சன் டிவி பிரபல சீரியல் கதாநாயகிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. புகைப்படத்தோடு உருக்கமான வார்த்தை
சென்னை: சன் டிவியில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த சந்திரலேகா சீரியலில் கதாநாயகி ஸ்வேதாவிற்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வருடம் தான் ஸ்வேதாவிற்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் போது போட்டோ சூட் எடுத்து குவித்து வந்த நடிகை ஸ்வேதா குழந்தை பிறந்ததும் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் கைகளை புகைப்படமாக வெளியிட்டு கூடவே மகிழ்ச்சியான வார்த்தைகளையும் பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீரியலுக்கு பெயர் போன சன் டிவி சீரியலில் கடந்த எட்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சீரியலில் தொடர்ச்சியாக கதாநாயகி ஆகவே நடித்து வந்தவர்தான் ஸ்வேதா. இவரை அவருடைய நிஜப் பெயரில் சொன்னால் பலருக்கும் தெரியாது. ஆனால் சந்திரலேகா சீரியலில் சந்திரா என்று சொன்னால் பலருக்கும் தெரியும்.

2014ஆம் ஆண்டு ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ, ஜி.எஸ் சந்தியா பந்தேகர், தனுஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த சீரியலை சரிகமப நிறுவனம் தயாரித்து வந்தது. பொதுவாக சரிகமப நிறுவனம் என்றால் பல வருடங்களாக சீரியல் தொடர்ந்து வருவது பலருக்கும் தெரிந்ததுதான். அந்த வகையில் தான் இந்த சந்திரலேகா சீரியலும் நெடுந்தொடராக இருந்து வந்தது.
அதுபோல சந்திரலேகா சீரியலில் சந்திராவாக நடித்து வந்த ஸ்வேதா சென்னையில் உள்ள வி எம் கல்லூரியில் பொருளியல் படிப்பு படித்திருக்கிறாராம். ஆரம்பத்தில் காலேஜ் முடித்ததும் விளம்பர படங்களில் நடித்து வந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடித்த "ஆழ்வார்" திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக இவர் நடித்திருந்தார்.

முதல் திரைப்படத்தின் அஜித்துடன் நடித்த பிறகு அடுத்த திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வள்ளுவன் வாசுகி சத்யா என்ற திரைப்படத்தின் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து தான் இவர் சில திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்து வந்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தான் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியலின் மூலமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு சந்திரலேகா, நிலா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு உடனே கர்ப்பமான ஸ்வேதா அது குறித்து தனக்கு கஷ்டமாக இருப்பதாகவும் வெளியே சொல்லுவதற்கு வெட்கமாக இருந்தது என்றும் பேட்டியில் கூறியிருந்தார் .

இந்த நிலையில் தற்போது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஒரு குழந்தை ஆண் குழந்தையாம், ஒரு குழந்தை பெண் குழந்தையாம். இது குறித்து அதிகமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய குழந்தைகளின் கைகளை புகைப்படங்களாக வெளியிட்டு, ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதியம் நாங்கள் மால் மற்றும் சொப்னா என்ற இரண்டு முழு நிலவை கண்டோம். ஆனால் எங்களுடைய நிலவுகள் ஒரே மாதிரியானவை இல்லை.
இரண்டு நிலவும் நல்ல பிரகாசமாக இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் வாழ்த்துக்களாலும், ஆசிர்வாதங்களாலும் நட்சத்திரங்கள் போல பிரகாசிக்கிறார்கள். நாங்கள் இரண்டு சிறிய, ஒரே மாதிரி இல்லாத நிலவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய நலம் விரும்பிகளின் அன்பின் உலகிற்கு அந்த நிலவை வருக என்று வரவேற்கிறோம், என்று தங்களுடைய குழந்தைகள் குறித்து பகிர்ந்து இருக்கிறார். இதற்க்கு அதிகமான ரசிகர்கள் குழந்தைகளுக்கு ஆசீர்வாதங்களை வழங்கி வருகின்றனர்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications