எனக்கும் குஷ்பூவுக்கும் பெரிய பிரச்சனை! மானம் இல்லையான்னு மணிரத்தினம் கேட்டாரு! நடிகை சுஹாசினி ஓபன்
சென்னை: சில நாட்களுக்கு முன்பு நடிகை சுஹாசினி கண்ணகி வசனத்தை ஆங்கிலத்தில் பேசியது பெரிதாக ட்ரோல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது அவர் தனக்கும் நடிகை குஷ்புவுக்கும் இருந்த பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
80ஸ் நடிகர்கள், நடிகைகள் அடிக்கடி ஸ்டார் மீட்டிங் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்திருப்போம். அதில் நடிகை சுஹாசினி, குஷ்பூ, மீனா, ராதிகா, ரம்பா போன்றோர் தவறாமல் இடம் பிடித்து வருகிறார்கள். அந்த கேங்கில் இருக்கும் சுஹாசினிக்கும் குஷ்புவுக்கும் ஆரம்பத்தில் பெரிய பிரச்சனை இருந்ததாம். அப்போதெல்லாம் இருவரும் நேருக்கு நேராக பேசிக்கொள்ள கூட மாட்டார்களாம்.

அது பற்றி சுஹாசினி இப்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, எனக்கும் குஷ்பூக்கும் ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. அப்போ நாங்க அதிகமா பேச மாட்டோம். ஆனால் அந்த பிரச்சனை வந்தது கூட எங்களுக்கு நல்லது என்று தான் சொல்லுவேன். அந்த பிரச்சனை வந்ததால் தான் நாங்கள் இப்போ ஒரு நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கடைசி வரைக்கும் இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்பதை அவர் சொல்லவே இல்லை.
இருவரும் முதலில் பேசிக்கொள்ளாமல் இருந்தாலும் குஷ்பூ அறிமுகமான ரஜினி படத்தில் சுஹாசினியும் நடித்திருந்தாராம். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல தான் இவர்கள் இருவருக்கும் நட்பு தொடங்கியதாம். ஒவ்வொரு வாரமும் குஷ்பூ எதாவது கிஃப்ட் சுஹாசினிக்கு அனுப்பி கொண்டே இருப்பாராம்.
அதை பார்த்து மணிரத்தினம் கூட சுஹாசினியை கிண்டல் செய்வாராம். உனக்கு எல்லாம் வெட்கம், மானம், சூடு சொரணை, எதுவும் கிடையாதா? அந்த பொண்ணு ஒவ்வொரு வாரமும் கிப்ட் அனுப்பிக்கிட்டே இருக்கு நீ வாங்கி வச்சுக்கிட்டே இருக்கியேன்னு கேட்பாராம். அதையெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன் என்று சுஹாசினி சிரித்தபடியே சொல்லி இருக்கிறார்.

மேலும் அவர் பேசும்போது குஷ்பூ எங்க வீட்டுக்கு வருவாங்க ஒரு ஹேண்ட்பேக் நிறைய கிப்ட் கொண்டு வச்சிட்டு என்னுடைய நாயை அவங்க காரில் கூட்டிட்டு போய் ஒரு ரவுண்டு அடிச்சு விட்டுட்டு போயிருவாங்க. என்னுடைய பெஸ்ட் பிரண்டு குஷ்பூ தான். எனக்கும் அவங்களுக்கும் 9 வயசு வித்தியாசம் இருக்கிறது. என்னோட சின்ன பொண்ணா இருந்தாலும் பல விஷயங்களில் நாங்க ரெண்டு பேரும் மனம் விட்டு பேசிக்குவோம் என்று சுஹாசினி பேசியிருக்கிறார்.
சமீபத்தில் கூட நடிகை குஷ்பூ சுஹாசினி உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படம் வெளியான சமயத்தில்தான் குஷ்புவின் கணவரான சுந்தர் சி கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 173-வது படத்தை இயக்குகிறேன் என்று அறிவித்து இருந்தார். பிறகு அவர் அந்த படத்தை விட்டு திடீரென விலகி இருந்தார். இதனால் அந்த விஷயம் பேசப்பட்டு இருந்த சமயத்தில் சுஹாசினி மற்றும் கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை குஷ்பூ வெளியீட்டு இருந்தார்.அப்போது இந்த செய்தி அதிகமாக பேசப்பட்டது.
அதுபோல சுஹாசினி கண்ணகி போல கையில் சிலம்புடன் இங்கிலீஷில் பேசி நடித்த நாடகத்தை பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். இவர் ஒரு நடிகையாக இருந்தும் மேடையில் கண்ணகி டயலாக்குக்கு சரியாக ஒரு ஆக்ஷனை காட்ட முடியவில்லை அதனால் தான் மணிரத்தினம் இவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருக்கிறாரா? என்றும் சிலர் கலாய்த்து வருகின்றனர். இந்த சமயத்தில் இவர் குஷ்பவோடு தனக்கு இருக்கும் நட்பை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications