சன் டிவி விலைக்கு வாங்கும் பிரபல ஓடிடி தளம்.. இனி அப்போ கொண்டாட்டம் தான்.. ஆறு மணிக்கு அப்டேட்
சென்னை: சீரியலுக்கு பெயர் போன சன் டிவி பல சேனல்களை தன் பக்கம் வைத்திருக்கும் நிலையில் தற்போது ஓடிடி தளத்தையும் வாங்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் ஏற்கனவே டாப் 10 சீரியல்களில் முதல் ஐந்து இடத்தை சன் டிவி சீரியல்கள் நிரந்தரமாக பிடித்து வைத்திருக்கும் நிலையில் இனி ஓடிடி தளமும் சன் டிவி வசம் மாறும் நிலையில் அதிலும் சன் டிவி சீரியல்கள் ஒளிபரப்பாகுமா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதே நேரத்தில் சன் டிவி எந்த பிரபல ஓடிடி தளத்தை வாங்க இருக்கிறது? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் தொலைக்காட்சி அறிமுகமான காலகட்டத்தில் இருந்து சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான். சன் டிவியில் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில சீரியல்கள் தொடங்கப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து புதியதாக பல சீரியல்கள் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான செய்தி சேனலுக்கு அந்த காலகட்டத்தில் பல பேர் காத்திருந்ததும் மறுக்க முடியாத உண்மை.
இப்போது எத்தனையோ செய்தி சேனல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் செய்திகளை பார்ப்பதற்காக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் டிவி முன்பு நிமிடத்தை எண்ணிக்கொண்டு காத்திருந்தவர்கள் ஏராளம். அது மட்டுமல்லாமல் சன் டிவிக்கு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து தான் புதியது புதியதாக பல சேனல்கள் தொடங்கப்பட்டு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் ஒளிபரப்பை வருகிறது.
என்னதான் போட்டிகள் இருந்தாலும் சீரியல்களின் அடிப்படையில் டாப் 10 சீரியல்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் சன் டிவி சீரியல்கள் இடம்பிடித்து விடுவது வழக்கம்தான். இந்த நிலையில் தான் சன் டிவி குடும்பத்தில் கேடிவி, ஆதித்யா டிவி, சன் மியூசிக், சன் நியூஸ் என பல தொலைக்காட்சிகள் இருக்கிறது. இந்த நிலையில் சன் டிவி நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்திருக்கிறது.
தொலைக்காட்சியில் இத்தனை நாட்களாக கவனத்தை செலுத்தி வந்த சன் டிவி இப்போது ஓடிடி தளத்தில் தன்னுடைய கவனத்தை செலுத்தி இருக்கிறது. பிரபல ஓடிடி தளத்தை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்க பேரம் நடந்து கொண்டிருக்கிறது. அது வேறு எந்த ஓடிடி தளமும் இல்லை. டிஸ்னி ஹாட்ஸ்டார் தான். தற்சமயம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தான் விஜய் டிவி நிகழ்ச்சிகள் எல்லாமே ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த தளத்தை சன் டிவி வாங்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு குறித்து அந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இந்த நிலையில் டிஸ்னி ஹாட் ஸ்டாரின் அதிகாரப்பூர்வமான பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கின்றனர். அதில் மாலை 6 மணிக்கு பெரிய அன்னவுன்ஸ்மென்ட்( Big Announcement) ஒன்று வரப்போகிறது என்று கூறியிருக்கின்றனர். அதோடு உங்கள் டைமை எல்லோரும் செட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கும் நிலையில் அப்போ இந்த தகவல்கள் உண்மையாகத்தான் இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications