எனக்கு புரியலை.. எப்புட்றா? கயல் தங்கச்சிக்கு இது எத்தனையாவது மாசம்? டிவி சீரியல் பரிதாபங்கள்
சென்னை: கயல் டிவி சீரியலில் 15 மாதங்களுக்கு மேல் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார். போன ஆண்டு தீபாவளிக்கு தலை தீபாவளி கொண்டாடும் போதே 5 மாத கர்ப்பமாக இருந்த பெண் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வந்த பிறகும் குழந்தை பிறக்காமல் உள்ளதால் சீரியல் ரசிகர்கள் பலரும் கயல் தங்கச்சிக்கு இது எத்தனையாவது மாசம் என்று கேட்டிருக்கின்றனர்.
டிவி சீரியல் என்பது தினசரி ஒளிபரப்பாகும் சம்பவங்களை வைத்துதான் எபிசோடுகள் எடுக்கப்படுகின்றன. டிவி சீரியல்கள் ஆண்டுக்கணக்கில் ஒளிபரப்பாகும். சன்டிவி சீரியல்கள் பல 2000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகியுள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் கயல் டிவி சீரியல் மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் போல எடுக்கப்பட்ட கதைதான் என்றாலும் சுவாரஸ்யமாக போவதால் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது.

குடிகார அண்ணன் குடும்பம்.. தங்கை, தம்பிகளின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நர்ஸ் கயல் என கதை போகிறது. இதுநாள் வரைக்கும் காதலை சொல்லாமல் இருந்த கயல் எழிலிடம் தனது காதலை சொன்னதோடு 4 ஆண்டுகள் காத்திருக்க சொல்லி இருக்கிறாள்.
இந்த சீரியலில் வில்லன், வில்லி கயலின் பெரியம்மா, பெரியப்பாதான். கயல் குடும்பம் ஒழிந்து போக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். கயலின் தங்கை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விட போராடி தங்கையின் காதலனுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். கடந்த ஆண்டு தங்கையும் தங்கையின் கணவரும் தலை தீபாவளி கொண்டாடினர். அப்போதே கயலின் தங்கைக்கு 5 மாதம்.
இதே அடுத்த தீபாவளி கூட வந்து விட்டது. கயல் தனது பெரியப்பா வீட்டிற்கு போய் தலை தீபாவளி பரிசு கொடுத்து வாழ்த்துகிறாள். அதே நேரத்தில் கயலின் தங்கையோ கணவனுடன் வாழாமல் அம்மா வீட்டிற்கே வந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறாள். கயல் தங்கையின் கர்ப்பத்தை கணக்கு போட்டால் 15 மாதங்களுக்கு மேல் ஆகிறது. எப்புட்றா?.. எத்தனையாவது மாசம் எப்போதான் குழந்தை பிறக்கும். டிவி சீரியலாக இருந்தாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications