Suhasini: கையில் சிலம்பு! கண்ணகி வசனத்தை ஆங்கிலத்தில் பேசி மிரட்டிய நடிகை சுஹாசினி –குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படத் துறையில மிகப் பெரிய ஆளுமையா இருக்கிற நடிகை சுஹாசினி மணியரத்னம், இப்போ சமூக வலைதளத்துல ஒரு ட்ரெண்ட் உருவாக்கிருக்காங்க. தமிழ்ச் சமூகத்தோட மிக பெரிய வரலாற்று பெண்ணான கண்ணகியோட கோபமான வசனங்களை ஆங்கிலத்தில் பேசி நடிச்சிக் காட்டுற வீடியோதான் இப்ப வைரலாகிட்டு வருது . பழமையான கலையை புதிய தலைமுறைக்கு எடுத்துட்டுப் போக அவங்க எடுத்திருக்கிற இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கு.

நடிகை சுஹாசினி பயோகிரோபி
சுஹாசினி ரெண்டு தலைமுறைத் திரைக்கலைஞர்களோட பின்னணியில இருந்து வந்தவங்க. அவங்க நடிகர் கமல்ஹாசனோட அண்ணன் சாருஹாசனோட மகள். சுஹாசினி, முதல்ல கேமரா மேன் (ஒளிப்பதிவாளர்) பணியைக் கற்றுக்கிட்டு இருந்தாங்க. ஆனா, இயக்குநர் பாலச்சந்தரின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்துல அறிமுகமானாங்க.
அவங்க நடிச்ச 'சிந்துப் பைரவி' படத்துக்காக தேசிய விருது வாங்கினாங்க. நடிப்புத் தவிர, இயக்கம், ஆடைகள் ஆடைகள் வடிவமைப்புனு பல்வேறு பரிமாணங்கள் கொண்டவங்க. பிரபலத் திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்திருக்காங்க. பாலிவுட் ஹாலிவுட் ஒரு சில தம்பதிகள் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர் அந்த வரிசையில் சுஹாசினி மணிரத்தினம் ஜோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
சுஹாசினி நடிச்ச இந்த கண்ணகி வசனம் அரங்கேறியது எங்கன்னு சரியான தகவல் கிடைக்கல. ஆனா, இது ஒரு கல்வி சார்ந்த அல்லது இலக்கியக் கருத்தரங்குல நடந்ததா தெரிய வருது. தமிழ் இலக்கியத்தோட அழகையும், வேகத்தையும் அந்நிய பார்வையாளர்களுக்கு எடுத்து சொல்லும் விதமா இந்த முயற்சியை சுஹாசினி எடுத்திருக்காங்க
கண்ணகி - கோவலன் கதை
கண்ணகி - கோவலன் கதைங்கிறது தமிழோட ஐம்பெருங் காப்பியங்கள்ல ஒன்னான சிலப்பதிகாரத்தோட முக்கியக் கதை தான். கண்ணகி மற்றும் கோவலன் னு ரெண்டு பேரும் திருமணம் செஞ்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்தாங்க. ஆனா, கோவலன் மாதவி மேல ஆசைப்பட்டுத் தன் செல்வத்தை எல்லாம் அவளுக்காக செலவு செஞ்சுட்டான். எல்லாத்தையும் இழந்த கோவலன், கண்ணகிகிட்ட திரும்ப வந்து, அவளோட கால்ல இருக்கிற சிலம்புல ஒன்னை விற்றுப் பிழைக்கலாம்னு முடிவு செஞ்சு மதுரைக்கு போறான்.
துரதிர்ஷ்டவசமா, அந்த சிலம்பைத் திருடியதா நினைச்சு, மதுரை மன்னன் அவன் கோவலனைக் கொலை செய்ய சொல்லிட்டார். கோவலன் நிரபராதினு நிரூபிக்க வேண்டி, கண்ணகி அங்க போய், கோபத்தோட தனது கையில இருக்கிற மறு சிலம்பை உடைச்சு நிரூபிக்கிறாள். தன்னோட தவறுக்காக மன்னன் மயங்கி விழுந்து உயிரை விட்டான். கோபத்தோட உச்சத்துக்குப் போன கண்ணகி, மதுரை நகரத்தையே எரிச்சு விடுகிறார் - இதுதான் கதை.
சுஹாசினி நடித்து காட்டிய விதம்
சுஹாசினி பேசுன வசனங்கள் கண்ணகி, மதுரை மன்னன் முன்னால நின்னு தனக்கு நடந்த அநீதியையும், தன் கணவன் கோவலன் நிரபராதிங்கிறதையும் சொல்லி கோபத்துல வெடிச்சுக் கிளம்புற வசனங்கள் (தனிப்பேச்சு) தான். அவங்க அணிஞ்சிருக்கிற மஞ்சள் புடவை, உணர்ச்சி பொங்கும் அவங்களோட நடிப்பு, துல்லியமான ஆங்கிலத்தில் வசனத்தை பேசுற விதம்னு எல்லாமே மிகவும் சிறப்பா இருக்கு. குறிப்பா, அவங்க உணர்ச்சிகளை வெளிப்படுத்தின உடல்மொழி ரொம்பவே உண்மையா இருந்துச்சு.
இந்த வசனத்தைப் பொறுத்தவரை, அதுல இருக்கிற சோகம், கோபம், அநீதிக்கு எதிரான எழுச்சி னு எல்லாத்தையும் ஆங்கிலத்துல பேசும்போது, அதோட ஆழம் மற்றும் உணர்வுப் பூர்வமான அம்சம் இழக்காம பார்த்துகிட்டாங்க சுஹாசினி.
இந்த வீடியோ, தமிழ் இலக்கியத்தை இன்னொரு கட்டத்துக்கு எடுத்துட்டு போறதோடு, தலைமுறை தாண்டி கலைஞர்கள் எப்படி பயணிக்கணும்ங்கிறதற்கும் ஒரு வழிகாட்டியா இருக்கிறதா பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications