நடிகை வாணி போஜனை தொடர்ந்து சன் டிவி நடிகைக்கு கிடைத்த கதாநாயகி வாய்ப்பு.. எந்த படத்தில் தெரியுமா?
சென்னை: நடிகை வாணி போஜன் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரை கதாநாயகியாக மாறி இருப்பது போலவே சன் டிவி சீரியல் நடிகை ஒருவருக்கு சினிமா கதாநாயகி வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதுவும் காமெடி நடிகர் கவுண்டமணி பல வருடம் கழித்து நடிக்கும் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக சீரியல் நடிகை நடிக்கிறாராம்.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஹேமா பிந்து தான்.
பொதுவாக சில நடிகர்கள் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து விட்டு பிறகு அங்கு வாய்ப்புகள் குறைந்த பிறகு சீரியலை நோக்கி படையெடுத்து வருவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளி திரையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பல நடிகைகளை சொல்லலாம். குறிப்பாக நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் என பல நடிகைகள் இருக்கின்றனர்.
அந்த வரிசையில் தற்போது சன் டிவியில் இலக்கியா சீரியலில் நடிக்கும் நடிகை ஹேமா பிந்துவும் அடி எடுத்து வைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த இதயத்தை திருடாதே என்று சீரியல் மூலமாக பலருடைய இதயத்தை திருடியவர் தான். இந்த சீரியலில் இவருடைய துறுதுறுப்பான நடிப்பு மற்றும் கண் அசைவு பலருடைய மனதையும் கவர்ந்தது.

அதே நேரத்தில் அந்த சீரியல் முடிவடைந்த சில நாட்களுக்குள் சன் டிவியில் இலக்கியா சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இலக்கியா சீரியலில் அதிகமான ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அதுபோல இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத வயதில் இவர் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறு வயது குழந்தையாக நடித்திருக்கிறார்.

ஆமாம், படையப்பா திரைப்படத்தில் இடம்பெற்ற "எம்பேரு படையப்பா" என்ற பாடலில் "மீசை வச்ச குழந்தையப்பா" என்று வரும் வரிகளில் இவருடைய புகைப்படங்கள்தான் இடம் பெற்று இருந்தது. அதுபோல சில ஹிட் திரைப்படங்களிலும் இவர் குழந்தையாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் கவுண்டமணி பல வருடம் கழித்து ஹீரோவாக நடிக்கும் "ஒத்த ஓட்டு முத்தையா" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

தற்போது இந்த திரைப்படத்திற்கான பட பூஜையில் ஹேமா கலந்து கொண்ட புகைப்படங்களும், அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவுகளும் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதோடு அந்த திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகி என்று தெரிய வந்திருக்கிறது. இதற்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக ஹேமா பிந்துவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications