நம்ம தமிழ்நாட்டுகுள்ள இவ்வளவு அழகா? தியேட்டரில் மிரட்ட வரும் Wild Tamil Nadu.. 4 வருட உழைப்பின் பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில அழகான இடங்களை மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும், கடலுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் அழகான தமிழ்நாடு பலருக்கும் தெரிந்திருக்காது. அந்த உலகத்தை இப்போது வெள்ளி திரைக்கு கொண்டு வந்திருக்கிறது வைல்டு தமிழ்நாடு (Wild Tamilnadu) என்ற வன விலங்கு ஆவணப்படம்.

இன்று (செப்டம்பர் 7) முதல் பிவிஆர் சினிமாஸ் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது. சாதாரணமான ஒரு டாக்குமென்டரி என்றால் டிவியில் பார்த்துவிட்டு கடந்து போய் விடுவோம். ஆனால் வைல்ட் தமிழ்நாட்டை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கி இருக்கிறார்கள் போல. நம்ம ஊரிலேயே இத்தனை விஷயங்கள் இருக்கிறதா? என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு காட்சிகள் இருக்கின்றன.

Tamil Nadu wild Tamil Nadu Aravind Swamy

நான்கு வருட காத்திருப்பு

இந்த படத்தின் மிகப்பெரிய ஸ்பெஷல் 4 வருட காத்திருப்பு தான். ஒரு மாதம், இரண்டு மாதம் என்று எடுத்த படம் கிடையாது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 4 வருஷங்களாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒன்றாக இணைத்துதான் வைல்ட் தமிழ்நாடு படம் உருவாக்கி இருக்கிறது. மலைகள், அடர்ந்த காடுகள், விளை நிலங்கள், கடற்கரை பவளப்பாறைகள், வறண்ட நிலப்பகுதிகள் என தமிழ்நாட்டின் ஒவ்வொரு நிலப்பரப்புக்குள் சென்று கேமராவை வைத்திருக்கிறார்கள்.

சில விலங்குகள் கேமரா முன்னால் வருவதற்காகவே பல மணி நேரம், சில நேரங்களில் பல நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். அதுவும் காட்டுக்குள் சென்று படம் எடுப்பது என்பது நமக்கு தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு சிம்பிளான விஷயம் கிடையாது. அந்த 4 வருட களப்பணியின் பலன்தான் இப்போது பெரிய திரையில் வரப்போகிறது.

இன்னொரு விஷயம் இந்தப் படத்தில் ரொம்ப சுவாரஸ்யமானது நம்ம சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் ஐந்திணை அடிப்படையில் தான் வைல்ட் தமிழ்நாடுவை உருவாக்கி இருக்கிறார்.

குறிஞ்சி- மலை

முல்லை- காடு

மருதம்- விளைநிலம்

நெய்தல் -கடற்கரை

பாலை - வறண்ட நிலம்

4,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் இயற்கையை புரிந்து கொள்ள பயன்படுத்திய இந்த ஐந்து நிலப்பரப்புக்குள்ளும் இன்றும் எவ்வளவு உயிர்கள் வாழ்கின்றன என்பதை படம் காட்டுகிறது. அதாவது சங்க இலக்கியத்தில் நாம் படித்த ஐந்திணையை இப்போது கேமரா வழியாக பார்க்கப் போகிறோம். யானை, சிறுத்தை மட்டுமல்ல நமக்கே தெரியாத உயிரினங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த படத்தில் இன்னொரு அழகு என்னவென்றால் நாம் அவ்வளவாக கவனிக்காத உயிரினங்களுக்கும் இதில் இடம் கொடுத்து இருக்கிறார்கள். மின்மினி பூச்சிகள் போன்ற அரிதான உயிரினங்களின் வாழ்க்கையையும் கேமராவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

Tamil Nadu wild Tamil Nadu Aravind Swamy

தமிழ்நாட்டின் அழகு

குறிப்பாக நமது தமிழ்நாட்டிலேயே வாழும் ஒரு முள்எலியை கூட நம்மில் எத்தனை பேருக்கு நேரில் பார்த்திருப்போம்? இப்படிப்பட்ட உயிரினங்களின் உலகத்தை பெரிய திரையில் பார்க்கும்போது நம்ம ஊருக்குள்ள இவ்வளவு இருக்கா என்ற உணர்வு நிச்சயம் வரலாம். இந்த படத்தை இயக்கியிருப்பவர் சாதாரண இயக்குனர் கிடையாது. இந்தியாவில் முன்னணி வனவிலங்கு திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான கல்யாண் வர்மா.

Tamil Nadu wild Tamil Nadu Aravind Swamy

படத்தின் பிளஸ்

இவர் ஏற்கனவே வனவிலங்கு பட படைப்புகளுக்காக தேசிய விருது பெற்றவர். அதனால் வைல்ட் தமிழ்நாடுவில் வெறும் அழகான விலங்கு காட்சிகள் மட்டும் இருக்காது என்பதுதான் எதிர்பார்ப்பு. விலங்குகள் வாழும் இடம், அவற்றுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பு, அந்த நிலப்பரப்பின் தன்மை என முழுமையான உலகத்தை காட்டும் முயற்சியாக இருக்கிறது. இன்னொரு சர்ப்ரைஸும் இந்த படத்தில் இருக்கிறது.

Tamil Nadu wild Tamil Nadu Aravind Swamy

அரவிந்தசாமியின் குரல்

இந்த படத்திற்கு நடிகர் அரவிந்த்சாமி குரல் கொடுத்திருக்கிறார். அதனால் திரையில் ஒரு யானை நடந்து வரும்போது அல்லது அடர்ந்த காட்டுக்குள் கேமரா செல்லும்போது பின்னணியில் அரவிந்த்சாமியின் குரல் ஒழிப்பது இந்த அனுபவத்தை இன்னும் சுவாரசியமாக்கும். இசையமைப்பை செய்திருப்பவர் மூன்று முறை கிராமிய விருது வென்ற ரிக்கி கேஸ். கர்நாடக இசையின் தன்மையை ஆர்கெஸ்ட்ரா இசையையும் இணைத்து இந்த படத்துக்கான இசையை உருவாக்கினார்கள்.

என் நிலைமை அவ்வளவுதான்னு சொன்னாங்க! ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்! அரவிந்த்சாமி உருக்கம்
செப்டம்பர் 7ஆம் தேதி முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகும் வைல்ட் தமிழ்நாடு படத்தைப் பற்றிய ஒரு டாக்குமென்டரி மட்டும் இல்லாமல் நம்ம ஊரை நாமே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு அனுபவமாக இருக்கப் போகிறது. சில படங்களுக்கு தியேட்டரில் போய் கதை பார்க்கலாம். இந்த படத்திற்கு தியேட்டரில் போய் நம்ம தமிழ்நாட்டையே பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+