என்னது கேன்சரா? கதறி அழுத நடிகை திவ்யா ஸ்ரீதர்.. ஆறுதல் சொல்லும் சக நடிகர்கள்.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய கணவர் அர்னவ் பிக் பாஸ் தமிழ் எட்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர்களுடைய குடும்ப பிரச்சனை பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இப்போது திவ்யா ஸ்ரீதர் அழுததை பார்த்து பலர் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
சீரியலில் ஒன்றாக நடித்தபோது தான் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் பிக்பாஸ் பிரபலமான அர்னவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில வருடங்களாக திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் இந்து மற்றும் முஸ்லிம் முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணத்தை அறிவித்த சில மாதங்களில் இவர்களுடைய குடும்ப பிரச்சனை இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நடிகர் அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செல்லமா சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். அப்போது அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த அன்ஷிகா உடன் சேர்ந்து தன்னைக் கொடுமைப்படுத்துவதாக திவ்யா ஸ்ரீதர் வழக்கு தொடுத்து இருந்தார்.
அதுபோல ஏற்கனவே திவ்யா ஸ்ரீதருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருந்த நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அர்னவை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கும் இரண்டாவது ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு தன்னை குழந்தையை பார்க்க விடவில்லை என்று அர்னவ் பேட்டிகளில் பேசியிருந்தார்.
அதுபோல அர்னவ் பல பெண்களுடன் பேசிய ஆடியோ என்று திவ்யா ஸ்ரீதர் சில ஆடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் அர்னவ் கலந்து கொண்ட போது சில செய்திகளில் திவ்யா ஸ்ரீதர் அர்னவின் முன்னாள் மனைவி என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு திவ்யா ஸ்ரீதர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில் நான் அர்னவின் முன்னாள் மனைவி கிடையாது. எங்களுக்குள் இன்னும் விவாகரத்து ஆகவில்லை அதனால் என்னை அப்படி கூற வேண்டாம் என்றும் பேசி இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் செவ்வந்தி சீரியலில் தொடர்ச்சியாக திவ்யா ஸ்ரீதர் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சன் டிவியில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திவ்யா ஸ்ரீதர் கலந்து கொண்ட போது அவருக்கு ஒரு டாபிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு நடிகையின் அம்மாவிற்கு திடீரென்று புற்றுநோய் என்று டாக்டர் கூறுகிறார். அதை அவர் எப்படி தாங்கிக் கொள்கிறார்? அவருக்கு இருக்கும் சோகத்தை தாங்கிக்கொண்டு அவர் எப்படி சினிமாவில் நடிக்கிறார் என்பது அதில் நடித்துக் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்புப்படி திவ்யா ஸ்ரீதர் கதறி அழுது இருக்கிறார். திவ்யா ஸ்ரீதர் அழுததை பார்த்ததும் அந்த மேடையில் இருந்த பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இது நடிப்பு மட்டுமல்ல. இது திவ்யா ஸ்ரீதர் வாழ்க்கையில் நிஜத்தில் நடந்த நிகழ்வுதான்.
திவ்யா ஸ்ரீதர்க்கு உறுதுணையாக இருந்தது அவருடைய அம்மா தான். அவர் சில மாதங்களுக்கு முன்புதான் திடீரென்று உடல்நிலை குறைபாடு காரணமாக காலமாகி இருக்கிறார். தன்னுடைய உறவுகள் எல்லாமே தன்னை விட்டு பிரிந்தாலும் தைரியமாக தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வரும் திவ்யா ஸ்ரீதருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications