எதிர்நீச்சல் சீரியல் "சாதனை”.. 5 மொழிகளில் ஒரே நேரத்தில்.. இதை கவனிச்சீங்களா..? இனி செம தான்..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியல் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெவ்வேறு பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் என்னென்ன மொழிகளில் எந்தெந்த பெயரில் என்பதை விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் முதல் முறையாக எந்த சீரியலும் செய்யாத பல சாதனைகளை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் குறுகிய காலகட்டத்திற்குள் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இதுவரைக்கும் இல்லாத வகையில் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பியில் இரண்டு வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்து இருந்தது.
அதுபோல ஞாயிற்று கிழமை எபிசோடும் அதிகமான டிஆர்பியை பெற்றிருந்ததை தொடர்ந்து இனி திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தில் அனைத்து நாட்களும் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டும்தான் எல்லா சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் முறையாக எதிர்நீச்சல் சீரியல்தான் வாரத்தில் அனைத்து நாட்களும் ஒளிபரப்பாக போகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் கோலங்கள் சீரியலுக்குப் பிறகு ஒரு சில சீரியல்களை இயக்கி வந்தார். ஆனால் அது அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் சில வருடங்கள் பொறுமையாக காத்திருந்து இப்போது இயக்கும் எதிர்நீச்சல் சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. கிராமத்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு பல பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கின்றனர்.
புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள்கள் மூலம் பாரம்பரிய என்ற பெயரில் குடும்பத்தினர் பின்பற்றும் பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கும் விதமாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இதனால் அதிக வரவேற்பு பெற்று இந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எதிர்நீச்சல் சீரியல் தமிழில் 2022 பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
அதே நேரத்தில் தற்போது தெலுங்கில் (உப்பென்னா), மலையாளத்தில் (கனல் பூவு), கன்னடத்தில் (ஜனனி), பெங்காலியில் (அலோர் தீக்கனா), மராத்தியில் (சபாஷ் சன்னை) போன்ற மொழிகளில் பல்வேறு தலைப்புகளின் படி எதிர்நீச்சல் கதையை தழுவி சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த சீரியல்கள் சன் குடும்பத்தை சேர்ந்த பிற மொழி சேனல்களில் ஒளிபரப்பாகின்றது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications