எத்தனை நாளைக்குத்தான் அரைத்த மாவையே அரைப்பது...கண்ணான கண்ணே சீரியலை கடைந்து எடுக்கும் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்தான் தற்போது நெட்டிசன்கள் கைவசத்தில் நன்றாக மாட்டி இருக்கிறது.
ஏற்கனவே பல கதையை மொத்தமாக கண்ணான கண்ணே சீரியலில் காட்டி வருகிறார்கள் என்று ரசிகர்கள் வெகுண்டெழுந்து வருகின்றனர்.

பிடிக்காத மூத்த மகள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் டிஆர்பியில் முன்னனியில் உள்ளது. இந்த சீரியலில் கதை விறுவிறுப்பாக உள்ளது என்று ரசிகர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். இதில் தந்தை கேரக்டரில் பிரித்திவிராஜ் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருடைய முதல் மனைவியின் குழந்தை மீராவை இவருக்கு பிடிக்காத காரணத்தால் அவரை வீட்டைவிட்டு வெளியேற்ற நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருமுறையும் மீராவை விளக்கி வைத்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனக்கு பிடித்த இரண்டாவது மனைவியின் மகள் ப்ரீத்தி திருமணத்தில் தனக்கு பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்று வெகு சிறப்பாக ப்ரீத்தி ஆசையை நிறைவேற்ற திருமண ஏற்பாடுகளை சேர்ந்து இருக்கிறார்.

மீராவின் மீது கோபத்தில் பிரீத்தி
மீரா மற்றும் ப்ரீத்தி இருவரும் சகோதரியாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருந்து வருகின்றனர். ஏற்கனவே மீராவின் திருமணத்திற்கு ப்ரீத்தி பல தடைகளைத் தகர்த்து மீராவின் திருமணத்தை முடித்து வைத்திருந்தார். ஆனால் தற்போது பிரீத்தி காதலிக்கும் சந்தோஷ், கௌதம் குடும்பத்தை பழி வாங்குவதற்காக வந்திருப்பதை மீரா அறிந்து கொண்டு திருமணத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் பிரீத்தியும் மீராவின் மீது கோபத்தில் இருக்கிறார்.

தொடரும் கண்ணீர் காட்சிகள்
பிரீத்தி மற்றும் சந்தோஷ் திருமணம் நடந்து முடிந்த பிறகுதான் சந்தோஷ் கௌதமி பிசினஸ் எதிரியான மேனகா வின் உறவினர் என்று, கௌதமை பழிவாங்குவதற்காக தான் சந்தோஷ் இந்த மாதிரி நடந்து கொண்டார் என்று தெரிந்து கொண்டுள்ளார். பழிவாங்கும் படத்தை போன்று இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் ஆனால் திருமணம் முடிந்ததும் பிரீத்தி எங்கள் வீட்டில் வாழ வேண்டும் எனறால் அதற்கு கௌதம் சொத்துக்களை எல்லாம் சந்தோஷ் பெயரில் எழுதி தரவேண்டும் என்று மேனகா கூறியதால் குடும்பமே கண்ணீரோடு சொத்துக்களை எழுதி கொடுத்திருக்கிறது.

நெட்டிசன்கள் கலாய்ப்பு
இப்படி ஒரு பழிவாங்கும் படலத்தை பல திரைப்படங்களில் ஏற்கனவே ரசிகர்கள் பார்த்து இருப்பதால் இந்த சீரியலிலும் அரைச்ச மாவையே அரைக்காதீர்கள் என்று பலர் அட்வைஸ் செய்து வருகின்றனர். பலரையும் கவர்ந்த சீரியலில் இப்படி ஒரு கதையா?? இதை பல திரைப்படங்களில் பார்த்த கதை தான். வேற கிடைக்கவில்லையா என்று பல்வேறு விதமாக மீம்ஸ்களில் கலாய்த்து வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications