Suman: அஜித் எனக்கு அண்ணன் தான்! வரலாறு ஷூட்டிங்கில் நடந்த விஷயம்.. நெகிழ்ந்த நடிகர் சுமன்
சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, இன்று வரை ரசிகர்களின் நினைவில் நிற்கும் முகமாக இருப்பவர் நடிகர் சுமன் ஷெட்டி. தெலுங்கு திரையுலகில் இருந்து வந்து, மொழி, அழகு என பல தடைகளை தாண்டி தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது சினிமா பயணம், சந்தித்த சவால்கள், மற்றும் தனக்கு கிடைத்த ஆதரவுகள் குறித்து சுமன் ஷெட்டி மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேச்சுகள் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

தமிழில் சுமன் ஷெட்டியை மக்கள் அதிகமாக நினைவுகூருவது ரவி மோகன் நடித்த 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் தான். அந்த படத்தில் "அலிபாபா" என்ற கேரக்டரில் அவர் நடித்த நடிப்பு அவருடைய ரியாக்சன் அவருடைய உடல் மொழி எல்லாமே ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு, அவரை அடையாளம் காணச் செய்தது. அதன்பிறகு '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் கிடைத்த கதாபாத்திரம், சுமன் ஷெட்டியின் நடிப்புக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுத்தது.
காமெடிக்கு அப்பால், கதையின் ஓட்டத்தில் கலந்துகொள்ளும் இயல்பான நடிப்பு, அந்த படத்தில் அவரை மறக்க முடியாத ஒரு துணைக் கதாபாத்திரமாக மாற்றியது. இதனைத் தொடர்ந்து குத்து, வரலாறு, படிக்காதவன், சண்டக்கோழி, கேடி, தோரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் காமெடி நடிகராகவே திரையில் தோன்றினாலும், ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதைக்கு தேவையான வித்தியாசத்தை தனது நடிப்பால் சேர்த்தவர் சுமன் ஷெட்டி. குறிப்பாக, அவர் நடிக்கும் காமெடி காட்சிகள் செயற்கையாக இல்லாமல், கதையின் சூழ்நிலைக்குள் இயல்பாக கலந்து விடும் தன்மை கொண்டவை என்பதே அவரது பலம்.
தமிழில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் மொழி தான் மிகப்பெரிய சவாலாக இருந்ததாக சுமன் ஷெட்டி கூறுகிறார். இருந்தாலும், சக நடிகர்களின் ஆதரவு அந்த தடையை தாண்டுவதற்கு தனக்கு உதவியதாக அவர் பேசி இருக்கிறார்.
குறிப்பாக நடிகர் அஜித்குமார் குறித்து பேசும் போது, "அவர் எனக்கு அண்ணன் மாதிரி. வரலாறு படத்தின் போது அவர் என்னுடன் தெலுங்கிலேயே பேசுவார். அந்த அளவுக்கு எனக்கு கம்பர்ட்டை கொடுத்தார்" என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். அந்த ஆதரவு தான், தமிழில் தொடர்ந்து நிலைத்து நிற்கும் நம்பிக்கையை அவருக்கு கொடுத்ததாகவும் சொல்கிறார்.
சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 97 நாட்கள் வரை விளையாடியதும், சுமன் ஷெட்டியை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்தது. அந்த நிகழ்ச்சியில் அவரது வீடியோக்கள் தமிழிலும் வைரலாகி, பழைய ரசிகர்களையும், புதிய தலைமுறையையும் அவரிடம் மீண்டும் இணைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல தூண்டியது தனது மகன் தான் என்றும், குடும்ப ஆதரவு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனது வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பாக, 2019ஆம் ஆண்டு தந்தையை இழந்தது தான் இன்னும் மனதில் வலியாக இருப்பதாக சுமன் ஷெட்டி சொல்கிறார்.
"சினிமா தான் என் வாழ்க்கை. அதற்கு அப்பால் எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறும் அவர், இனி காமெடியைத் தாண்டி நெகட்டிவ் அல்லது வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.
மொத்தத்தில், சுமன் ஷெட்டி என்பது வெறும் காமெடி நடிகர் மட்டுமல்ல; மொழி எல்லைகளை தாண்டி, உழைப்பும், பொறுமையும் இருந்தால் எந்தத் துறையிலும் நிலைத்து நிற்க முடியும் என்பதை நிரூபித்த ஒரு பயணம். தமிழ் ரசிகர்கள் மனதில் அவர் பிடித்த அந்த "தனி இடம்" தான், அவரது மிகப்பெரிய வெற்றி என்று சொல்லலாம்.
-
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications