எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ட்விஸ்ட் இதுதான்... இயக்குனர் வெளியிட்ட தகவல்...மாறப்போகும் கதைக்களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் இனி வரும் மாற்றங்கள் குறித்து அந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் சில தகவல்களை கூறி இருக்கிறார்.

ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த எபிசோடு விரைவில் வரப்போகுது என்று கூடுதல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

எப்போது இந்த சீரியல் கதாநாயகிகள் எதிர்நீச்சல் அடிப்பார்கள் என்ற ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு இனி விருந்து தான் போல.

இயக்குனர் தந்த பதில்

இயக்குனர் தந்த பதில்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறு விறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் ஆர்வத்தோடு இந்த சீரியலில் எதிர்பார்த்திருந்த நிகழ்வுகள் தற்போது நிகழத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியலில் இனிவரும் மாற்றங்கள் குறித்து இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார். அதில் எதிர்நீச்சல் சீரியலை பற்றி சுவாரசியமான பல தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த கேள்விகளை அந்த சீரியலில் நந்தினி ஆக நடிக்கும் ஹரிப்பிரியா கேட்டிருக்கிறார். அதற்கு திருச்செல்வனின் சிறப்பான பதில் பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

ரசிகர்களின் கேள்விகள்

ரசிகர்களின் கேள்விகள்

ரசிகர்கள் பலர் எதிர்நீசில் சீரியலில் படித்த பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்து அடிமைகளாக நடத்துவது சரியா?? சீரியலில் இதை காட்டுவதால் பல வீட்டிலும் இதே போல நடக்க வாய்ப்பு இருக்கிறது. படித்த பெண்கள் சமையல் செய்வதற்கு மட்டும்தான் என்ற எண்ணம் பார்க்கும் நபர்களுக்கும் வந்துவிடும் என்றெல்லாம் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அதற்கு விளக்கம் தெரிவித்து ஒரு சில நாட்களுக்கு முன்பு திருச்செல்வம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதுபோல தற்போது ரசிகர்களின் கேள்விகளை அந்த சீரியலில் நந்தினியாக நடிக்கும் ஹரிப்ரியா இயக்குனர் திருச்செல்வனிடம் கேட்டிருக்கிறார்.

மாறப்போகும் கதைக்களம்

மாறப்போகும் கதைக்களம்

ஹரிப்பிரியா எப்போது இந்த நான்கு பெண்களும் எதிர்நீச்சல் போடுவார்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள் அதற்கு உங்களுடைய பதில் என்ன? ? என்று கேட்டிருக்கிறார். அதற்கு திருச்செல்வம் இனி அந்த நான்கு பெண்களின் டேலண்ட் எல்லாம் வெளியே தெரிய போகிறது. இவங்களுக்குள்ளேயே ஒரு சந்தேகம் வரும் எனக்குள் இன்னும் என்னுடைய பழைய டேலண்ட் இருக்கிறதா என்று, ஏனென்றால் இவர்கள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. பத்து வருடம் 15 வருடங்கள் கடந்து விட்டது. அதனால் இனிமேல் அந்த மாதிரி இருப்போமா என்று அவர்களுக்குள்ளே ஒரு சந்தேகம் வரும்.அந்த ஒரு நேரத்தில் எடுக்கும் முடிவுகள் மூலமாக மீண்டும் தங்களுடைய திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று கூறும் விதமாகவும் இருக்கும் என கூறியிருக்கிறார்.

இதுதான் கதையாம்

இதுதான் கதையாம்

அதுமட்டுமல்லாமல் தங்களுக்குள் இருக்கும் டேலண்ட் எப்போதும் நம்மளை விட்டு போகாது நமக்குள்ளே தான் இருக்கு என்பதை புரிந்து கொண்டு எடுக்கும் முடிவுகள் இனி வரப் போகிறது என்று கூறி இருக்கிறார். திடீரென்று ஒருவரை கொண்டு வேறு ஒரு இடத்தில் விட்டால் அவர்களால் அங்கே உடனே செட்டாக முடியாது. கொஞ்சம் டைம் எடுக்கும் அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு தகுந்த போல தன்னுடைய திறமையால் அங்கே செட் ஆகி விடுவோம் அதுபோலத்தான் இனி தன்னுடைய திறமையை அந்த குணசேகரன் வீட்டிற்குள் நிரூபிக்க அந்த நான்கு பெண்களும் போராடுவார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வெளியேயும் வெற்றி பெறுவார்கள். அந்த மாதிரி சீன்கள் தான் இனி வரப்போகிறது என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+