்சா கருப்புவை கொல்லும் போது அது வரை கொதி நிலையிலிருந்த ரசிகனின் மனம் அமைதியாகிறது. கஞ்சா கருப்புவின் உயிர் ஆடி அடங்குவது போல நம் மனமும் ஆடி அடங்கி தியேட்டரை விட்டு வெளி வரும் போது வெறுமை தான் மிஞ்சுகிறது.
இந்த வெறுமை மனநிலை தான் 'சுப்ரமண்ய புரம்' படத்தின் மகத்தான வெற்றி. படத்தில் வேறொரு அற்புத விஷயம் 80 காலத்தை முன்னிறுத்தியது. படம் தொடங்கும் போது அட... காளி பட போஸ்டர், முரட்டுக்காளை படம் ரிலீஸ், கூண்டு வண்டி பயணம், பாவாடை தாவணிப் பெண்கள், ப்ளாஸ்டிக் ஃப்ரேம் கண்ணாடி, 'தோட்டம் கொண்ட ராசாவே' பகலில் ஒரு நிலவு பாட்டு, சைக்கிள் டபுள்ஸ், ஸ்டெப் கட்டிங், பெல்பாட்டம் என பார்த்து பார்த்து சிலாகிக்கும் நம் மனம் பின்னே கதையின், காட்சியின் அழுத்தத்தால் அதையெல்லாம் அடியோடு மறந்து ஒன்றி திரைக்கதையோடு பயணிப்பதும் இயக்குனர் சசியின் வெற்றி.
பர்சனலாக எனக்கு ரொம்ப தொடர்புடைய படம். அந்த தாவணிப்பெண், டபுள்ஸ் நண்பர்கள் காட்சிகளெல்லாம் எனது டீன் ஏஜ் வயதில் நடந்து பின்பு திருமணத்தில் முடிந்ததால் எப்போதும் அந்தக் காட்சிகளில் எனது மனம் 80 களுக்கு சென்று விடும். ஒரு பேராசைக்காரனின் பதவி ஆசை எத்தனை பேர் வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடுகிறது என்கிற காட்சியமைப்பின் நேர்மை அழகாக கையாளப்பட்டிருந்த விதம் அழகு.
ஜெய்யை எந்தப் படத்தில் பார்த்தாலும் ஜெய் தான் தெரிவார்.
இந்தப் படத்தில் மட்டும் எப்போது பார்த்தாலும் இது ஜெய்யா, இல்லை வேறு ஒரு நடிகனா என சந்தேகத்தை ஏற்படுத்தி விடுவார். அவ்வளவு திறமையான நடிப்பு. சசிகுமார் நடிப்பை இதற்குப்பிறகான படங்களில் பார்க்கவே முடியவில்லை. நட்புகள் துரோகம் செய்யும், காதல் துரோகம் செய்யும் போன்ற கன்னத்தில் விழுந்த அறைகள் தான் இப்படத்தை கன்னத்தை தடவிக் கொண்டே வெளியேறச் செய்தன. வெற்றியும் பெறச் செய்தன. சுப்ரமண்யபுரம் மறக்கவே முடியாத ஒரு படம். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications