கமல்ஹாசனும் மாயாவும் திருநங்கை.. அந்த வீடியோ பாத்தீங்களா? மியூட்ல போட்டு பாருங்க.. சுசித்ரா பகீர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி பாடகி சுசித்ரா பல்வேறு பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருக்கிறார்.
சுசித்ரா பாடகியாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்த நிலையில் இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் இப்போது நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் மாயா இருவருமே திருநங்கை தான் என்று பேட்டி ஒன்றில் சுசித்ரா பேசியிருப்பது தற்போது வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக திகழ்ந்துவரும் சுசித்ரா பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர்.
அதை தொடர்ந்து சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் அனிருத், சஞ்சித் ரெட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் வெளியாக்கி சுசித்ரா பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதை குறித்து பலரும் விமர்சித்திருந்த நிலையில் தன் தரப்பு நியாயத்தையும் சுசித்ரா கூறியிருந்தார்.

இப்படியான நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் சுசித்ராவால் நீடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து சில ஆண்டுகளாக அவர் சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் பிரதீப்க்கு ஆதரவாக சுசித்ரா பல்வேறு தகவல்களை பேசிக்கொண்டிருந்தார். அதை தொடர்ந்து தொடர்ச்சியாக பல youtube சேனல்களுக்கு சுசித்ரா பேட்டி அளித்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் சுசித்ராவும் அவருடைய திருநங்கை தோழியான வைஷுவும் சேர்ந்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கின்றனர். அதில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா நடந்து கொள்வது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது மாயாவிற்கு ஆதரவாக கமல் செயல்படுவதற்கு காரணம் என்ன என்பது பற்றி வைஷூ பேசிக்கொண்டிருக்கும்போது இடைமறித்த சுசித்ரா அதாவது என்னுடைய தோழி என்ன சொல்ல வர்றாங்கன்னா, மாயாவை போலவே கமல்ஹாசனும் திருநங்கைதான் என்று சொல்ல வருகிறார். அதைத்தான் அவர் சுற்றி வளைத்து பேசுகிறார். ஆனால் நான் எதற்கும் பயப்பட மாட்டேன்.

நான் மனதில் பட்டதை டக்கென்று சொல்லிவிடுவேன். எனக்கு கமல்ஹாசன் குறித்து திருநங்கை தானா என்று சந்தேகம் இருப்பதால் நாங்க அது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். அவர் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை நாங்கள் பலமுறை மியூட்டில் போட்டு பார்த்திருக்கிறோம். அதில் அவர் ஒரு பாடலுக்கு ஆடி இருப்பார். அந்த பாட்டிற்கு உண்மையான திருநங்கைகளால் கூட அந்த ஸ்டெப் அவ்வளவு நளினமாக எடுத்து வைக்க முடியாது.
ஆனால் அதை கமல்ஹாசன் தத்ரூபமாக செய்திருப்பார். பொதுவாக பல நடிகர்களுக்குள் ஒரு பெண்மை தன்மை இருக்கும். அதன்படி தான் ஒரு சிலர் ஒரு சில திரைப்படங்களில் தங்களுக்கு பிடித்த மாதிரி வேஷத்தை போட்டு நடித்து கிழித்து விடுவார்கள். அந்த மாதிரி தான் கமல்ஹாசன் கூட அவருக்குள் இருக்கும் பெண்மை தன்மையை அவ்வை சண்முகி, விஸ்வரூபம் போன்ற சில திரைப்படங்களில் நடிப்பை காட்டி இருக்கிறார் என்று அந்த பேட்டியில் சுசித்ரா பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications